ஞாயிறு, 15 டிசம்பர், 2019
ஊரக உள்ளாட்சித் தேர்தல் சார்ந்த கோரிக்கைளும், மாவட்ட தேர்தல் பிரிவு நிர்வாகத்தின் நடவடிக்கைகளும்- ஆசிரியர் மன்றம்
*ஊரக உள்ளாட்சித் தேர்தல் சார்ந்த கோரிக்கைளும், மாவட்ட தேர்தல் பிரிவு நிர்வாகத்தின் நடவடிக்கைகளும்: ஆசிரியர் மன்றம் நன்றி பாராட்டுகிறது*
அனைவருக்கும் வணக்கம் !
நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலரிடம் இன்று(14.12.19) விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்ட நாமக்கல் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்
வட்டாரத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்;
நாமககல் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் இக்கோரிக்கைகளின் மீது பெறப்படும் என்று நம்பிக்கையை அளித்துள்ளார்.
இச்சந்திப்பு நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் திரு வெ.வடிவேல் , நாமக்கல் ஒன்றியச் செயலாளர் திரு. அ.ஜெயக்குமார்,
பரமத்தி ஒன்றிய செயலாளர் திரு.க.சேகர், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்
திரு .இரா.இரவிக்குமார்,
எருமப்பட்டி ஒன்றிய தலைவர் திரு. க.ஆனந்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. ப.சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளாக,காணப்பட உள்ள தீர்வுகளாக பின்வரும் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளது.
அவைகளில் சில பின்வருமாறு...
*1)மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் தேர்தல் பணியானது விலக்கிக் கொள்ளப்படும்*
*2)மகப்பேறு விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு காலத்தில் உள்ள பெண் ஆசிரியர்களின் தேர்தல் பணியானது விலக்கிக் கொள்ளப்படும்*
*3)மருத்துவ விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கையின் மீது மருத்துவ விடுப்பின் உண்மை தன்மையை பொறுத்து பரிசீலிக்கப்படும்.*
*4)தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் தலைமையாசிரியர்களுக்கு அவர்களுக்கு உரிய வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியானது பயிற்சி வகுப்பில் வாய்ப்புகளைப் பொறுத்து மாற்றி் அமைத்து அளிக்கப்படும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணி தங்களுக்கு வேண்டாம் என ஆசிரியைகள், அலுவலர்களில் சிலர் தெரிவித்திருக்கின்றனர். இக்கோரிக்கையும் பரிசீலிக்கப்படும். இத்தகு நிலையைப் பொறுத்து தலைமையாசிரியர்களுக்கு தலைமை அலுவலர் பணி மாற்றி வழங்கப்படும்.*
*5)இதர கோரிக்கைகளும் மதிப்புமிகு . நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டுதலின் படி பரிசீலிக்கப்படும் . மேற்கண்ட சந்திப்பும், கோரிக்கைகளும் , தேர்தல் அலுவலர்களின் பதிலுரையும்-செயல்பாடுகளும் -நடவடிக்கைகளும் நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி ஆசிரியப் பெருமக்களுக்கு பெரிதும் நன்மைபயக்கும் என்று ஆசிரியர் மன்றம் நம்புகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஏற்றுக் கொண்டுள்ள நாமக்கல் மாவட்ட தேர்தல்பிரிவு நிர்வாகத்திற்கு ஆசிரியர்மன்றம் நன்றி பாராட்டுகிறது.
மெ.சங்கர்
மாவட்டச்செயலாளர் .,
த.நா.தொ.ப ஆசிரியர் மன்றம்- நாமக்கல் மாவட்டம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)