ஞாயிறு, 10 மே, 2020

மே 10,
வரலாற்றில் இன்று.

நயந்தரா சாகல் பிறந்த தினம் இன்று.

நயந்தரா சாகல்
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்.

அரசியல், வரலாறு போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். புதினங்கள் சிலவும் எழுதியிருக்கிறார்.

 இலக்கியத்துக்கான சாகித்திய அகாதமி விருது (ஆங்கிலம்) 1986 ஆம் ஆண்டில் Rich Like Us (1985) என்ற இவரது ஆங்கிலப் புதினத்திற்கு வழங்கப்பட்டது.

இவர் காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் ஆவார்.

 நயந்தரா சாகல் தாம் எழுதிய கதைகளில் இந்தியப் பெண்களின் அறியாமையையும் அடிமைத்தனத்தையும் சித்திரித்துக் காட்டியுள்ளார்.

1970-80 களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளைப் பற்றி எழுதி வந்தார்.

நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் நெருங்கிய உறவினராக இருந்தபோதும், நயந்தரா சாகல் தமக்கென சில கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருந்தார். அவற்றை வெளிப்படையாக எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது. ஒன்பது புதினங்களும் எட்டு பிற நூல்களும் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக டேராடூனில் வாழ்ந்து வருகிறார்.