புதன், 6 மே, 2020

ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாட்டினால் தகவல் கசிவா..? -
மத்திய அரசு முக்கிய விளக்கம்

New Delhi: மத்திய அரசு உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் டிராக்கிங் செயலியான ஆரோக்ய சேதுவில் எந்த தகவல் கசிவும் ஏற்படவில்லை என்று அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எத்திகல் ஹேக்கர், ஆரோக்ய சேதுவில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதால் தகவல் கசிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த காரணத்தினால் செயலியைப் பயன்படுத்தும் சுமார் 9 கோடி இந்தியர்களின் தகவல்கள் பறிபோகலாம் என்று புகார் சுமத்தப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் அரசு, விளக்கம் கொடுத்துள்ளது.

எலியட் ஆல்டர்சன் (Elliot Alderson) என்னும் பெயர் கொண்ட அந்த பிரபல ஹேக்கர், கடந்த செவ்வாய் கிழமை, “ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கிறது. 9 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளவும். ராகுல் காந்தி சொன்னது சரிதான்,” என்று கூறினார்.


Elliot Alderson
@fs0c131y
Basically, you said "nothing to see here"

We will see.

I will come back to you tomorrow. https://twitter.com/SetuAarogya/status/1257755315614801921 …

Aarogya Setu

@SetuAarogya
Statement from Team #AarogyaSetu on data security of the App.

இந்த ட்வீட் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் இந்திய அரசு தரப்பிலிருந்து தன்னை தொடர்பு கொண்டார்கள் என்று எலியட் ஆல்டர்சன் கூறினார்.

அவர் தொடர்ந்து, “9 கோடி இந்தியர்களின் மருத்துவம் சார்ந்த தகவல்களை இப்படி கசியவிட வாய்ப்பு தருவது சரி கிடையாது. எனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. சரி செய்தாலும், செய்யாவிட்டாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் நான் அதை வெளியிட்டு விடுவேன்,” என எச்சரிக்கை விடுத்தார். அரசு கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸின் ராகுல் காந்தி, “அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்ய சேது செயலி, மக்களை வேவு பார்க்கும் கருவி,” என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.





. எனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. சரி செய்தாலும், செய்யாவிட்டாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் நான் அதை வெளியிட்டு விடுவேன்,” என எச்சரிக்கை விடுத்தார். அரசு கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “தினமும் ஒரு பொய். இந்த செயலி மூலம் மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு நல்லது செய்வது பற்றி சிலருக்குப் புரியாது,” என்று ராகுலை விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து ஆரோக்ய சேது குறித்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தற்போது அந்த செயலியைப் பயன்படுத்துவதை நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.

நொய்டாவில் வாழும் மக்கள் ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவில்லை என்றால், அவர்கள் குற்றம் புரிந்ததாக கருதப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு.

அதேபோல கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கன்டெயின்மென்ட் மண்டலத்தில் இருப்பவர்கள் அனைவரும், ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள், தாயகம் திரும்பியவுடன் அவர்களும் ஆரோக்ய சேதுவை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும்.

இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரோக்ய சேது, 30 கோடி டவுன்லோடுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கோடு மத்திய அரசு செயலாற்றி வருகிறது.

இந்தியளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கி வருகிறது. இதுவரை 1,694 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.

மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதிவு உயர்வு, பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் _தற்காலிக பெயர் பட்டியல் தயாரிப்பு _ பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை





மே 6,
வரலாற்றில் இன்று.


மொழிபெயர்ப்பு எழுத்தாளர் லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் நினைவு தினம் இன்று (2016).

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்
தமிழ் எழுத்தாளர். நவீனத் தமிழ்ப் புனை கதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வந்தவர்.


மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தவர்.

 சுந்தர ராமசாமியின் "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" என்ற புதினத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.

இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வந்தவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் லண்டனிலும் பிற இடங்களிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.
மே 6,
வரலாற்றில் இன்று.


மொழிபெயர்ப்பு எழுத்தாளர் லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் நினைவு தினம் இன்று (2016).

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்
தமிழ் எழுத்தாளர். நவீனத் தமிழ்ப் புனை கதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வந்தவர்.


மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தவர்.

 சுந்தர ராமசாமியின் "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" என்ற புதினத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.

இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வந்தவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் லண்டனிலும் பிற இடங்களிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.
மே 6, வரலாற்றில் இன்று.

மிர்துலா சாராபாய் பிறந்த தினம் இன்று.

 மிர்துலா சாராபாய் ( 6 மே 1911 -  26 அக்டோபர் 1974) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

 அகமதாபாத்தில் பிறந்த இவர் வளமான தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அம்பாலால் சாராபாய், சரியா தேவி  அவருடைய பெற்றோர்கள்.

மேலும் இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
விக்ரம் சாராபாய் அவர்களின் சகோதரி ஆவார்.

இவர் பள்ளிக்குப் போகாமலே இல்லத்தில் இருந்து கல்வி பயின்றார்.இருப்பினும் 1928 இல் குஜராத் வித்யாபீத்தில் சேர்ந்து, இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் அழைப்பை அடுத்து அயல்நாட்டுப் பொருள்கள், நிறுவனங்கள் முதலியவற்றைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்கினார். எனவே வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பை மறுத்தார்.
மே 6, வரலாற்றில் இன்று.

மரியா மாண்டிசோரி நினைவு தினம் இன்று.

மரியா மாண்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

மாண்டிசோரி முறைக் கல்வி
இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.

குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் "The Absorbent Mind", "The Discovery of the Child"
மே 6, வரலாற்றில் இன்று.

‘MRI ஸ்கேனிங் கருவியின் தந்தை’ என போற்றப்படும்  பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் (Paul Christian Lauterbur) பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் சிட்னி நகரில் (1929) பிறந்தார். உள்ளூரில் கல்வி பயின்றார். இளம் வயதிலேயே அறிவியலில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இவர் பொறியாளராக வேண்டும் என்பது தந்தையின் விருப்பம். இவர் விஞ்ஞானியாக விரும்பினார்.

தன் வீட்டின் கீழ்ப்பகுதியில் சோதனைக்கூடம் ஒன்றை அமைத்தார். அறிவியல் ஆராய்ச்சிகளில் இவருக்கு இருந்த ஆர்வத்தை வேதியியல் ஆசிரியர் அறிந்துகொண்டார். எனவே, வகுப்பு முடிந்தவுடன் தனியாக பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதித்தார்.

கிளீவ்லேண்டில் உள்ள கேஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். 1950-களில் கட்டாய ராணுவச் சேவையில் சேர்ந்தபோது, அணுக்கரு காந்தப்புலம் (என்எம்ஆர்) தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட இவரது உயரதிகாரிகள் அனுமதித்தனர். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் முன்பு, 4 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

மேரிலேண்டில் உள்ள மெலோன் ஆய்வுக்கூடத்தில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

சில நிறுவனங்களின் ஆதரவுடன் என்எம்ஆர் கருவி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது பல்வேறு திட, திரவப் பொருள்களின் மூலக்கூறு கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் முக்கிய கருவியாகப் பயன்பட்டது.

இரு பரிமாணங்கள் கொண்ட படங்களை உருவாக்க இதை பயன்படுத்தலாம் என்பதை ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பு காந்த அதிர்வு அலை வரைவு (எம்ஆர்ஐ) கருவியை மேம்படுத்துவதற்கான அடிப்படை ஆராய்ச்சியாக அமைந்தது.

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் பீட்டர் மான்ஸ்ஃபீல்ட் இதுகுறித்து ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டு வந்தார். அவர் இக்கருவியை நடைமுறை மருத்துவப் பயன்பாட்டுக்கான ‘எம்ஆர்ஐ’ ஸ்கேனிங் கருவியாக மேம்படுத்தினார். எம்ஆர்ஐ ஸ்கேனிங் கருவிக்கு அடித்தளமிட்டது மற்றும் அதை மேம்படுத்தியதற்காக இருவருக்கும் சேர்த்து 2003-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கதிர்வீச்சைப் பயன்படுத்தாமல், பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் மனித உள் உறுப்புகளை தெளிவாக காட்டக்கூடிய கருவி என்பது அதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது. அதை சாத்தியமாக்கிக் காட்டியது, மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் சாதனையாக கருதப்படுகிறது.

எம்ஆர்ஐ கருவிக்கு இறுதி வடிவம் கொடுக்கத் தேவையான நிதியைத் திரட்ட இவருக்கு ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகின. அது முழு வடிவம் பெற்ற பிறகு, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு அதன் சாதகங்கள் பற்றி விளக்கிக் கூறினார். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியோடு, ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார்.

ஆல்பர்ட் லாஸ்கர் விருது, ஹார்வே பரிசு, அறிவியலுக்கான தேசிய பதக்கம், தொழில்நுட்பத்துக்கான தேசிய பதக்கம் மற்றும் பல பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றுள்ளார். ‘எம்ஆர்ஐயின் தந்தை’ என்று போற்றப்படும் பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் 78ஆவது வயதில் (2007) காலமானார்.
மே 6, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட  தினம் இன்று (1854).

அரசர்களின் காலங்களில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு தகவல் கொண்டு சேர்க்க வீரர்களை பயன்படுத்தினர். அதன்பின் புறாக்களை பயன்படுத்தினர். காலமாற்றத்துக்கு ஏற்ப தகவல் கொண்டு செல்லும் வழிமுறைகள் மாறின. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டுக்கொண்டு இருந்த சமயத்தில் தங்களுக்கான தகவல் பரிமாற்றத்துக்காக தபால் சேவையை தொடங்கினார்கள்.

1764ல் முதன் முதலில் பம்பாய் என்கிற மும்பையில் தான் தபால் சேவையை தொடங்கினார்கள். இந்தியா போஸ்ட் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. 1966க்குள் சென்னை, கல்கத்தா போன்ற மாநிலங்களிலும் தபால் அலுவலகங்களை திறந்தது ஆங்கிலேய அரசு.

வாரன் ஹாஸ்டிங் பிரபு என்கிற இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசின் கவர்னர் தான் மக்களுக்காகவும் இந்த தபால்துறை செயல்படும் என அறிவித்தார். அப்போது, 100 மைல்களுக்கு சுமார் 150 கி.மீ தூரத்துக்கான தபால் கட்டணம் 2 அணா. 10 பைசா அளவுக்கு வசூலிக்கப்பட்டது. அடுத்தடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1854ல் விக்டோரியா மகாராணியின் உருவத்தை தாங்கிய தபால் தலை வெளியிடப்ப்பட்டன. அதில் ஈஸ்ட் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் வெளிவந்தது. இந்த தபால் தலைகள் லண்டனில் அச்சிடப்பட்டு இந்தியாவுக்கு கப்பலில் வந்தன. 1926 ஆம் ஆண்டில் நாசிக் செக்யூரிட்டி பிரஸ் தொடங்கிய பின் அஞ்சல் தலைகள் இந்தியாவில் அச்சிட துவங்கினர்.

உலகின் முதலாவது அஞ்சல் தலையை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டது. 1840 மே 1ந்தேதி பென்னி பிளேக் என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. அதில் இளம் இளவரசி விக்டோரியா படம் பொறிக்கப்பட்டு இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அதாவது மே 6ந்தேதி இந்தியாவில் அதே அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதனையே இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியீடு என்கிறார்கள்.

அஞ்சல் தலை திரட்டுபவர்களை ஃபிலேட்லி என்பார்கள். உலகத்தில் அஞ்சல் தலை சேகரித்து வைத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரு ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலைகளை ஆயிரம், லட்சம் என தந்து வாங்க உலகத்தில் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் உள்ளனர். தவறாக அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகள் கோடிகளில் விலை போகிறது என்கின்றனர்.

அஞ்சல் தலைகளில் நாடுகளின் கொடிகள், பூக்கள், விலங்குகள், தேச விடுதலைக்காக பாடுப்பட்ட தலைவர்கள், சிறந்த சுற்றுலா தலங்கள், வரலாற்று கட்டிடங்கள் என பலவகையான படங்களை கொண்டு ஒவ்வொரு நாடும் அஞ்சல் தலைகளை வெளியிடுகின்றன. தற்போது பணம் செலுத்தி தனிநபர்கள் தங்களது படத்தை, பெயரை போட்டு அஞ்சல் தலைகளை வெளியிடும் வழக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.