வெள்ளி, 3 நவம்பர், 2017

நிலநடுக்கத்தில் கட்டிடங்களை பாதுகாக்கும் கான்கிரீட் பூச்சு

குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது

சென்னை,
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனிதனித்தாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி செலவாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4க்கும் விண்ணப்பிக்கின்றனர் எனவும், 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி,  CCSE-IV என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Epayroll ready for fixation for New Pay Revision

புதிய ஊதியம் சார்ந்து E pay roll பெறப்பட்டு விட்டது. Employe code  (gpf )or (cps) கொடுத்தால் எல்லாம் வரும் அதில் நீங்கள் தயாராக உள்ள grade pay கொடுத்து option date கொடுத்தால் புதிய ஊதியம் வரும்.

NTS தேர்வு தேதி மாற்றம்

நாளை(4/11/2017) நடைபெற இருந்த தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு ( NTS  EXAM  ) வரும் 18/11/2017 தேதிக்கு மாற்ற பட்டுள்ளது

6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.