வெள்ளி, 15 ஜனவரி, 2021

*🏵️யூடிஆர் (கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை...!*

*🏵️யூடிஆர் (கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை...!*

UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது, சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது, கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர் போன்ற பல ஆவண பிழைகளால் ஏற்படும் சிக்கல்கள் பல பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்றம் செய்தல் இலகு அல்ல, வீடுகட்ட அங்கீகாரம் கிடைப்பது கடினம்,  கடன் கிடைக்கபெறுவது கடினம், போன்ற பல சிக்கல்கள் எழும். இதனை வட்டாசிரியர் அலுவலகம் அணுகி சரி செய்தல் முறை.

UDR / கிராம நத்தம்/ FMB யில் திருத்தங்கள் செய்ய என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதின் நடைமுறை விளக்கம்.

முதலில் உங்கள் ஆவணத்தில் உள்ள பிழை என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், இதில் உங்களுக்கு தெளிவில்லை என்றால் அறிந்தவர்களிடம்  விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளுதல் அவசியம். என்ன தவறு, தவறுதலுக்கான காரணம் இவற்றை அறிந்து கொண்டால், இதனை சரி செய்தல் இலகுவாகும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக  எழுதுதல் வேண்டும். மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம்.

மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று  சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால்  மூலமாகவும் அனுப்பலாம். நேரிடையாக சென்று கொடுத்தால் அத்தாட்சி பெறுதல் விதிகளின்படி அரசு அலுவலகத்தில் இருந்து ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்)  பெற வேண்டும்.  உங்கள் மனுவில் பணியாளர் & நிர்வாக சீர்திருத்தம் சட்ட ஆணை 114 , 66, 89 கீழ் ஏற்பு ரசீது கொடுக்கும் படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக  எழுதுதல் வேண்டும். 

மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம். மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று  சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால்  மூலமாகவும் அனுப்பலாம்.

பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், பதிவு தபால் அத்தாச்சி வந்தவுடன், DRO அலுவலகம் நேரிடையாக சென்று தபால் பிரிவில் இருப்பவரிடம் மனுவின் நிலைமை, மற்றும் அதற்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு, உரிய நபரிடம் நகர்ந்து இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். தேவைபட்டால் DRO வை நேரிடையாக சந்திக்க வேண்டும்.

DRO அலுவலகத்தில் இருந்து, மேற்படி மனு, உங்கள் ஊர் வட்டாசியருக்கு FORWARD செய்யப்படும். பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், அதற்கான இன்னொரு நகல் கடிதம் நமக்கு வந்து சேரும் , அந்த கடிதம் கிடைத்தவுடன் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகம் நேரிடையாக சென்று அங்கு இருக்கும் தபால் பிரிவை அணுகி உங்கள் மனு ”எண்” ஆகிவிட்டதா என்றும், அது சம்பந்தப்பட்ட நபருக்கு சென்று விட்டதா என பார்த்துவிட்டு, தேவைபட்டால் துணை வட்டாட்சியர் , வட்டாட்சியரை சந்தித்து விவரங்களை சொல்ல வேண்டும்.

மேற்படி மனு வருவாய் ஆய்வாளருக்கு (RI) FORWARD செய்யப்படும். நாம் அவரை பின் தொடர்ந்து அதனை VAO க்கு வர வைக்க வேண்டும் . VAO வை நேரடியாக சந்தித்து கிராம கணக்கு விவரங்கள் , மற்ற கள விவரங்கள் பற்றி மனுவை ஒட்டி VAO விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தயார் செய்வர் . அப்பொழுது அவருக்கு தேவையான விவரங்களை நாம் தர வேண்டும்.

 இதன்பின் இந்த மனுவானது, VAO விடம் இருந்து, RIக்கும், RI இடம் இருந்து வட்டாசிரியருக்கு அனுப்பப்படும். கூட்டுப்பட்டா  சிக்கல்கள் பட்டா மேல் முறையீடு அதிகரியிடமும், FMB சிக்கல்கள் தலைமை சர்வேயருக்கும் , கிராம நத்தம் பிரச்சனைகள் நத்தம் அலுவலகத்திற்கு செல்லும். பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு விசாரணை அழைப்பானை வரும்.

அழைப்பாணையில் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் ஆஜராகி விசாரணையில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்து, தாங்கள் கொடுத்த பதில்களை ஆவணங்களாக உருவாக்கி உங்களிடம் கையெழுத்து பெற்று மேற்படி ரிப்போர்ட்களை DRO விற்கு அனுப்பி வைப்பார்கள்.

எந்த வித சிக்கலும் பிரச்சினைகளும் ஆட்சேபனைகளும் உங்கள் பிராதுக்களில் இல்லை என்றால் DRO உத்தரவு போட்டு உங்களுக்கு ஏற்ற நிவாரணம் செய்வார் . உங்கள் ஆவணங்கள் DRO உத்தரவு படி சரி செய்யப்படும். அதுவே ஆட்சேபனைகளும் சிக்கல்களும் எதிர்ப்புகளும் இருந்தால், மேற்படி மனு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்ற விசாரணையில் வழக்காக்கி பதியப்பட்டு , வழக்கு விசாரணை அடிப்படையில் தங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

நன்றி....!

*💊பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!*

*💊பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!*
பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*📘10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது...*

*📘10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது...*

 நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்புதாமதம் காரணமாக 50 சதவீத அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குபின் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாக நடப்பு ஆண்டு1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும்பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.


 
இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டது. தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கும் 50 சதவீதம்வரை பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் நடப்பு கல்வியாண்டில் 60 சதவீத வேலைநாட்கள் முடிந்துவிட்டன. மீதமுள்ள நாட்களில் பாடங்களை நடத்த போதுமான அவகாசம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடஅளவு குறைப்பு 45 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


 
பாடத்திட்டக் குறைப்பு பாடங்கள் வாரியாக மாறுபடும். அதற்கான பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. இதுகுறித்த தொகுப்பறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடுவார். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும்.


 
இதுதவிர, பள்ளிக்கு வர இயலாமல் வீட்டிலிருந்தபடி கல்வி பயிலும் மாணவர்கள், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களைப் படித்தால் போதுமானது. எனவே, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சம் வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

☘️அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.*

*☘️அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.*

*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக , 2020 -21 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” ( Safety & Security at School level ) என்ற தலைப்பில் , பார்வை 1 - இன்படி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் 6,173 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் , 31,297 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.*


*இந்நிலையில் , 19.01.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை 1 இல் உள்ள வழிகாட்டுதல்களின்படி , விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தவும் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை பள்ளிகளிடமிருந்து பெற்று 20.01.2021 ஆம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்தின் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

*📘✍️பள்ளி திறப்பின் போது வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை.*

*📘✍️பள்ளி திறப்பின் போது வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை.*


*பள்ளி திறப்பின் போது வேண்டியவை:*

1. அனைவரும் முகக்கவசம் அணிதல் . 

2. கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் . 

3. பள்ளிக்கு வரும்போதும் , முற்பகல் இடைவேளை , மதிய உணவு இடைவேளை , பிற்பகல் இடைவேளை மற்றும் வீட்டிற்கு செல்லும் போதும் கைகளை சோப்பு கொண்டு கழுவுதல் வேண்டும் . 

4. சமூக இடைவெளி கடைபிடித்தல் 

5. சமூக இடைவெளியைப் பின்பற்றும் பொருட்டு தரையில் வட்டம் / கட்டம் போன்ற குறியீடுகள் வரைதல் . 

6. ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டும் அனுமதி அளித்தல் . 

7. தெர்மல் ஸ்கேனர் ( THERMAL SCANNER ) கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதித்தல் . 

8. பல்ஸ் - ஆக்சிமீட்டர் பயன்படுத்த அறிந்திருத்தல் . 

9. வைட்டமின் மற்றும் துத்தநாக ( ZINC ) மாத்திரைகளை உரிய முறையில் மாணவர்கள் சாப்பிடுவதை உறுதி செய்தல் . 

10. ஆசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருத்தல் , 

11. பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள கோவிட் -19 - SOP ஐ ஆசிரியர்கள் முழுமையாக தெரிந்திருத்தல் . 

12. பள்ளி வளாகத்தில் அதிக அளவிலான குப்பைத் தொட்டிகளை வைத்தல் . 

13. கோவிட் -19 தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் சுவரொட்டிகள் , பதாகைகள் ஆகியவை பள்ளி வளாகத்தில் வைத்திருத்தல் . 

14. அருகாமையிலுள்ள சுகாதார நிலையத்தின் அவசர தொடர்பு எண்களை அறிந்திருத்தல் . 

15. வகுப்பிற்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் , அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட பள்ளிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் நியமித்தல்.

*பள்ளித்திறப்பின்போது செய்யக்கூடாதவை.*

1. 25 மாணவர்களுக்கு மேல் ஒரு வகுப்பறையில் அனுமதிக்கக்கூடாது . 

2.பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புதல் கூடாது , கழிவறை செல்லும் நேரம் , உணவு இடைவேளைகளில் கூட்டம்  

3 . கூடுதலை தவிர்த்தல் . 

4 . உணவு , தண்ணீர் பாட்டில்கள் , எழுதுபொருட்களை பரிமாறிக் கொள்ளுதல் கூடாது . 

5 . இறைவணக்கக் கூட்டம் , கலாச்சார நிகழ்வுகள் , உடற்கல்வி / NSS / NCC / தவிர்க்கப்படவேண்டும் . 

6 . மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே சுற்றித் திரிதல் கூடாது . 

7. வகுப்பறையில் ஆசிரியர்கள் , மாணவர்கள் , முகக்கவசம் அகற்றுதல் கூடாது , 

8 . முகக் கவசம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பொது வெளியில் எறிதல் கூடாது . 

9 . மூடிய வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தவிர்த்தல் , 

10 . தூய்மையற்ற முகக் கவசம் அணிதல் கூடாது . 

11 . கைக்குட்டை , மெல்லிழைத்தாள் பயன்படுத்தாமல் பொதுவெளியில் இருமல் , தும்மல் கூடாது .

12. பயோமெட்ரிக் ( BIOMATRIC ) கைரேகை பதிவு கூடாது . 

13 . குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக்கூடாது . 

14. தேவையற்ற பார்வையாளர்களை நுழைய அனுமதித்தல் கூடாது .

*📘பள்ளி திறப்புக்கான சரிபார்ப்பு பட்டியல்!!!*

பள்ளி திறப்புக்கான சரிபார்ப்பு பட்டியல்!!!

*📘பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.

பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.