*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நிகழ்வுகள்.இடம்:நகராட்சி தொடக்கப்பள்ளி,(கோட்டை)நாமக்கல்.நாள்:19.12.2020.*
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு.க.ஆசைத்தம்பி அவர்கள் தலைமை வகித்தார்.நாமக்கல் ஒன்றிய செயலாளர் திரு.அ.ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட துணைச்செயலாளர் திரு.வெ.வடிவேல் அவர்கள் வரவுசெலவு அறிக்கையினை வாசித்தார்.பாவலர் அய்யா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவராாலும் மலர்மரியாதை செய்யப்பட்டது.மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் கூட்டப் பொருள்குறித்தும்,தீர்மானங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.மாநில செயலாாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் இயக்கவுரையாற்றினார்.திரு.பெ.பழனிசாமி மாநில சொத்துப்பாதுப்புக்குழு உறுப்பினர்,மாவட்ட கொள்கை விளக்கச் செயலாளர் திரு.தங்கவேல்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாரதி,இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீீஷ் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது..அனைத்து ஒன்றியங்களைச் சார்ந்த மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட துணைச் செயலாளர் திருமதி.லதா அவர்கள் நன்றியுரையாற்றினார்.