வியாழன், 10 டிசம்பர், 2020

ஊதிய குறைதீர்க்கும் குழு 2019-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தினை தனி ஊதியமாக மாற்றி ஆணையிடப்பட்டது-ஆணையினை செயல்படுத்துதல் தொடர்பாக.

ஊதிய குறைதீர்க்கும் குழு 2019-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தினை தனி ஊதியமாக மாற்றி ஆணையிடப்பட்டது-ஆணையினை செயல்படுத்துதல் தொடர்பாக.

*☀️பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி)உத்தரவு!!*

*☀️பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி)உத்தரவு!!!*

*இணைப்பு: மாதிரி படிவம்.*

பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரிக்கை-மாணவர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் இன்று டிசம்பர் 10 கலந்துரையாடல்;


மாணவர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் இன்று  கலந்துரையாடல்; பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரிக்கை:
 

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று  (டிச.10) மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாடும் நிலையில், பொதுத்தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரி மாணவர்கள் இணையத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

 
கரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை சிபிஎஸ்இ குறைத்தது.

இதற்கிடையே, பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து ட்விட்டர் மூலம் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, ட்விட்டரில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் கல்வி அமைச்சரிடம் தங்களின் கருத்துகளை மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதில், பெரும்பாலான மாணவர்கள் பொதுத்தேர்வுகளை மே மாதம் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தேர்வுகள் குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், மத்திய கல்வி அமைச்சர் அதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மாணவர்கள், தங்களுக்குக் குறைந்தது 3 மாத காலமாவது நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தினால் மட்டுமே பொதுத்தேர்வைத் தங்களால் எதிர்கொள்ள முடியும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்னும் சில மாணவர்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் நீட் 2021, ஜேஇஇ 2021 தேர்வுகளின் பாடத்திட்டம், தேர்வுத் தேதி ஆகியவை குறித்தும் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (டிச.10) மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாட உள்ளார்.

*☀️SPD - நில வரைபடத்திறன் பயிற்சி (Mapping Skill) 2020-21 ஆம் கல்வி யாண்டு - சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதள வழியாக (Online Training) பயிற்சி வழங்குதல் சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் நாள் 10.12.2020.*

*☀️SPD - நில வரைபடத்திறன் பயிற்சி (Mapping Skill) 2020-21 ஆம் கல்வி யாண்டு - சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதள வழியாக (Online Training) பயிற்சி வழங்குதல் சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் நாள் 10.12.2020.*

EMIS Appல் கற்போம் எழுதுவோம் தன்னார்வலர் மற்றும் கற்போர் வருகை பதிவு செய்வது எப்படி~காணொளி...

click here...

TN-EMIS Mobile App~New Version Available~Update Now…

click here...

2020-21ஆம் கல்வி ஆண்டு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்துவதற்காக வழங்கப்பட்ட நிதியினை செலவிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்


 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஈரோடு மாவட்டம் -

2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பு சார்ந்து - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிக்காக நிதி விடுவிக்கப்பட்டது - செலவினங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு