ஞாயிறு, 10 மார்ச், 2019

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் பயிற்சியை அந்தந்த வட்டார வளமையங்களிலேயே நடத்திட வேண்டுகோள்...

அன்பானவர்களே! வணக்கம்.

நாமக்கல் மாவட்டத்தில்
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் பயிற்சி வரும் 12.03.19 முதல் 19.03.19 வரை இரண்டு் இரண்டு நாள்கள் கொண்டதாக  தொகுதி தொகுதியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது மார்ச்சு மாதம். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி், மார்ச்சு மாதங்களில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய நிதியை நிதியாண்டின் இறுதிக்குள்ளாவது செலவழித்தாக வேண்டிய கடமையில் கண்ணும்  கருத்தாய் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக காலங்காலமாய் முன்வைக்கப்படும்   விமர்சனத்தை  தமிழ்ச்சமுதாயம் தொடர்ந்து 
 முன்வைத்திடும் வகையிலே தான்  இப்பயிற்சி வகுப்புகளும்  நடத்தப்படுவதாகக் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் சமுதாயம்  கூறவிரும்பவில்லை ; வழிமொழியவில்லை 
என்றாலும் நம்பாமல் இருக்க முடியாத வகையினிலேயே பயிற்சிதிட்டங்கள்  அமைக்கப்பட்டுள்ளது என்பது மிகையானதாகாது.

 நாமக்கல் மற்றும்  திருச்செங்கோடு கல்வி மாவட்ட அளவிலான ஆயிரக்கணக்கான தொடக்க நிலை ஆசிரியர்களை கடுமையான , கொடுமையான வெப்பக்காலத்தில்,              குறிப்பாக வெப்பக்காற்று வீசும் காலத்தில் ஒரே இடத்திற்கு வரவழைத்து , அலைக்கழித்திடச் செய்து 
 செல்வம் மற்றும் கேஎச்ஆர் கல்வி நிறுவனங்களிலேயே தான்  
 பயிற்சி வகுப்புகள் நடைபெறும்   என்று வெளியிடப்பட்டுள்ள  நடைமுறைக் கோளாறுகளும்,
நடைமுறைச் சிரமங்களும், நடைமுறைச் செலவினங்களும் நிறைந்த  அறிவிப்பானது உடன்  திரும்பப் பெறப்பட வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தின்  15 ஒன்றிய தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கும் முந்தைய நடைமுறைகளின் படியே    தொடர்ந்து 
அந்தந்த வட்டார வளமையங்களிலேயே பயிற்சி வகுப்புகளை சுமூகமாக     நடத்திட வேண்டும்.
நாமக்கல் மாவட்ட தொடக்கநிலை ஆசிரியர்களின் மேற்கண்ட வேண்டுகோளை தமிழ்நாட்டின் கல்வித்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றிட வேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கேட்டுக்
கொள்கிறது.

~முருகசெல்வராசன்,
மாவட்டச்செயலாளர்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்தது...

வரும் கல்வியாண்டிலேயே 3,4,5,8ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்...