வஉசியின் மறுவருகை ரெங்கையா முருகன் நன்றி : அருஞ்சொல் 21 Nov 2021 வஉசியைப் பற்றி முதல் சரித்திரம் எழுதப்பட்டபோது, அவருக்கு வயது வெறும் 36. தமிழில் உரைநடை வளர்ச்சியின் ஆரம்பக் காலகட்டத்தில், தமிழகத்தைச் சார்ந்த அரசியல் ஆளுமைக்கு வெளிவந்த முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல் அது. சுமார் 113 வருடங்களுக்குப் பிறகு, இப்போது மீண்டும் அந்நூல் வெளியாகி இருக்கிறது. இதற்காக உழைத்த ரெங்கையா முருகன், சக்ரா ராஜசேகரின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது. புத்தகத்தின் சிறப்பை அறிந்துகொள்ள உதவுவதோடு, வஉசி வாழ்க்கையின் சில பகுதிகளையும் அறிந்துகொள்ள இக்கட்டுரை உதவுகிறது 1903 வாக்கில் டி.ஏ. சாமிநாத ஐயரரால் எழுதப்பட்ட, முத்துசாமி ஐயர் மற்றும் சி. ரங்காச்சாரி போன்ற மேதைகளின் வரலாற்று நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாயின. இந்த வரிசையில் தமிழக அரசியல் விழிப்பின் முன்னோடி, 'தி இந்து' மற்றும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைகளின் ஸ்தாபகரான ஜி. சுப்பிரமணிய ஐயர் வரலாறு குருமலைசுந்தரம் பிள்ளையால் எழுதப்பட்டு 1907-ல் வெளிவந்தது. தமிழகத்தில் வாழும் காலத்திலேயே, புகழ்பெற்ற ஓர் அரசியல் ஆளுமைக்கு வாழ்க்கைச் சரித்திரம் வெளிவந்த பெருமைக்கு உரியவராக விளங்குகிறார் ஜி. சுப்பிரமணிய ஐயர். இந்த வாழ்க்கைச் சரித்திரம் வெளிவருகையில் 52 வயதை அவர் நெருங்கிக்கொண்டிருந்தார் (அவருடைய இறப்பின்போது வ.உ.சி. பத்து வெண்பாக்கள் வழி தன் மூலம் இரங்கலை வெளிப்படுத்தினார்). அதுபோல, வஉசி வாழ்க்கை சரிதம் நூலானது 1908இல் எம்.கிருஷ்ணசாமி ஐயரால், ‘ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ என்ற தலைப்பில், சென்னை ஹரிஹர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இந்த வாழ்க்கை சரிதம் வெளியானபோது, வஉசிக்கு வயது 36. இந்நூலில் ஆசிரியர் யார் என்று குறிப்பிடப்படவில்லை. அதேசமயம், எம்.கிருஷ்ணசாமி ஐயர், 'பல பத்திரிகைகளிலே தோன்றின விஷயங்களிலிருந்து தொகுக்கப்பட்டது' என வெளியீட்டாளர் மற்றும் தொகுப்பாளராகத் தம்மையே குறிப்பிட்டுள்ளார். வஉசி குறித்து தனது நினைவுகளைப் பகிரும்போது ஒரு முக்கிய செய்தியைப் பகிர்கிறார் பி.ஸ்ரீ. அதாவது, பரலி சு.நெல்லையப்பர் மூலமாக அறிந்துகொண்ட செய்தியாக, வஉசியின் சரித்திரத்தைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்ட ஆசிரியர் எஸ்.வேதமூர்த்தி முதலியார் என்கிறார். யார் இந்த வேதமூர்த்தி முதலியார்? பி.ஸ்ரீ. வாக்கின் மூலமே நாம் அறிந்துகொள்ள முடிவது இதுதான். வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனி ஆரம்பித்த காலத்தில், ‘சர்வஜன மித்திரன்’ தமிழ்ப் பத்திரிகையை நடத்தியவர் எஸ்.வேதமூர்த்தி முதலியார். இவரைத்தான் வஉசி, பிரான்சுக்கு அனுப்பி இரண்டு கப்பல்கள் வாங்கிவரச் செய்திருந்தாராம். அந்த இரண்டு கப்பல்களில் ஒரு கப்பல் பழுதடைந்த கப்பல் என்று சொல்லப்படுகிறது. இதனால் வஉசிக்கும் வேதமூர்த்தி முதலியாருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு நட்பில் பிளவு உண்டாகி விலகிவிட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், 1908இல் வஉசி ராஜநிந்தனை வழக்கில் தண்டிக்கப்படுகிறார். இந்தச் சமயத்தில் எஸ்.வேதமூர்த்தி முதலியார் வஉசியின் இக்கட்டான நிலையை அறிந்து மனம் விசனம் அடைந்து கப்பல் முயற்சிக்காக எப்படியெல்லாம் வஉசி பாடுபட்டார் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டி, வஉசி வாழ்க்கைச் சரிதத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். வஉசி சிறையிலிருந்து வெளிவந்த வேளையில் சென்னையில் வேதமூர்த்தி முதலியார் அவரைச் சந்திக்க முற்பட்டிருக்கிறார். ஆனால், ஒருமித்த கருத்துடன் பழைய மாதிரி இருவரும் சேர்ந்து வேலைசெய்ய முற்படவில்லை என்று தெரியவருகிறது. இந்த வேதமூர்த்தி முதலியார், ‘பீப்புள்ஸ் கார்டியன்’ ( People’s Guardian ) என்ற ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து அதுவும் சரியாக இயங்கவில்லை என்றும் தெரிகிறது. திருநெல்வேலி பாலம் என்று அன்றைய நாளில் அழைக்கப்பட்ட திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில், பெரிய ரஸ்தாவிலே ‘சர்வஜன மித்திரன்’ பத்திரிகை அலுவலகம் இயங்கிவந்ததாக பி.ஸ்ரீ. குறிப்பிடுகிறார். பி.ஸ்ரீ. கூறும் இத்தகு செய்திகள் மூலம், எம்.கிருஷ்ணசாமி ஐயர் குறிப்பிடுகிற மாதிரி பல பத்திரிகை விஷயங்களிலிருந்து தொகுக்கப்பட்டது இந்நூல்; அதன் மூல ஆசிரியர் எஸ். வேதமூர்த்தி முதலியார் என்று நாம் அனுமானமாகக் கொள்ள முற்பட்டாலும் வஉசி தனது சுயசரிதையில் எங்கேனும் கப்பல் வாங்கி வர இவர் பெயரைப் பதிந்துள்ள குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. 1909, ஜூலை 24 அன்று ‘இந்தியா’ பத்திரிகையில் வெளிவந்த விளம்பரத்தில், ‘நமது ஆபிஸில் கிடைக்கக்கூடிய தமிழ்ப் புத்தகங்கள்’ என்ற மேற்தலைப்பிடப்பட்டு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை படம் 1-க்கு 0-0-6, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரித்திரம் 0-3-0, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரித்திரம் (இங்கிலீஷ் புத்தகங்கள்) 0-6-0 என்று வரிசைப்படுத்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் ‘இந்தியா’ அலுவலகத்தில் வஉசியின் படமும், வஉசியின் வரலாறும் கிடைத்துள்ளன என்பதை அறிய முடிகிறது. 1908ஆம் ஆண்டு தமிழில் வஉசி வரலாற்று நூலை வெளியிட்ட எம். கிருஷ்ணசாமி ஐயர் 1909ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் அப்படி ஒரு நூலை வெளியிட்டுள்ளார். ஆங்கில மொழியில் வெளியிடுகையில் இந்தியாவில் தொன்மைக் காலத்திலிருந்து கடல் ஆதிக்கம் எப்படி இருந்தது; காலப்போக்கில் கடல் ஆதிக்கம் நம் கையிலிருந்து நழுவி எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது என்பன குறித்து தனியாக விளக்கங்கள் சேர்க்கப்பட்டு, வஉசியின் வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. அப்போதைய ஆங்கிலம் படிக்கும் வாசகர்களுக்காகவும், வஉசி இராஜ நிந்தனை குற்ற வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்ததால், அரசியல் சார்ந்த வாசகங்கள் தவிர்த்தும், சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு எப்படி வஉசி, தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒப்புவித்து செயல்பட்டார்; ஆங்கிலேயர்களுக்கு எதிராக எப்படி சாதித்துள்ளார் என்பதை விவரித்தும் ஆங்கிலத்தில் இந்த நூல் வெளியிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீரச் சிதம்பரம் விதைத்துப் பாரதி பாட்டில் பழுத்த தியாகக் கனி பரலி சு.நெல்லையப்பர்; தமக்காக வாழாமல் பாரதிக்கும், சிதம்பரனாருக்குமே வாழ்ந்தவர். கோவை சிறையில் வஉசி செக்கிழுத்ததைக் கண்டு சகிக்காமல், 28-11-1908இல் தன்னுடைய நெஞ்சக் கொதிப்பினை ‘துன்பம் சகியான்’ என்ற புனைப்பெயரில் கட்டுரையாக எழுதி வெளிக்கொணர்ந்தவர் எழுதியவர் நெல்லையப்பர். 1910ஆம் ஆண்டு பாரதி நடத்திய ‘கர்மயோகி’ இதழில் ‘ஸ்ரீமான் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளையுடன் சந்திப்பு’ என்ற கட்டுரையையும் வெளியிட்டவர். இந்த நெல்லையப்பரைப் பலரும், வஉசி சரித்திரத்தை எழுத வேண்டி விரும்பிக் கேட்ட நிலையில் 1944ஆம் ஆண்டு திரு.வி.க. முன்னுரையுடன் ‘வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம்’ என்ற பெயரில் அப்படி ஒரு நூலை வெளியிட்டார். ஆனாலும், வஉசி, அவர்தம் குடும்பத்தினரின் பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் உடனிருந்தவர் என்றாலும், வஉசியின் முழுமையான சரித்திரம் ஒன்றை அவர் எழுதவில்லை என்பது பெருங்குறை ஆகும். ஆக, 1908ஆம் ஆண்டு தமிழிலும், 1909ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் வஉசியின் 36-வது வயதில் அவர் சிறைக்குள்ளிருக்கும்போது வெளிவந்த வஉசியின் சரிதம் தவிர, அடுத்து ஒரு வரலாற்று நூல், 35 வருடங்களுக்குப் பிறகு, ம.பொ.சிவஞானத்தால் எழுதப்பட்ட நூலாக, 1944ஆம் ஆண்டில் வெளியானது; அது ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற தலைப்பில் வெளியானது! ம.பொ.சியின் கன்னிப்படைப்பு வஉசி வாழ்க்கை வரலாறு நூலே ஆகும். நாம் முன்னதாகப் பேசிக்கொண்டிருக்கும், 1908 மற்றும் 1909 தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியான 'வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை சரிதம்' நூல்களுக்கு அதற்குப் பிறகு மீண்டும் மறுபதிப்பு வரவில்லை என்றே தோன்றுகிறது. வ.உ.சி. சம்பந்தப்பட்ட ஆய்வு நூல்களிலும் நூலடைவில் இது சம்பந்தமான நூலடைவை மட்டுமே காண முடிகிறது. ஆங்கிலத்தில் வெளிவந்த நூல் தொடர்பாக அதிகமான விஷயங்களை அறிய முடியவில்லை. ஆ. இரா. வேங்கடாசலபதி தொகுத்த ‘வஉசியும் பாரதியும்’ நூலில் பக்கம் 98இல் ஒரு குறிப்பு இருக்கிறது: “இந்தியா பத்திரிகையில் வெளியான - ஆங்கில மொழியில் எழுதப்பட்ட வஉசி வரலாறு எதுவெனத் தெரியவில்லை; 1909இல், ‘The Life Sketch of Sjt V.O.Chidambaram Pillai with a prefatory essay on India as a Maritime Power’ என்ற நூல் சென்னையிலிருந்து வெளிவந்ததாக ஒரு குறிப்பு உண்டு. இந்நூல் கிடைக்கப்பெறவில்லை!” மேற்கண்ட நூலின் பிரதியை லண்டனிலுள்ள நூலகத்திலிருந்து பெற்றுத் தந்தவர் எனது நண்பர் கோவையைச் சார்ந்த விஜயகுமார். லண்டனில் உள்ள அவருடைய நண்பர் சதீஷ்பாபு மூலமாக இந்த அரிய ஆவணத்தைப் பெற்றுத் தந்தார். 1908ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ நூலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இருந்து பெற்றேன். வெளிநாட்டில் தொடர்புகொண்டு ஒரு நூல் பெற்றதைவிட உள்ளூர் நூலகத்தில் ஒரு நூலினைப் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது என்பது என் அனுபவம். 1908ஆம் ஆண்டு வஉசி, இராஜ நிந்தனை குற்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை அடைந்து சிறைக்குச் சென்றபோது பெரும் மக்கள் கூட்டம் அவருக்குப் பின் இருந்தது; சிறைத் தண்டனை காலம் முடிவடைந்து 1912ஆம் ஆண்டு திரும்பி வருகையில் அவரை வரவேற்க அவர் சார்ந்த கட்சியினரோ, தமிழக மக்களோ என்று ஒருவர்கூட செல்லவில்லை. அரசியல் யுகம் மெல்ல மெல்ல மாறியது. அன்னிபெசன்ட் வருகை, முதல் உலக யுத்தத்தைத் தொடர்ந்து காந்திய யுகமாக மாறிய தருணத்தில் தீவிர அரசியலிலிருந்து வஉசி விலகியிருந்தார். இப்போது தொழிற்சங்கச் செயற்பாடுகளுடனும், தமிழ் இலக்கியங்களுடனும் உறவு கொண்டாடிக்கொண்டிருந்தார் அவர். வஉசியின் மறைவுக்குப் பிறகு ம.பொ.சிவஞானமே மீண்டும் பொதுமக்களிடம் வஉசி குறித்த விழிப்புணர்வைக் கொண்டுசெல்ல முயற்சி செய்கிறார். கட்டுரை, ஆளுமைகள், புத்தகங்கள் 18 நிமிட வாசிப்பு வஉசியின் மறுவருகை ரெங்கையா முருகன் 21 Nov 2021, 5:00 am 0 வஉசியைப் பற்றி முதல் சரித்திரம் எழுதப்பட்டபோது, அவருக்கு வயது வெறும் 36. தமிழில் உரைநடை வளர்ச்சியின் ஆரம்பக் காலகட்டத்தில், தமிழகத்தைச் சார்ந்த அரசியல் ஆளுமைக்கு வெளிவந்த முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல் அது. சுமார் 113 வருடங்களுக்குப் பிறகு, இப்போது மீண்டும் அந்நூல் வெளியாகி இருக்கிறது. இதற்காக உழைத்த ரெங்கையா முருகன், சக்ரா ராஜசேகரின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது. புத்தகத்தின் சிறப்பை அறிந்துகொள்ள உதவுவதோடு, வஉசி வாழ்க்கையின் சில பகுதிகளையும் அறிந்துகொள்ள இக்கட்டுரை உதவுகிறது. 1903 வாக்கில் டி.ஏ. சாமிநாத ஐயரரால் எழுதப்பட்ட, முத்துசாமி ஐயர் மற்றும் சி. ரங்காச்சாரி போன்ற மேதைகளின் வரலாற்று நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாயின. இந்த வரிசையில் தமிழக அரசியல் விழிப்பின் முன்னோடி, 'தி இந்து' மற்றும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைகளின் ஸ்தாபகரான ஜி. சுப்பிரமணிய ஐயர் வரலாறு குருமலைசுந்தரம் பிள்ளையால் எழுதப்பட்டு 1907-ல் வெளிவந்தது. தமிழகத்தில் வாழும் காலத்திலேயே, புகழ்பெற்ற ஓர் அரசியல் ஆளுமைக்கு வாழ்க்கைச் சரித்திரம் வெளிவந்த பெருமைக்கு உரியவராக விளங்குகிறார் ஜி. சுப்பிரமணிய ஐயர். இந்த வாழ்க்கைச் சரித்திரம் வெளிவருகையில் 52 வயதை அவர் நெருங்கிக்கொண்டிருந்தார் (அவருடைய இறப்பின்போது வ.உ.சி. பத்து வெண்பாக்கள் வழி தன் மூலம் இரங்கலை வெளிப்படுத்தினார்). அதுபோல, வஉசி வாழ்க்கை சரிதம் நூலானது 1908இல் எம்.கிருஷ்ணசாமி ஐயரால், ‘ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ என்ற தலைப்பில், சென்னை ஹரிஹர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இந்த வாழ்க்கை சரிதம் வெளியானபோது, வஉசிக்கு வயது 36. இந்நூலில் ஆசிரியர் யார் என்று குறிப்பிடப்படவில்லை. அதேசமயம், எம்.கிருஷ்ணசாமி ஐயர், 'பல பத்திரிகைகளிலே தோன்றின விஷயங்களிலிருந்து தொகுக்கப்பட்டது' என வெளியீட்டாளர் மற்றும் தொகுப்பாளராகத் தம்மையே குறிப்பிட்டுள்ளார். வஉசி குறித்து தனது நினைவுகளைப் பகிரும்போது ஒரு முக்கிய செய்தியைப் பகிர்கிறார் பி.ஸ்ரீ. அதாவது, பரலி சு.நெல்லையப்பர் மூலமாக அறிந்துகொண்ட செய்தியாக, வஉசியின் சரித்திரத்தைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்ட ஆசிரியர் எஸ்.வேதமூர்த்தி முதலியார் என்கிறார். Ω யார் இந்த வேதமூர்த்தி முதலியார்? பி.ஸ்ரீ. வாக்கின் மூலமே நாம் அறிந்துகொள்ள முடிவது இதுதான். வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனி ஆரம்பித்த காலத்தில், ‘சர்வஜன மித்திரன்’ தமிழ்ப் பத்திரிகையை நடத்தியவர் எஸ்.வேதமூர்த்தி முதலியார். இவரைத்தான் வஉசி, பிரான்சுக்கு அனுப்பி இரண்டு கப்பல்கள் வாங்கிவரச் செய்திருந்தாராம். அந்த இரண்டு கப்பல்களில் ஒரு கப்பல் பழுதடைந்த கப்பல் என்று சொல்லப்படுகிறது. இதனால் வஉசிக்கும் வேதமூர்த்தி முதலியாருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு நட்பில் பிளவு உண்டாகி விலகிவிட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், 1908இல் வஉசி ராஜநிந்தனை வழக்கில் தண்டிக்கப்படுகிறார். இந்தச் சமயத்தில் எஸ்.வேதமூர்த்தி முதலியார் வஉசியின் இக்கட்டான நிலையை அறிந்து மனம் விசனம் அடைந்து கப்பல் முயற்சிக்காக எப்படியெல்லாம் வஉசி பாடுபட்டார் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டி, வஉசி வாழ்க்கைச் சரிதத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். வஉசி சிறையிலிருந்து வெளிவந்த வேளையில் சென்னையில் வேதமூர்த்தி முதலியார் அவரைச் சந்திக்க முற்பட்டிருக்கிறார். ஆனால், ஒருமித்த கருத்துடன் பழைய மாதிரி இருவரும் சேர்ந்து வேலைசெய்ய முற்படவில்லை என்று தெரியவருகிறது. இந்த வேதமூர்த்தி முதலியார், ‘பீப்புள்ஸ் கார்டியன்’ ( People’s Guardian ) என்ற ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து அதுவும் சரியாக இயங்கவில்லை என்றும் தெரிகிறது. திருநெல்வேலி பாலம் என்று அன்றைய நாளில் அழைக்கப்பட்ட திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில், பெரிய ரஸ்தாவிலே ‘சர்வஜன மித்திரன்’ பத்திரிகை அலுவலகம் இயங்கிவந்ததாக பி.ஸ்ரீ. குறிப்பிடுகிறார். பி.ஸ்ரீ. கூறும் இத்தகு செய்திகள் மூலம், எம்.கிருஷ்ணசாமி ஐயர் குறிப்பிடுகிற மாதிரி பல பத்திரிகை விஷயங்களிலிருந்து தொகுக்கப்பட்டது இந்நூல்; அதன் மூல ஆசிரியர் எஸ். வேதமூர்த்தி முதலியார் என்று நாம் அனுமானமாகக் கொள்ள முற்பட்டாலும் வஉசி தனது சுயசரிதையில் எங்கேனும் கப்பல் வாங்கி வர இவர் பெயரைப் பதிந்துள்ள குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. 1909, ஜூலை 24 அன்று ‘இந்தியா’ பத்திரிகையில் வெளிவந்த விளம்பரத்தில், ‘நமது ஆபிஸில் கிடைக்கக்கூடிய தமிழ்ப் புத்தகங்கள்’ என்ற மேற்தலைப்பிடப்பட்டு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை படம் 1-க்கு 0-0-6, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரித்திரம் 0-3-0, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரித்திரம் (இங்கிலீஷ் புத்தகங்கள்) 0-6-0 என்று வரிசைப்படுத்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் ‘இந்தியா’ அலுவலகத்தில் வஉசியின் படமும், வஉசியின் வரலாறும் கிடைத்துள்ளன என்பதை அறிய முடிகிறது. 1908ஆம் ஆண்டு தமிழில் வஉசி வரலாற்று நூலை வெளியிட்ட எம். கிருஷ்ணசாமி ஐயர் 1909ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் அப்படி ஒரு நூலை வெளியிட்டுள்ளார். ஆங்கில மொழியில் வெளியிடுகையில் இந்தியாவில் தொன்மைக் காலத்திலிருந்து கடல் ஆதிக்கம் எப்படி இருந்தது; காலப்போக்கில் கடல் ஆதிக்கம் நம் கையிலிருந்து நழுவி எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது என்பன குறித்து தனியாக விளக்கங்கள் சேர்க்கப்பட்டு, வஉசியின் வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. அப்போதைய ஆங்கிலம் படிக்கும் வாசகர்களுக்காகவும், வஉசி இராஜ நிந்தனை குற்ற வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்ததால், அரசியல் சார்ந்த வாசகங்கள் தவிர்த்தும், சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு எப்படி வஉசி, தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒப்புவித்து செயல்பட்டார்; ஆங்கிலேயர்களுக்கு எதிராக எப்படி சாதித்துள்ளார் என்பதை விவரித்தும் ஆங்கிலத்தில் இந்த நூல் வெளியிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீரச் சிதம்பரம் விதைத்துப் பாரதி பாட்டில் பழுத்த தியாகக் கனி பரலி சு.நெல்லையப்பர்; தமக்காக வாழாமல் பாரதிக்கும், சிதம்பரனாருக்குமே வாழ்ந்தவர். கோவை சிறையில் வஉசி செக்கிழுத்ததைக் கண்டு சகிக்காமல், 28-11-1908இல் தன்னுடைய நெஞ்சக் கொதிப்பினை ‘துன்பம் சகியான்’ என்ற புனைப்பெயரில் கட்டுரையாக எழுதி வெளிக்கொணர்ந்தவர் எழுதியவர் நெல்லையப்பர். 1910ஆம் ஆண்டு பாரதி நடத்திய ‘கர்மயோகி’ இதழில் ‘ஸ்ரீமான் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளையுடன் சந்திப்பு’ என்ற கட்டுரையையும் வெளியிட்டவர். இந்த நெல்லையப்பரைப் பலரும், வஉசி சரித்திரத்தை எழுத வேண்டி விரும்பிக் கேட்ட நிலையில் 1944ஆம் ஆண்டு திரு.வி.க. முன்னுரையுடன் ‘வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம்’ என்ற பெயரில் அப்படி ஒரு நூலை வெளியிட்டார். ஆனாலும், வஉசி, அவர்தம் குடும்பத்தினரின் பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் உடனிருந்தவர் என்றாலும், வஉசியின் முழுமையான சரித்திரம் ஒன்றை அவர் எழுதவில்லை என்பது பெருங்குறை ஆகும். ஆக, 1908ஆம் ஆண்டு தமிழிலும், 1909ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் வஉசியின் 36-வது வயதில் அவர் சிறைக்குள்ளிருக்கும்போது வெளிவந்த வஉசியின் சரிதம் தவிர, அடுத்து ஒரு வரலாற்று நூல், 35 வருடங்களுக்குப் பிறகு, ம.பொ.சிவஞானத்தால் எழுதப்பட்ட நூலாக, 1944ஆம் ஆண்டில் வெளியானது; அது ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற தலைப்பில் வெளியானது! Ω ம.பொ.சியின் கன்னிப்படைப்பு வஉசி வாழ்க்கை வரலாறு நூலே ஆகும். நாம் முன்னதாகப் பேசிக்கொண்டிருக்கும், 1908 மற்றும் 1909 தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியான 'வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை சரிதம்' நூல்களுக்கு அதற்குப் பிறகு மீண்டும் மறுபதிப்பு வரவில்லை என்றே தோன்றுகிறது. வ.உ.சி. சம்பந்தப்பட்ட ஆய்வு நூல்களிலும் நூலடைவில் இது சம்பந்தமான நூலடைவை மட்டுமே காண முடிகிறது. ஆங்கிலத்தில் வெளிவந்த நூல் தொடர்பாக அதிகமான விஷயங்களை அறிய முடியவில்லை. ஆ. இரா. வேங்கடாசலபதி தொகுத்த ‘வஉசியும் பாரதியும்’ நூலில் பக்கம் 98இல் ஒரு குறிப்பு இருக்கிறது: “இந்தியா பத்திரிகையில் வெளியான - ஆங்கில மொழியில் எழுதப்பட்ட வஉசி வரலாறு எதுவெனத் தெரியவில்லை; 1909இல், ‘The Life Sketch of Sjt V.O.Chidambaram Pillai with a prefatory essay on India as a Maritime Power’ என்ற நூல் சென்னையிலிருந்து வெளிவந்ததாக ஒரு குறிப்பு உண்டு. இந்நூல் கிடைக்கப்பெறவில்லை!” மேற்கண்ட நூலின் பிரதியை லண்டனிலுள்ள நூலகத்திலிருந்து பெற்றுத் தந்தவர் எனது நண்பர் கோவையைச் சார்ந்த விஜயகுமார். லண்டனில் உள்ள அவருடைய நண்பர் சதீஷ்பாபு மூலமாக இந்த அரிய ஆவணத்தைப் பெற்றுத் தந்தார். 1908ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ நூலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இருந்து பெற்றேன். வெளிநாட்டில் தொடர்புகொண்டு ஒரு நூல் பெற்றதைவிட உள்ளூர் நூலகத்தில் ஒரு நூலினைப் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது என்பது என் அனுபவம். 1908ஆம் ஆண்டு வஉசி, இராஜ நிந்தனை குற்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை அடைந்து சிறைக்குச் சென்றபோது பெரும் மக்கள் கூட்டம் அவருக்குப் பின் இருந்தது; சிறைத் தண்டனை காலம் முடிவடைந்து 1912ஆம் ஆண்டு திரும்பி வருகையில் அவரை வரவேற்க அவர் சார்ந்த கட்சியினரோ, தமிழக மக்களோ என்று ஒருவர்கூட செல்லவில்லை. அரசியல் யுகம் மெல்ல மெல்ல மாறியது. அன்னிபெசன்ட் வருகை, முதல் உலக யுத்தத்தைத் தொடர்ந்து காந்திய யுகமாக மாறிய தருணத்தில் தீவிர அரசியலிலிருந்து வஉசி விலகியிருந்தார். இப்போது தொழிற்சங்கச் செயற்பாடுகளுடனும், தமிழ் இலக்கியங்களுடனும் உறவு கொண்டாடிக்கொண்டிருந்தார் அவர். வஉசியின் மறைவுக்குப் பிறகு ம.பொ.சிவஞானமே மீண்டும் பொதுமக்களிடம் வஉசி குறித்த விழிப்புணர்வைக் கொண்டுசெல்ல முயற்சி செய்கிறார். ம.பொ.சி.யைத் தொடர்ந்து பரலி சு. நெல்லையப்பர், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், இ.மு. சுப்பிரமணிய பிள்ளை, முல்லை முத்தையா, நா. இராமையா பிள்ளை, என்.வி. கலைமணி, மா. சண்முக சுப்பிரமணியம், பி. வேலாயுதம் பிள்ளை போன்றோரும் வஉசி மறைவுக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதி புகழ் பரப்பினர். பல்வேறு தமிழ் ஆளுமைகள் பாரதியார், திரு.வி.க., வரகவி அ.சுப்பிரமணிய பாரதி, ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், பி.ஸ்ரீ., கி.ஆ.பெ.விசுவநாதம், வையாபுரி பிள்ளை, பண்டிதர் அ.கி. நாயுடு, வ.ரா., சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், எஸ்.என். சோமையாஜுலு, அவ்வை டி.கே. சண்முகம், எம்.சி. வீரபாகு, சிதம்பரம் தண்டபாணிபிள்ளை, துரை அடிகளார், கல்கி, அ.சா. ஞானசம்பந்தன் மற்றும் பலர் தங்களுடைய கட்டுரைகளில் வஉசி குறித்த ஞாபக அலைகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசன் முதல் சுரதா, முத்துலிங்கம் வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கவிஞர்களும் வஉசியின் வாழ்க்கையைக் கவிதை வடிவில் எழுதிப் புகழாரம் சூட்டியுள்ளனர். வஉசி நூற்றாண்டு விழாவின்போது, 'டெல்லி மெட்ரிக்', பம்பாய் தமிழ்ச் சங்கம், கோவை சைவ மக்கள் பேரவை, கழக வெளியீடாகிய 'செந்தமிழ்ச் செல்வி' இதழ் போன்றவை கொண்டுவந்த கொண்டுவந்த வெளியீடுகளான 'விடுதலை வீரர் வ.உ.சி. நூற்றாண்டு விழா மலர்'கள், கவிஞர் சுரதா தொகுத்த 'வ.உ.சி. மலர்' போன்றவற்றில் வஉசி வாழ்க்கை குறித்து பல்வேறு பதிவுகள் வெளியாகியுள்ளன. வஉசியை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர்கள் என்று ம.பொ.சி., ஜீவா, வரதராஜுலு நாயுடு, பி.ஆர்.பந்துலு, சின்ன அண்ணாமலை, சிவாஜி கணேசன், ஏ.பி. நாகராசன் ஆகியோரைக் குறிப்பிடலாம். வஉசி 1936ஆம் ஆண்டு மறைந்தபோது பல தமிழ்ப் பத்திரிகைகளில், சில வரிச் செய்திகளாகவே அவர் மறைந்த செய்தி வெளியான வேளையில், தந்தை பெரியார் தமது, ‘குடிஅரசு’ பத்திரிகையின் நவம்பர் 22, 1936 மற்றும் நவம்பர் 29, 1936 இதழ்களில் சிறப்பான இரண்டு தலையங்கங்கள் எழுதி வஉசிக்குப் புகழ் சேர்த்தார். அண்ணா உலகத் தமிழ் மாநாட்டையொட்டி பல தமிழ் ஆளுமைகளுக்கு சிலை எடுத்து சிறப்பு சேர்த்தபோது, வஉசிக்கும் அமைந்த சிலை உயிரோவியமாக நிற்கிறது. வஉசி நூற்றாண்டு விழாவினை சிறப்புற நடத்த முயற்சி எடுத்தவர் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர். நூற்றாண்டு விழா சார்பாக வஉசி நூற்றாண்டு விழா மலரை அவர் வெளியிட்டார். இப்போது, வஉசி 150 விழாவினைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருப்பவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். வஉசி வாழ்க்கை வரலாற்றை முன்னெடுத்துச் சென்றதில் மறைந்த பெ.சு.மணி, ம.ரா. அரசு ஆகியோரும், இன்றைய நாளில் ஆ.சிவசுப்பிரமணியன், ஆ.இரா.வேங்கடாசலபதி, வீ.அரசு, செ. திவான், சங்கர வள்ளிநாயகம், திரவியம், குருசாமி மயில்வாகனன், அனிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் முக்கியப் பங்காற்றிவருகின்றனர் 1908ஆம் ஆண்டு வெளியான வஉசி சரித்திரத்தில் நாம் அறியாத பல தனி குணாம்சங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது வழக்குரைஞர் தொழிலில் எவ்வளவு திறம்பட இருந்தார்; கிரிமினல் வழக்குகளில் அவரது வாதத் திறமை எப்படி எதிரிகளை சரண் அடைய வைக்கும் வகையில் இருந்தது; ஏழை, எளிய மக்களிடம் கருணை உள்ளத்துடன் எப்படி நீதி பரிபாலனத்துக்காக இனாமாக வாதிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனும் விஷயங்களையெல்லாம் சொல்லலாம். சுதேச முயற்சிக்காக தன்னையே களப்பலி ஆக்கிக்கொள்வதற்குத் தயார்படுத்திக்கொள்ள நூறு சதவீத சுதேச வாழ்க்கையை மேற்கொண்ட வஉசியின் அரிய குணாம்சத்தையும் பதிவுசெய்கிறது இந்நூல். கப்பல் வாங்குவதற்கான பகீரத முயற்சிகள், கோரல் ஆலை வேலைநிறுத்தப் போராட்டம், இராஜ நிந்தனை வழக்கு விபரங்கள், பின்ஹே தீர்ப்பு குறித்து அப்போதைய பல பத்திரிகை செய்திகள் போன்ற பல முக்கியமான செய்திகளும் பதிவாகியுள்ளன. தமிழக அரசியல் ஆளுமைகளில் ஒரு துருவ நட்சத்திரமாக விளங்கும் வஉசியின் வாழ்க்கைச் சரிதம் சுமார் 112 வருடங்களுக்குப் பிறகு, அவருடைய 150ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மீள்ப் பதிப்பாகி தமிழர்களின் கையில் தவழ்வது நற்பேறாகும். நூல் விவரங்கள் வ.உ.சி. வரலாற்றுச் சுருக்கம் மீள் பதிப்பாசிரியர்கள்: ரெங்கையா முருகன், சக்ரா ராஜசேகர். விதை பதிப்பகம், சக்ரா அறக்கட்டளை. விலை ரூபாய் 130 புத்தகம் கிடைக்குமிடம்: வள்ளலார் புத்தக நிலையம், 161, A, வ.உ.சி.பூங்கா, ஈரோடு -3, அலைபேசி: 7010047966