புதன், 6 ஜனவரி, 2021

*📘தமிழகம் முழுவதும்.. நாளைக்குள் (07.01.2021)பள்ளி திறப்பு குறித்த கருத்துகேட்புக் கூட்டம் நடத்திட தமிழக அரசு உத்தரவு !*

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் நாளைக்குள் (07.01.2021)கருத்து கேட்பு கூட்டத்தை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று06.01.2021 முதல் நாளை மறுதினம் 08.01.2021 வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கூட்டத்தை நாளைக்கே (07.01.2021)முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை திடீரென உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

*✈️சூப்பர் சோனிக் விமானத்தால் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு!-நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.*

*✈️சூப்பர் சோனிக் விமானத்தால் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு!-நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.*

*📘பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி...*

*📘பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி...*

*பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன்  தெரிவித்துள்ளார்.*


*சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காகத் தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளைப் பார்வையிட்டு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.*

*அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு 10 மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது பற்றி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இந்தக் கூட்டம் 8-ம் தேதி வரை நடைபெறும்.  அனைத்துப் பள்ளிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது.*


*அதில் பெற்றோர்கள் முன்வைக்கும் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப அரசு உரிய முடிவெடுக்கும்'' என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.*


*தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் ஜன.8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இதுகுறித்த அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.*


*கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் ஏகமனதாக தெரிவிக்கும் கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.*


*இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.*

Smc பயிற்சி-பள்ளி மேலாண்மைக்குழு உறுபினர்களுக்கானபயிற்சியினை முழுவதும் Offline- ல் கொடுப்பதற்கான வழிமுறைகள்.


💥Smc பயிற்சி-பள்ளி மேலாண்மைக்குழு உறுபினர்களுக்கானபயிற்சியினை முழுவதும் Offline- ல் கொடுப்பதற்கான வழிமுறைகள்💥

💥 தலைமை ஆசிரியரின் பணிகள்💥

💥 பள்ளி மேம்பாட்டு வளர்ச்சித் திட்டம்💥
💥 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான வருகை பதிவேடு💥

💥 Videos மற்றும் PDF files - download  செய்வதற்கான வழிமுறைகள்💥

*🖥️Pongal Bonus Bill Preparing Steps in - IFHRMS ல் Pongal Bonus தயார் செய்வது எப்படி.?என்பது குறித்த வழிமுறைகள்.*

*🖥️Pongal Bonus Bill Preparing Steps in - IFHRMS ல் Pongal Bonus தயார் செய்வது எப்படி.?என்பது குறித்த வழிமுறைகள்.*

*📚2021 ஜனவரி 28 - தைப்பூசத் திருவிழா - பொது விடுமுறை - வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து அரசாணை (நிலை)எண்.7 நாள்:05.01.2021 வெளியீடு.*

*📚2021 ஜனவரி 28 -  தைப்பூசத் திருவிழா - பொது விடுமுறை -  வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து அரசாணை (நிலை)எண்.7 நாள்:05.01.2021 வெளியீடு.*