புதன், 16 அக்டோபர், 2019

*அக்டோபர் 16-வரலாற்றில் இன்று.*

*🌷அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.*

------------------------------------------------
 *➰வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799).*


*தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்*1797இல்* *முதன் முதலாக* *ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.*
*1799இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது.* *பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார்*. *1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.*