ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்-உபரி ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தம்!

EMIS STUDENT ID CARD தயார் செய்தல் பணி சார்பான விளக்கப்படங்கள்...

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அப்ளிகேஷன்!



ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அப்டேட், வணிகம் செய்யும் நபர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியானது.



  அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் பயனர்களைக் கவர முயற்சி செய்யும் பல நிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் வாட்ஸ்அப்பிலும் புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் பிஸினஸ் என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றினை இதற்காக அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உண்மையான, நம்பகத்தன்மை கொண்ட விற்பனையாளர்களைப் பயனர்கள் கண்டறிந்து கொள்ளலாம். இதில் வணிகம் செய்யும் நபர் முதலில் முழு விவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் பதிவிட வேண்டும். வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களின் தகவல்களைச் சோதனை செய்து, உண்மையான தகவல்கள் எனில் அவர்களுக்குப் பச்சை வண்ண டிக் மூலம் அங்கீகாரம் வழங்குகிறது.

பொருள்களை வாங்க முயற்சி செய்யும் பயனர்கள் இதைப் பார்த்து அவர்கள் நம்பகத்தன்மை உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பச்சை வண்ணத்தில் டிக் இல்லாத வணிகக் கணக்குகள் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை என்றும் பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனைத் தற்போது சோதனை ஓட்டமாகச் செயல்படுத்தி வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். இதன் வெளியீடு விரைவில் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அப்ளிகேஷனில் பழைய வாட்ஸ்அப்பில் உள்ள கால் சிம்பல் நீக்கப்பட்டுப் புதிதாக B என்ற சிம்பல் இணைக்கப்பட்டுள்ளது.