இறுதி எச்சரிக்கை போராட்டமே!
**********************
கல்வித்துறையில் கொட்டம் அடிக்கும் கறுப்பாடுகள்!
நாமக்கல் மாவட்டத்தின்
தொடக்கக்கல்வித்
துறையில்! கொடுமைக்காரர்களின் ஆட்டம்-பாட்டம் -கொட்டம் கல்வித்துறையில்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் உறுப்பினராக இருக்ககூடாது!
எதற்கும் ஆசிரியர் மன்றத்திற்கு செல்லக்கூடாது!
இதைச்சொல்ல இரண்டு உள்ளூர் அதிகாரிகள் !
ஒரு கல்வி மாவட்ட அதிகாரி!
இந்த இரண்டு உள்ளூர் அதிகாரிகள்
பற்றி
வண்டி ...
வண்டியாக ...
எழுதலாம்!பேசலாம்!!
முல்லையின் மாண்புகெடும்
எனும் அச்சம் மேலெழும்புகிறது!
கல்வி மாவட்டத்தவர் ரொம்ப நல்லவர் என்றே நம்பினோம்!
ஆனாலும்,
உள்ளூர் அதிகாரி விரித்த
வலையில் ...
பாசத்தில்...
விழுந்து விட்டார் போலும்!
வேடன் வலையில் விழுந்த தலைமைப்
புறாவாகி விட்டது போலும்!
இப்போதும்
காலம் கடந்து
விட வில்லை!
திருத்திக்
கொள்ளுங்கள்!திருந்துங்கள்!
என்றே வேண்டுகிறோம்!
திருந்த
மறுப்பின் !
தப்புத்தாளங்கள் கொட்டின்
நாங்கள்
திருத்துவோம்!
திருந்தச்செய்வோம்!
வண்டவாளங்கள் தண்டவாளங்களில் தொடர்வண்டிக்
கணக்கில்
நீளும் நிலைக்கு தள்ளிக்கொள்ளாதீர்!
இது முதல் எச்சரிக்கை!
இறுதி எச்சரிக்கை போராட்டமே!
மாவட்டம் முழுதும் துண்டறிக்கை வெளியிட்டு...
சுவரொட்டி ஒட்டி...
ஆசிரியர்களை அணி்திரட்டி ...
மல்லை நகரத்தில் மக்கள் கூடும் இடங்களில்
ஒலி பெருக்கி
வைத்து
சொல்லக் கூடாத கதைகளை
எல்லாம்
சொல்லி விடும் நிலைக்கு தள்ளிக்கொள்ளாதீர்!
மல்லை சமுத்திரத்தின் உள்ளூர் அலுவலர்களே!
கல்வித்துறையின் மாண்பினை காற்றில் பறக்க விடாதீர்!
கல்வித்துறைக்கும்,
தமிழக அரசுக்கும்
களங்கம் விளைவிக்கும் கறுப்பாடுகளாகி விடாதீர்!
இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்
(கிளை).