வெள்ளி, 6 ஏப்ரல், 2018

மாதிரி பள்ளிகளில் 1, 2ம் வகுப்புகளுக்கு கணினியில் தேர்வு...


அரசுப்பள்ளி முதல், 2ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கையடக்க கணினியில் தேர்வு நடத்தப்படவுள்ளது.

தமிழக அரசின் புதிய கல்வித்திட்டத்தின் கீழ், ஜனவரி முதல் 13 மாவட்டங்களை சேர்ந்த 173 அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கையடக்க கணினியை பயன்படுத்தி கற்பித்தல், தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய முறையில் பயின்ற மாணவர்களுக்கு ஏப்.,9, 10, 11, 12 தேதிகளில் ஆண்டுத் தேர்வு நடக்கிறது.இதுவரை, 40 மதிப்பெண்கள் கல்வி இணை செயல்பாடுகளுக்கும், 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுத்து தேர்வு நடத்தப்படும். 20 மதிப்பெண்களுக்கு கையடக்க கணினி வழியாக மாணவர்கள் விடையளிக்க வேண்டும். பதில்கள் இணையதள உதவியுடன் திருத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கும் இதுபோல், புதிய முறையில் தேர்வு நடத்த உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

DEE PROCEEDINGS- உதவி பெறும் பள்ளிகள்- RTE-அரசாணை 231- ஆசிரியர்~மாணவர் விகிதாச்சாரம் சார்பு…

PASSPORT சார்ந்த படிவம்...

Recommendations of the Official Committee 2017 - Revision of Pension, Family Pension and Retirement Benefits-Pensioners- Reg...

கல்வித்துறையில் உருவானது SSAS திட்டம்... [SSA+RMSA+DIET= SSAS] (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா)

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்(RMSA) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவை ஒருங்கிணைக்கப்பட்டு, SSAS (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை SSA, 9-10ம் வகுப்பில் RMSA திட்டம் செயல்படுகின்றன.
இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. 

இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 

முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.

Grade D மாணவர்களுக்கு " 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம்"- Proceeding...

எட்டாம் வகுப்பிற்கு மட்டும் திருத்திய மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை...