புதன், 30 மே, 2018

பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர்,ஆசிரியைகளை பொறுப்பாளர்களாக நியமிக்க கல்வித்துறை அறிவுறுத்தல்...

New DEO Office Lists & Contact Numbers ~ 2018...

பள்ளிக்கல்வித்துறை~ அலுவலகங்களின் அலுவலகப்பணியாளர்களின் விபரங்கள்…

இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்...


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு:

இந்தக் கல்வியாண்டு
(2018-2019) முதல்...
இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகவல் பின்வருமாறு :

1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்,

2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,

3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, 

4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,

5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,

6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,

7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம்,

மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.