புதன், 6 ஜனவரி, 2021

*📘தமிழகம் முழுவதும்.. நாளைக்குள் (07.01.2021)பள்ளி திறப்பு குறித்த கருத்துகேட்புக் கூட்டம் நடத்திட தமிழக அரசு உத்தரவு !*

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் நாளைக்குள் (07.01.2021)கருத்து கேட்பு கூட்டத்தை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று06.01.2021 முதல் நாளை மறுதினம் 08.01.2021 வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கூட்டத்தை நாளைக்கே (07.01.2021)முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை திடீரென உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக