திங்கள், 25 நவம்பர், 2019

பள்ளிக்கல்வி_ மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க அறிவுரை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை



மழை காலத்தில் மின்கம்பிகள் அருகில் செல்லக்கூடாது ~ மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை …


இளம்பருவத்தில் சேமிப்பு பழக்கம் அவசியம் ~ கலெக்டர் வேண்டுகோள்…


26.11.19 ஆம் நாளைய பள்ளிக் கல்வித்துறைஆணையாளர் கூட்டம் ஒத்திவைப்பு.

26.11.19 ஆம் நாளைய ஆணையாளர் கூட்டம் ஒத்திவைப்பு:

Sir/ Madam, Due to
Administrative reasons association meeting scheduled on 26.11.2019 has been postponed.
Director ~Dse

அனைத்து சங்கங்களுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் அலுவலர்களின் தகவலின்படி கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள புதிய மாநிலப் பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர் வாழ்த்து

அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தேர்தல் சிதம்பரத்தில் 24.11.19(ஞாயிறு)அன்று  நடைபெற்றுது.
இத்தேர்தலில்  மாநிலச்செயலாளராக  திரு.முருகசெல்வராசன் ,
மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளராக திரு.வெ.பாலமுரளி ,
மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக திரு.பெ.பழனிசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சார்ந்த
மேற்கண்டோரை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ள மாநிலப்பொதுக் குழுவினை   நாமக்கல் மாவட்ட அமைப்பு பெரிதும் வணங்குகிறது;
நன்றி பாராட்டுகிறது.
💐🙏🙏💐
முருகசெல்வராசன்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் - ஆணை..


9 முதல் பிளஸ்2 வரை செமஸ்டர் முறை...


மண்ணில் தோன்றிய மகத்துவம், அண்ணா என்னும் அதிசயம்...


1.அண்ணாவின் வாக்கியங்களில் பிடித்தது எது ? 
1967 தேர்தலில் தேர்தல் வரலாற்றின் சாதனையாக பிரிவினை கோரிய ஒரு இயக்கம் ஆட்சியை கைப்பற்றிய பின்பு அவர் சொன்னது, "its not because of bullet, its because of ballot".. இந்த வரியின் மீதான அவரது நம்பிக்கை தான் ரத்தம் சிந்தாமல் தமிழர்களை பெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்த வைத்தது
.
2. அண்ணாவின் மாஸ் எத்தகையது..?

போராட்டங்களின் விளைவாக மிகக்கடுமையாக அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சூழலில் இந்தோ-சீனா யுத்தம் வருகிறது.. அந்த யுத்தகாலத்தில் தான் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டு இந்தியத்திற்கு துணையாக நிற்கிறார் அண்ணா.. எல்லையிலே ராணுவ வீரர்களுக்கு இரத்தம் தேவையாதலால் இரத்தக்கொடை அளிக்கச்சொல்லி தம்பிகளுக்கு கடிதம் எழுதுகிறார், அந்த கடிதத்தில் "தம்பிகளே உங்களிடம் இரத்தம் கேட்க காரணம் உங்கள் இரத்தத்தின் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை, ஊரை அடித்து உலையில் போடுபவர்களின் இரத்தத்தை (காங். காரர்களை குறிப்பிடுகிறார்) ஏற்றினால் கிடக்கின்ற துப்பாக்கியை எடுத்து கொண்டு போய் கள்ள மார்க்கெட்டில் விற்றுவிடுவார்கள்" என்று எழுதுகிறார்.. இது அண்ணாவின் எழுத்தின் மாஸ்..
அடுத்த நாள் போர் நிதி கேட்டு எழுதுகிறார்.. நம்ப மாட்டீர்கள், பல ஆயிரம் பேர் தங்களால் இயன்றதையெல்லாம் எல்லாம் கொண்டு வந்து தந்தனர் அது நூற்றுக்கணக்கான மாங்கல்யமும் இருந்தது என்ற செய்தி தான் அண்ணாவின் ஆளுமைக்கான மாஸ்
.
3. நவீன தமிழகத்தை கட்டமைத்ததில் அண்ணாவின் பங்கு என்ன..?

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மூலம் uniform distributive & uniform access என்ற முறை தான் இந்த தத்துவம் இங்கே நடைமுறைப்படுத்த காரணம் அண்ணா என்ற அந்த ஒற்றை மனிதனின் பொருளாதார பார்வை தான்

ஒருங்கிணைந்த வளர்ச்சி (inclusive development ) பற்றி இந்தியா பேச தொடங்கியது 2007 வந்த 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் தான் ஆனால் 1960 homeland magazine ல் எழுதினார் அண்ணா.. குறைந்தது ஆயிரம் கோடிகளாவது ஒதுக்குங்கள் என்று தலைப்பிடுகிறார்,
ஆளும் கட்சி பெயர் பெற்றுவிடும் என்ற தயக்கம் கூட இல்லாமல் அப்படி கோரிக்கை வைத்தவர் அண்ணா.. அவரது மொழிக்கொள்கையும், சுயநிர்ணய உணர்வும் ஆழமான பொருளாதார அறிவும் தான் பீகார், உ.பி.க்கு இனையான பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ்நாட்டை third largest economic power in india என்ற நிலைக்கு உயர்த்தியது
.
4.அண்ணா என்றால் உங்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது..?

1949ல் பெரியாரை விட்டு பிரிந்து திமுக வை தொடங்குகிறார், 1967 ல் ஆட்சியை பிடிக்கிறார்.. இடைப்பட்ட 18 ஆண்டு காலத்தில் அவர்கள் இருவரின் உறவும் உரசலோடு தான் பயணிக்கிறது.. பெரியார் இவரை கடுமையாக விமர்சிக்கிறபோதும் தேவையான இடங்களையன்றி மற்றவற்றுக்கு பதில் சொல்லாமல் கடந்து போகிறார்.. ஆட்சியை பிடித்தவுடன் பெரியாரை தேடி திருச்சிக்கு ஓடி வந்து வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறார்.. ஆக கருத்து முரண்பாட்டால் தந்தையை விட்டு வெளியேறிய மகனை, தந்தை திட்டிக்கொண்டே இருக்கிறார்.. தமயனும் பதிலளித்துக்கொண்டே வருகிறார்.. இந்த சூழலில் வெற்றி பெற்றவுடன் நாமெல்லாம் என்ன செய்வோம், "இந்த பாருய்யா நான் ஜெயிச்சுட்டன் என்று காலரை தூக்கிவிட்டு சென்றிருப்போம்.. ஆனால் அவரோ தந்தைக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறார்"
அண்ணா என்றவுடன் இந்த பண்பு தான் எனக்கு நினைவுக்கு வரும்.. இந்த பண்பு தான் இன்று எல்லோருக்கும் தேவை, அரசியல்வாதியாக அல்ல மனிதனாகவே எல்லோருக்கும் இது தேவை, ஒரு தந்தை மகன் உறவில் தொடங்கி.. ஆசிரியர் மாணவர் உறவு வரை அத்தனைக்கும் தேவைப்படும் பண்பு இது
.
5.அண்ணா - இன்றைய தேவை.. ?

அண்ணாவை மக்கள் படிக்க வேண்டியதை விட, அரசியலுக்கு வர நினைக்கிற அல்லது அரசியலில் இருக்கிற அரசியல்வாதிகள் தான் அவசியம் படிக்க வேண்டும்.. தன்னை மீறி ஒருவன் வந்துவிடுவானோ என்கிற சின்ன பதட்டம் கூட அவரிடம் இல்லை அதனால் தான் அவரது தம்பிகள் அத்தனை பேரையும் தன் நிலையிலேயே வைத்துப்பார்க்க அவரால் முடிந்தது.. தனது தம்பியை பார்த்து, "தம்பி வா தலைமை ஏற்க வா"  என்று அவரை சொல்லவைத்தது பதவி ஆசை ஒரு துளி கூட இல்லாத அவரது மனநிலை தான்...
ஒரு கட்சியை எப்படி கட்டமைக்க வேண்டும் என்கிற party constructing engineering ஐ நீங்கள் அண்ணாவிடம் தான் கற்க வேண்டும்/ கற்க முடியும்..
தனக்கு தெரிந்த அத்தனையையும் தனது தம்பிகளிடம் அவரை சொல்லவைத்தது அவரின் தேடல் மீதான அவரது தன்னம்பிக்கை தான்.. இன்னும் சொன்னால் தனது அறிவின் மீதான கர்வம் எப்போதும் இல்லை என்பதற்கு, அவர் தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களே சாட்சி.. கிரேக்க வரலாற்றை சொன்னாலும், கிரகங்களின் அறிவியலை சொன்னாலும் இப்படித்தான் முடிக்கிறார்.. "உனக்கு தெரியாததா தம்பி" என்று..
ஒரு கட்சியின் உயிர்ப்பு அதன் இரண்டாம் கட்ட தலைவர்களின் எண்ணிக்கையில் இருக்கிறது.. அண்ணா வளர்த்த இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இணையாக இன்னொரு இயக்கத்தில் நம்மால் ஆட்களை தேடி விட முடியாது.. ஏறக்குறைய அவர்கள் எல்லோரிடமும் அண்ணாவை போல செயல்படும் ஆற்றல் இருந்தது, தேவையான நேரத்தில் அப்படி செயல்படவும் செய்தார்கள்.. மத்திய அமைச்சர்களுக்கு கருப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிக்கிறார் அண்ணா, ஏறக்குறைய எல்லா முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்ட சூழலில் போராட்டம் ஒடுக்கப்பட்டதாக காவல்துறை நினைத்த நேரத்தில்.. விமான நிலையத்தில் கருப்புகொடி காட்டப்பட்டது.. காட்டியது நாகூர் அனிபா தலைமையிலான குழு.. ஒரு கட்சி இப்படித்தான் இருக்க வேண்டும், அதன் இரண்டாம் நிலை தலைவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு கட்சி பயணிக்கவே கூடாது.. அப்படி பயணித்தால் அது கூடிய விரைவில் தனது இறுதி பயணத்தை தொடங்கும் என்பது தான் வரலாறு.. இதை சரியாய் செயல்படுத்தியவர் அண்ணா.. அது தான் இன்றைய தேவை
.
6.அண்ணா இன்றைய இந்தியாவிற்கு எப்படி தேவைப்படுகிறார் ?

இந்தியா என்கிற ஒன்றை மிகச்சரியாக வரையறுத்தவர் அண்ணா.. இது பல்வேறு நிலபரப்புகளின், தேசிய இனங்களின் "கூட்டமைப்பு" என்பதை அவர் தான் உரக்க சொல்லி நாடாளுமன்றத்தை நடுங்க வைத்தார்.. இந்தியாவை ஒரு federal structure ஆக பார்க்கும் மரபு பரவலானால் அதன் ஆதிவேர் அண்ணாவாகத்தான் இருப்பார்...
மதச்சார்பிண்மை இந்தியாவின் உயிர்நாடிகளில் ஒன்று, இந்திய அரசே தனது அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் (in preamble) மதச்சார்பற்ற (secular) என்ற வார்த்தையை நெருக்கடி நிலை காலத்தில் தான் சேர்த்தது (1976) ஆனால் அதற்கு முன்பே அரசு என்பது மதச்சார்பற்றது அதன் அலுவலகங்களில் மத அடையாளத்தை குறிக்கும் சின்னங்கள் இடம்பெறக்கூடாது என்று அரசாணை போட்டவர் அண்ணா (29/4/1968) ஏறக்குறைய இந்திய அரசிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்தது தமிழ்நாடு அரசு.. ஆகவே இன்றைய சூழலில் இந்தியா இந்தியாவாக இருக்க அண்ணா தேவை
.
7.அண்ணாவிடம் நீங்கள் வியந்தது..?

அவரது முடிவெடுக்கும் திறன்.. தனக்கு தன் கட்சிக்கு என்று வரும்போது அவரது முடிவுகள் ஒரு வகையாகவும், மக்களுக்கு நாட்டுக்கு என வரும்போது ஒரு வகையாகவும் இருந்துள்ளது.. முதலில் நாட்டுக்கு, எப்போதெல்லாம் தான் எடுத்த முடிவின் இலக்கை அடைவதற்கு தேர்ந்தெடுத்த பாதையில் மக்களுக்கு துன்பம் வரும் என்று நினைக்கிறாரோ அப்போதெல்லாம் அந்த பாதையை விட்டு அவர் பின்வாங்க அல்லது மாற்றுப்பாதையை தேர்ந்தெடுக்க தயங்கியதே இல்லை, அப்படி பாதையை மாற்றினாலும் இலக்கில் உறுதியாக இருந்தார்.. finding alternative path with maximum similarity என்கிற அடிப்படையை அவர் கையாண்டார், திராவிட நாடு கோரிக்கையை வைத்து திமுக வளர்ந்த சம காலத்தில் அகாலி தளம் ஆசாத் பஞ்சாப் (தனி நாடு) கோரிக்கையை முன்வைத்து வளர்கிறது, அதன் பாதையில் உள்ள ஆபத்தை உணர்ந்து இரண்டு கட்சிகளுமே அதை கைவிடுகின்றன.. இதுவரை சாதரணமானது தான் ஆனால் அந்த கோரிக்கைக்கு மாற்றாக அவர்கள் இருவரும் எதை தேர்ந்தெடுத்தனர் என்பதில் தான் அண்ணா மிளிர்கிறார், அகாலிதளம் ஆசாத் பஞ்சாப் கோரிக்கையை கைவிட்டுவிட்டு "பஞ்சாபி சுபா" தனி பஞ்சாப் மாநிலம் கோரிக்கையை எடுக்கிறது ஆக சுயநிர்ணயம் பேசியதிலிருந்து.. சுருங்கிவிட்டது அகாலிதளம் ஆனால் அண்ணாவோ "மாநில சுயாட்சி" என்ற நெருப்பை கையிலெடுக்கிறார், தனிநாடு கேட்டதும் சுயநிர்ணய உரிமைக்காக தான்.. தற்போது மாநில சுயாட்சி கேட்பதும் அதற்காக தான் ஆக இலக்கில் மாற்றமில்லை, பாதையில் மட்டுமே மாற்றம்

அடுத்ததாக இந்தி திணிப்பு எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலகட்டம், ஜனவரி 26ல் தொடங்கிய போராட்டம் பிப்ரவரி 6 வாக்கில் உச்சபட்ச கொதிநிலையை அடைகிறது.. இது மாணவர் நலனுக்கு நல்லதில்லை என்பதை உணர்ந்தவராய், பிப்ரவரி 6 மாலை மாணவர் தலைவர்களை அழைத்து பேசுகிறார், போராட்டத்தை தீவிர படுத்த சொல்லுவார் என்று நாடே எதிர்பார்த்த நிலையில், நிலைமை கையை மீறி போவதால் இப்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்று சொல்கிறார்.. (இப்படி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று எச்சரிக்கையாய் முடிவுகளை எடுப்பார்) ஆனால் மாணவர்கள் கேட்கவில்லை, எந்த தலைவனும் அந்த இடத்தில் கோவப்பட்டிருப்பர் ஆனால் அண்ணா மறுநாள் காலை மாணவர்களோடு களம் புகுந்தார்.. அது தான் அவர் ஜனநாயகத்தின் மீது வைத்த அளப்பறிய நம்பிக்கை, மதிப்பு எல்லாம்

ஒருபக்கம் இப்படி என்றால், தனக்கு தன் கட்சிக்கு என்றால் முடிவுகள் வேறு வகையில் இருக்கும்.. புத்தகத்தை தடையை மீறி வெளியிட்ட வழக்கில் அபராதம் போட்டால் கட்ட மாட்டேன் என்று பேசி சிறைக்கு போவது, பிரிவிணை கோருவது, பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதானாலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என்று அவர் கட்சிக்காகவும் தனக்காவும் எடுத்த முடிவுகள் அத்தனையும் நெருப்பு... ஒற்றை வரியில் சொன்னால், "கட்சிக்கு அவர் எடுத்த பாதை சிங்கப்பாதை, மக்களுக்கு அவர் காட்டிய பாதை பூப்பாதை".
.
8.அண்ணாவிடம் இளைஞர்கள் கற்க வேண்டியது..?

அரசியலை.. ஒரு கிளர்ச்சியை அரசியல் மயப்படுத்துவதில் தான் அந்த கிளர்ச்சியின் வெற்றி உள்ளது, சல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி தேர்தல் காலத்தில் அது எப்படி எதிரொலிக்கிறது என்பதில் இருக்கிறது, அதாவது கிளர்ச்சியில் தொடங்கி தேர்தல் வரை அந்த கிளர்ச்சியின் தொடர்ச்சி எப்படி இருக்கிறது என்பதில் இருக்கிறது.. ஆனால் இங்கே நடந்த சல்லிக்கட்டு போராட்டம் அரசியல் அரங்கில் ஒப்புக்குக்கூட எதிரொலிக்காது என்பது என் எண்ணம், இந்த இடத்தில் தான் இந்தி எதிர்ப்பு போரை ஜனநாயக மயப்படுத்தி தேர்தல் புரட்சியை நடத்திகாட்டிய அண்ணாவின் அரசியலை இளைஞர்கள் படிக்க வேண்டும்

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் நாற்பதாண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம், ஐம்பதாண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம், 70களில் 80களில் தமிழகம் சாதித்ததை 2018ல் பட்ஜெட்டில் கனவுத்திட்டங்களாக இந்திய ஒன்றியம் அறிவிக்கிறது என்று நாம் அடையும் அத்தனை பெருமைக்கும் அடிப்படை அவரே, தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தின் வளர்ச்சிக்கு பின்னாலும் அந்த மனிதரின் பெருங்கனவும், பேரறிவும் இருப்பதை எவராலும் மறுத்துவிட இயலாது, அந்த பேராற்றல் அடங்கிப்போய் 50 ஆண்டுகள் ஓடிவிட்டன, அன்றைக்கு அவர் பேசியதன் அரிச்சுவடியை இந்தியாவின் பல குரல்கள் இன்று பேச தொடங்கியுள்ளது.. உண்மையான அண்ணாயிசம் இந்தியாவெங்கும் ஒலித்தே தீரும்.
//முகநூல்பதிவு ஒன்றிலிருந்து...//
நவம்பர் 25,
 வரலாற்றில் இன்று.

 ஆல்பிரட் நோபல் டைனமைட் தயாரிப்புக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று(1867).


'மரணத்தின் துாதர் ஆல்பிரட் நோபல் மரணம்' என ஒரு பத்திரிகையில் தவறாக வெளிவந்த செய்தியால், தன் பெயரை உலகம் எவ்வாறு பார்க்க போகிறது என்பதை உணர்ந்து கொண்டார் அவர்.


1833ஆம் ஆண்டு அக்டோபர் 21இல், சுவீடன் நாட்டில், சிட்டாக்கோம் நகரில் பிறந்தார்.

வேதியியல் படிப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தவர், வெடிப்பொருட்கள் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

தன் வாழ்நாளில், 90 ஆயுத தொழிற்சாலைகளை நிறுவினார்!

ஒருநாள், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில், அவரது சகோதரன் உட்பட, ஐந்து பேர் இறந்தனர். இதன்பின், தலைமறைவாக இருந்தபடியே, 'டைனமைட்' என்ற வெடிப்பொருளைக் கண்டுபிடித்தார்.

 'டைனமிஸ்' என்ற கிரேக்க சொல்லுக்கு, சக்தி என்று பொருள்!இந்த டைனமைட் தான் அவருக்கு, மரணத்தின் துாதர் என்ற பட்டம் பெற்றுத் தந்தது!

இந்த பட்டம் தான், உலகளவில் அமைதி, வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கு, நோபல் பரிசு வழங்க காரணமாக இருந்தது.
நவம்பர் 25,
வரலாற்றில் இன்று.


கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவு தினம் இன்று(2016).

இலவசக் கட்டாயக் கல்வி, இலவச மருத்துவ வசதி என கியூபா நிகழ்த்திய சாதனைகளுக்கு மூலக் காரணம் பிடல் காஸ்ட்ரோ ஆவார்.
 கியூபாவின் மீது திணிக்கப்பட்ட மிக மோசமான அரசியல், பொருளாதார தடைகளைத் தாண்டியும் அந்நாட்டை திறம்பட ஆட்சி செய்தவர்.

தன் நாட்டு வளங்களை கைப்பற்ற முயன்ற அமெரிக்காவுக்கு தன் வாழ்நாள் முழுதும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
நவம்பர் 25,
வரலாற்றில் இன்று.


கார்ல் பென்ஸ் பிறந்த தினம் இன்று.


தற்போது உலகில் புகழ்பெற்ற நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றான பென்ஸ் காரை உருவாக்கிய கார்ல் பென்ஸ், ஜெர்மன் நாட்டின் பாடன் எனும் ஊரில் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று  பிறந்தார்.

 இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணி செய்த பின்பு, மனிதனின் துணையின்றி  இயங்கும் வாகனத்தை உருவாக்க எண்ணினார். தனது மனைவி பெர்தா பென்சின் உதவியுடன் இரண்டு ஸ்ட்ரோக் என்ஜினை உருவாக்கி, 1879ஆம் ஆண்டு காப்புரிமை பெற்றார்.

 மேலும் கார்புரேட்டர், கிளட்ச், கியர் சிஃப்ட், ரேடியேடர் போன்றவற்றையும் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார்.

 1885ஆம் ஆண்டு பெட்ரோலில் இயங்கும் நான்கு ஸ்ட்ரோக் என்ஜினை உருவாக்கினார்.

மூன்று சக்கர வாகனமான இதற்கு பென்ஸ் வேகன் என்று பெயரிட்டார். இவர் உருவாக்கிய பயணிகள் வாகனத்தின் இன்றைய மேம்பட்ட வடிவமாக அதி நவீன வசதிகள் கொண்ட பென்ஸ் கார்களை இன்று சாலையில் காண முடிகிறது.
நவம்பர் 25,
வரலாற்றில் இன்று.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்
படுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்
படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாக பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.



டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.

 பாதிக்கப்படும் பெண்களுக்கு
எதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

 1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூர்வதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தினம் தெரிவுசெய்யப்பட்டது.

அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி முடிவடையும்.