புதன், 16 அக்டோபர், 2019

மெதுவாக கற்போருக்கு தமிழ் எளிமை சொற்கள்



க வரிசை சொற்கள்
Clickhere....
https//drive.google.com/file/d/1At-k46_7uQEl-44Kca69G_v5IcSNK4Bl/view?usp=drivesdk

ச வரிசை சொற்கள்
Clickhere.....

த வரிசைசொற்கள்
Clickhere......

ந வரிசைசொற்கள்
Clickhere.......

ப வரிசை சொற்கள்
Click here.......

ம வரிசை சொற்கள்
Clickhere......

வ வரிசை சொற்கள்
Clickhere.......

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை நாள் 16.10.2019


முதலமைச்சர் காப்பீடு திட்டம் அறுவைசிகிச்சை பொது தடுமாறாமல் இருக்க முன்கூட்டியே இவற்றை செய்து கொள்ளுங்கள்

உபயோகமான தகவல்:
பொதுமக்களில் பலர் உடல் நலமில்லாமல் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு அறுவை சிசிச்சை செய்ய முயலும் போது முதலமைச்சர் காப்பீடு உள்ளதா? என்று கேட்கிற நேரத்தில், இல்லை என தடுமாறுகிறார்கள். எனவே, இந்த மனுவை காப்பி எடுத்து தங்கள் பகுதி கிராமநிர்வாக அலுவலர் (VA 0)விடம் இவ்விண்ணப்பத்தில்  ஆண்டு வருமானம் ₹ 72 ஆயிரம் என கையெழுத்து வாங்கிக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தினர் அனைவரும் சென்று போட்டோ எடுக்க வேண்டும். அங்கு ஒரு நம்பர் தருவர். அதை குறித்து வைத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு சென்று நம்பரை கூறினால் ஆபரேசன் செய்வார்கள். தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Attendance app மூலம் முழுமையாக வருகைபதிவு செய்யாத பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை - CEO


*🌷ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் பயன்பாட்டினை வலியுறுத்துதல் தொடர்பாக மாநில திட்ட இயக்குநர் செயல்முறை



ஆசிரியர் பொது மாறுதல் _ சுற்றறிக்கை : 4 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.. நாள் 11. 10. 2019





*அக்டோபர் 16-வரலாற்றில் இன்று.*

*🌷அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.*

------------------------------------------------
 *➰வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799).*


*தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்*1797இல்* *முதன் முதலாக* *ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.*
*1799இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது.* *பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார்*. *1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.*

*அக்டோபர்-16 வரலாற்றில் இன்று*

*🍎
அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.*

------------------------------------------------
 *🥕🥒🍊🥛உலக உணவு தினம் இன்று.*

*உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.*

*உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும். உயிர்ச்சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.*

*உலக வங்கி தகவல்படி  உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 7 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி காரணமாக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு 3 வேளை உணவு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே சமச்சீரான வளர்ச்சியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் காலங்களில் பட்டினியால் சாவு என்பதை தவிர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.*

*உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இந்த விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இதுவரை எம்.எஸ். சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட 6 பேர் இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.*