வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

செப்டம்பர் 2018~ நாட்காட்டி…


*1-சனி- வட்டாரக்கல்வி அலுவலக குறைதீர் முகாம்.

*2-ஞாயிறு-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 10 வது மாநில மாநாடு-சேலம் மண்டல நிதியளிப்புக் கூட்டம்.இடம்:சேலம் சிவில் இஞ்சினியர்ஸ் சாரிடபுள் கூட்ட அரங்கம்.

*5- புதன்- ஆசிரியர் தினம்.

*8-சனி- பள்ளி வேலைநாள்&உலக எழுத்தறிவு தினம்.                

*11-செவ்வாய்-சாம உபாகர்மா வரையறுக்கப்பட்ட விடுப்பு.

*12-புதன் -ஹிஜிரி புதிய வருட தொடக்கம் வரையறுக்கப்பட்ட விடுப்பு.        

*13-வியாழன்-விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை.

*15-சனி-தொடக்க/உயர் தொடக்கநிலைக்கான குறுவளமையப்பயிற்சி.(இறுதிநேர மாறுதலுக்குட்பட்டவை).     

*21-வெள்ளி -மொகரம் அரசுவிடுமுறை.    

*22-சனி-பள்ளி வேலைநாள். 

*17-22 முதல் பருவத் தேர்வு.

*23-அக்2 ~ முதல் பருவத்தேர்வு விடுமுறை.          

EMIS Server Maintenance From 31-08-2018 - 7.00 P.M To 03-09-2018 1.00 P.M...

Emis பணி~சில தகவல்கள்…


2018-2019 ஆம் கல்வியாண்டில்
(இக்கல்வியாண்டு) பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
(இருப்பினும் ஒருமுறை open செய்து recheck செய்யவும்.)

2017-2018ல் பதிவு செய்யப்பட்ட மாணவர்களது (தற்போது இரண்டாம் வகுப்பு) தகவல்களும் முழுமையாக இருக்கும்.

தற்போது
மூன்று, நான்கு மற்றும் ஐந்து.. மேலதீக வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கே கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

STEP 1

ஆதாரில் உள்ளபடி ஆங்கிலத்தில்
ஆதாரில் உள்ளபடி தமிழில்
பள்ளி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி ஆங்கிலத்தில்
பள்ளி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி தமிழில்

உதாரணமாக:

ஆதாரில் தகப்பனார் பெயரோடு இணைந்து நிர்மலா சீதாராமன் என்றிருக்கும்.

அதனை அவ்விதமே ஆதாரில் உள்ளபடி என்கிற..காலத்தில் பதிவிட்டு விடுக.

ஐடி கார்டு என்கிற காலத்தில்.. சீ.நிர்மலா என்று பதிவிட்டுவிடுக.

STEP 2

முதல், இரண்டு வகுப்புகளுக்கு Father, mother occupation இருக்கும்.

ஏனைய வகுப்புகளுக்கு உள்ளீடு செய்க.

STEP 3

முகவரி சரியாக உள்ளதை உறுதிபடுத்திக் கொள்க.

STEP 4

முதல், இரண்டு வகுப்புகளுக்கு Date of joining உள்ளது.

ஏனைய வகுப்புகளுக்கு உள்ளீடு செய்தாக வேண்டும்.

மேற்கண்ட பணிகள் முடிவடைந்த நிலையில்..  step4ல் உள்ள UPDATEஐ முடிவில் click  செய்க.

இவைகள் அல்லாது எக்காலமேனும் விடுபட்டுள்ளதா என கவனமுடன் நோக்குக.

தேக்கப்பட்டியல்.. அட்மிசன் பார்ம்..
ஆதார் ஜெராக்ஸ்.. ஆகியவற்றை முன்னேற்பாடாக அருகில் வைத்துக் கொண்டால்.. பணி முடிக்க எளிதாக இருக்கும்.

அல்லது

ஆதார் ஜெராக்ஸில் ஒரு மூலையில்..

வகுப்பு/சே.எண்/ சேர்ந்த தேதி குறிப்பிட்டு முன்னேற்பாடு செய்து கொள்வதும் மேற்கண்ட எமிஸ் பணியை எளிதாக்கும்.

குறிப்பு:

ஆதாரில் குறிப்பிட்டுள்ள பிறந்ததேதியும்.. பள்ளியில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியும் முன்னுக்குபின் முரணாக சிலருக்கு உள்ள வாய்ப்பும் நேர்ந்துள்ளது.

எனவே.. பிறந்ததேதியை உறுதிபடுத்துக. தவறாக இருக்கும் பட்சத்தில் சார்ந்த பெற்றோரை அழைத்து.. ஆதாரை திருத்தம் செய்திட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்திடுக...

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

தாமதமாக வருமான வரி செலுத்தினால் அபராதம்...

மிகச் சிறிய மொபைல் பிரிண்டர்...


மொபைல் போன் அளவிலான பிரிண்டரை போலராய்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஸ்மார்ட்போனில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை இதில் உடனுக்குடன் போட்டோக்களாக பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும். 

இது 2.5 செ.மீ. தடிமன் கொண்டது. இதன் எடை 186 கிராம் மட்டுமே. இதில் வழக்கமாக பிரிண்டரில் பயன்படுத்தப்படும் வண்ண மைகளுக்கு பதிலாக விசேஷமான காகிதம் (ஜிங்க் பேப்பர்) பயன்படுத்தப்படுகிறது. இந்த காகிதத்தில் சியான், மஞ்சள், மெஜந்தா ஆகிய வண்ணங்கள் கிரிஸ்டல் வடிவில் இடம்பெற்றிருக்கும். 

நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் உள்ள வண்ணங்களுக்கு ஏற்ப அவை காகிதத்தில் பரவி புகைப்படம் கிடைக்கும்.

எந்த இடத்திலும் உடனடியாக பிரிண்ட் எடுக்கும் வசதிக்காக கைக்கு அடக்கமான அளவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 

இது வயர்லெஸ் முறையில் செயல்படும். இதனால் ஸ்மார்ட்போனுடன் இதை இணைத்து செயல்படுத்தலாம்.

புளூ டூத் மூலமாக டேப்லெட் போன்றவற்றில் எடுக்கும் புகைப்படங்களையும் இதில் பிரிண்ட் எடுக்க முடியும். இதற்கென பிரத்யேகமான செயலி (ஆப்) ஒன்றையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படக் கூடியது. இதனால் புகைப்படங்களை எடிட் செய்து தேவையான பகுதிகளை மட்டும் பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும்.

புகைப்படம் எடுப்பவர்களுக்கு அதை உடனடியாக பிரிண்ட் எடுத்து பார்க்க இது மிகவும் வசதியாக இருக்கும். அமேசான் இணையதளத்திலும் இதை வாங்க முடியும்.

ரூ. 23 ஆயிரம் விலையிலிருந்த இந்த பிரிண்டர் இப்போது 33 சதவீத தள்ளுபடியில் ரூ. 15,500-க்கு கிடைக்கிறது.

DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் - கருத்துரு அனுப்புதல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்...

School wise EMIS missing field report as on 30.8.18...

நாமக்கல் மாவட்டம்~ வட்டாரக் கல்வி அலுவலர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் ஆப் எண்…

தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் ஆப் எண்...

பள்ளிக்கல்வித்துறை நாமக்கல் மாவட்டம்~ 2018-2019 வேலூர் வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்...

புதன், 29 ஆகஸ்ட், 2018

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ள நிவாரணம் 2018 ~ ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்து செலுத்தக்கோரும் விருப்பக் கடிதம்…

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதிய பிடித்தம் சார்ந்த அரசாணை வெளியீடு...

பெண்களை பின்தொடர்ந்தால் அழைக்கலாம்~ பொதுமக்களின் பாதுகாப்பிற்கு "காவலன் 100" செயலி அறிமுகம்…

ஓட்டுபவர், பின்னால் உட்காருபவர் இருவரில் யார் ஹெல்மெட் அணியாவிட்டாலும் அபராதம்...

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 38 புதிய படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி...

கடல்சார் கண்காணிப்புக்கு செயற்கைக்கோள்கள்...

கோவை வ.உ.சி மைதானத்தில் இலவச வைபை வசதியுடன் தங்க நிறத்தில் 'ஸ்மார்ட் ட்ரி'~ 350 மீட்டருக்கு பயன்படுத்தலாம்...

சுத்தம் ~ உறுதிமொழி…

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

IGNOU பல்கலையில் ஆகஸ்ட்-31 வரை சேர்க்கை...


இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகள், தொலைநிலை கல்வியில் வழங்கப்படுகின்றன. 

நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், சென்னை, வேப்பேரியில் உள்ள, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், https://onlineadmission.ignou.ac.in/admission 
என்ற இணையதளம் வழியாகவும், விண்ணப்பம் அனுப்பலாம் என, இக்னோ தெரிவித்துள்ளது.

சிப் அடிப்படையிலான புதிய ATM கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவிப்பு...


இப்போது நாம் பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, 'சிப்' அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு  வங்கிகள் அறிவித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி அட்டைகள் காந்தப் பட்டை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை 'ஸ்கிம்மர்' கருவி மூலம் நகல் எடுத்து மோசடியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 'சிப்' அடிப்படையில் கார்டுகளை வழங்குமாறு ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனால், வங்கி அட்டை முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும்.

இந்நிலையில் இந்த பாதுகாப்பு அம்சத்தை முழுமையாக செயல்படுத்த வங்கிகள் முடிவு செய்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கிளைக்கு நேரில் சென்றும், நெட் பாங்கிங் மூலமும் புதிய அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.

APP~ஆங்கிலத்தில் டைப் செய்யாமல்,நாம் பேசுவதை தானாக டைப் செய்யும் செயலி...

CPS சந்தாதாரர் கவனத்திற்கு...

CPS சந்தாதாரர் கவனத்திற்கு,
2017 - 2018  ஆண்டிற்கான திருத்திய கணக்கீட்டு தாள் 17-09-2018 அன்று வெளியிடப்பட உள்ளது.

வருமான வரிக்கணக்கு தாக்கல்:ஆகஸ்ட்31கடைசி...

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

அனுப்பிய இமெயில் ஐ திரும்ப பெறலாம்~ ஜி மெயில் புதிய வசதி…


கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையில் தற்போது ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் டெக்னாலஜியின் ராஜா என்று அழைக்கப்படும் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையில் ஒரு ரகசிய மோட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரகசிய மோட் மூலம் ஜிமெயில் பயனாளிகள் மிக முக்கியமான, ரகசியமான மற்றும் உணர்ச்சிபூர்வமான செய்திகளை பாதுகாப்புடன் அனுப்பலாம். இதற்காக ஜிமெயில் பயனாளிகள் எக்ஸ்பைரஷன் தேதி மற்றும் 2எப்.ஏ பாஸ்வேர்டு ஆகியவற்றை தனியாக செட் செய்ய வேண்டும். 

இந்த நிலையில் இந்த ஜிமெயில் நிறுவனம் தற்போது மிகவும் ஆச்சரியம் தரத்தக்க புதிய வசதி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டில் உள்ள ஜிமெயில் செயலியில் இயங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஆராய்ச்சியாளர்களின் கருத்தின்படி ஜிமெயில் தற்போது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதியான அண்டூ செண்ட் இமெயில் என்ற ஆப்சனை ஜிமெயிலின் மொபைல் வெர்ஷனுக்கு மட்டும் வழங்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த புதிய அண்டு செண்ட் இமெயில் என்பது விரைவில் வெப் வெர்ஷனுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் வெர்ஷனில் கிடைத்திருக்கும் இந்த புதிய வசதியால் ஜிமெயில் பயனாளிகள் மிகுந்த பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த வசதியை ஜிமெயில் பயனாளிகள் பயன்படுத்த ஒருசில நொடிகள் மட்டுமே கால அளவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் உள்ள ஜிமெயிலில் அண்டூ என்ற திரும்ப பெறும் வசதி ஒருசில வினாடிகள் மட்டுமே இமெயிலின் கீழே தோன்றும். இதற்கு முன்னர் ஒரு இமெயில் அனுப்பியவுடன் ஒரு கருப்பு நிற பாரில் இமெயில் அனுப்பப்பட்டுவிட்டதாக வரும் நோட்டிபிகேஷன் இனி வராது. அதற்கு பதிலாக வலது புறத்தில் இந்த அண்டூ வசதி தோன்றும் வெப் வெர்ஷனில் உள்ளது போலவே இந்த அண்டூ செண்ட் இமெயில் வசதி தற்போது வழங்கபப்ட்டுள்ளது. அனுப்பிய இமெயிலை திரும்ப பெறவோ, அல்லது அனுப்பிய மெயிலில் திருத்தம் செய்யவோ, வேறு ஏதேனும் மாற்றம் செய்யவோ இந்த வசதியை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம். 

ஒருமுறை ஜிமெயில் பயனாளிகள் இந்த அண்டூ செண்ட் மெயில் ஆப்சனை கிளிக் செய்துவிட்டால், அந்த மெயில் திரும்ப பெற்று கொண்டிருக்கும் நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும். அதன் பின்னர் மீண்டும் கம்போஸ் மெயில் சென்று உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து அதன்பின்னர் எல்லாம் சரியாக இருக்கின்றதா? என்பதை சரிபார்த்த பின்னர் மீண்டும் அதே இமெயிலை அனுப்பி கொள்ளலாம்.

EMIS - How to correct students & staffs details - Video Tutorial...

கேரளா வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியீடு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~10வது மாநில மாநாடு~சேலம் மண்டல நிதியளிப்பு கூட்டம்...

சனி, 25 ஆகஸ்ட், 2018

EMIS~SCHOOL BASIC & ADMINISTRATIVE FORM...

National Talent Search Examination - 2018-19 - APPLICATION...

DETAILS NEEDED TO ONLINE EMIS VERIFICATION FOR STUDENTS DATA...

IFHRMS செயல் விளக்கங்கள்(தமிழில்)...

சாலை விதிகள்...

EMIS :TEACHER PROFILE FORMAT 2018-2019...

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

EMIS - SubCaste ஐ Update செய்ய வழிமுறைகள்...


EMIS-Subcaste ஐ Update செய்ய கீழ்கண்ட விளக்கப் படங்கள் மூலம் செய்யலாம்...
Click here...

ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டு வாடகைப்படி கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் தொடர் நடவடிக்கைகள்...

பள்ளிக் கல்வி- கிருஷ்ணகிரி மாவட்டம்-25/08/2018 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுதல் சார்பாக...

EMIS-COMMUNITY AND SUBCASTES LIST...

பள்ளிக்கல்வி -நாமக்கல் மாவட்டம் -2018-19 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரம் கோருதல் - சார்பு .

1.7.1996 க்கு முன்னர் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது~ இதனடிப்படையில் அரசாணை எண் 245 வழங்கப்பட்டுள்ளது…

1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு 30 வருடம் பணி முடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரசாணை எண் 245 வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சொற்கள் அறிவோம் ( pdf )...

உடற்கல்வி - இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் - மாநில அளவிலான தெரிவுப் போட்டி -Kabadi (U-14 Girls) Badminton (U-17 Girls) and Silambam நடைபெறும் தேதி மாற்றம் குறித்து தெரிவித்தல் - சார்ந்து...

தண்ணீரை திடப்பொருளாக மாற்றும் வேதிப்பொருள்~ வீடுகளில் புகும் வெள்ளநீரை வெளியேற்ற சூப்பர் தீர்வு பெங்களூரு பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு…