ஞாயிறு, 10 மே, 2020

கொரானா பேரிடர் காலத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஊரடங்குக் காலத்தில்  11.05.2020 (திங்கள்) முதல் 34 வகை கடைகள் திறக்கப்படுகிறது!
தமிழக அரசு அனுமதி !

RTI யில் அதிர்ச்சி தகவல் _ தள்ளி வச்சது ரூ 4லட்சம் கோடியில் வசூல் வெறும் ரூ45 கோடி தான்


மத்தியஅரசே! செம்மொழி தமிழ் ! சீ்ரிளமை மொழி தமிழ்! மறக்கலாமா?!மறைக்கலாமா?


மே 10, வரலாற்றில் இன்று.

நெல்சன் மண்டேலா வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற தினம் இன்று (1994).

 மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கானநோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. 2008 ஜூன் மாதம் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
மே 10, வரலாற்றில் இன்று.

உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் இன்று.

உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டு தோறும் மே 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும் எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமி தொற்று, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களாலும் மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
மே 10,
வரலாற்றில் இன்று.

நயந்தரா சாகல் பிறந்த தினம் இன்று.

நயந்தரா சாகல்
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்.

அரசியல், வரலாறு போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். புதினங்கள் சிலவும் எழுதியிருக்கிறார்.

 இலக்கியத்துக்கான சாகித்திய அகாதமி விருது (ஆங்கிலம்) 1986 ஆம் ஆண்டில் Rich Like Us (1985) என்ற இவரது ஆங்கிலப் புதினத்திற்கு வழங்கப்பட்டது.

இவர் காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் ஆவார்.

 நயந்தரா சாகல் தாம் எழுதிய கதைகளில் இந்தியப் பெண்களின் அறியாமையையும் அடிமைத்தனத்தையும் சித்திரித்துக் காட்டியுள்ளார்.

1970-80 களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளைப் பற்றி எழுதி வந்தார்.

நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் நெருங்கிய உறவினராக இருந்தபோதும், நயந்தரா சாகல் தமக்கென சில கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருந்தார். அவற்றை வெளிப்படையாக எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது. ஒன்பது புதினங்களும் எட்டு பிற நூல்களும் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக டேராடூனில் வாழ்ந்து வருகிறார்.
மே 10,
வரலாற்றில் இன்று.

சிப்பாய் கலகம் தொடங்கிய தினம் இன்று (1857).

பிரிட்டிஷாரின் படைகளில் பணியாற்றி வந்த இந்தியர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் தொடர்பாக எழுந்த அதிருப்தி போராட்டமாக வெடித்தது. குண்டுகளை மூடியிருந்த உறையானது விலங்கினங்களின் கொழுப்புகளால் ஆனது என்ற தகவல் அறிந்த இந்தியர்கள் தங்கள் மத உணர்வுகளுக்கு எதிராக செயல்பட இயலாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 1857ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் மீரட் நகரில் தொடங்கிய கிளர்ச்சியானது, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, குர்கான் ஆகிய இடங்களுக்கும் பரவியது. ஆனாலு‌ம் இப்புரட்சி ஆங்கிலேயருக்கு எதிராக வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. இருப்பினும் இந்தியாவில் சுதந்திரத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்‌ட முதல் அடியாக இது கருதப்பட்டது.
மே 10,
வரலாற்றில் இன்று.


அன்னையர் தினம் இன்று.

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.

அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

அம்மாவுக்கு,அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்கு சென்று, குடும்ப பாரத்தை பகிர்ந்து, கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அமைதியாக அன்புடன் சிரித்து நடந்து கொள்ளும் பாங்கு. இத்தனையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.

அந்த அன்னையைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை குளிர்விக்க, ஆச்சரியப்படுத்த, அன்று ஒரு நாளாவது அவளை அமர வைத்து ஓய்வு கொடுத்து, பரிசுகள் கொடுத்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் வாசித்து, அவளுடன் பொழுதை போக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

சரி. இனி அன்னையர் தினம் எப்படி பிறந்தது என்று பார்ப்போம்.

அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ''மதர்ஸ் டே ஒர்க் கிளப்'' என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, பேணி காத்தல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்.

ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் ''அன்னையர் தினம்'' வரும் என்று பாடி இருந்தது அவரது காதுகளிலும், நினைவிலும் வந்து வந்து சென்றது.

இந்நிலையில் அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட, அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்கு, 1908, மே 10ஆம் தேதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார். அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார்.

அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார்.

 இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 2வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் மே 2 ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடினாலும், பிரிட்டனில் ஈஸ்டர் திருநாளில் இருந்து மூன்று வராங்களுக்கு முன்பு வரும் ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுகின்றனர்.