திங்கள், 23 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலை மற்றும் திருச்செங்கோடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் (23.04.18-திங்கள்)...

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி
நாமக்கல் பூங்கா சாலை மற்றும் திருச்செங்கோடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் (23.04.18-திங்கள்) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. 

இதில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் தலைமையில் மன்றப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ். மூர்த்தி அவர்களுடன் மன்றத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ரவிக்குமார் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்...

இரண்டு மாவட்டங்களுக்கு பணியிடை பயிற்சி ஒத்தி வைப்பு~ஜுன் மாதம் நடைபெறும் என அறிவிப்பு…

எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் ~கூடுதலாக வசூலித்தால் புகார் அளிக்கலாம்…

போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மொபைல் ஆப்~பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…

எப்ரல்~23 :உலக புத்தக நாள்…


ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம் என்கிறது யுனெஸ்கோ.

 ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடுகிறது என்றும் கூறப்படுகிறது.

குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு...


'குரூப் - 2 தேர்வில் 45 பதவிகளுக்கு மட்டும் வரும் 25ல் கவுன்சிலிங் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப் - 2 பணிகளுக்கான, நேர்முக தேர்வு உள்ள பதவிகளை நிரப்ப எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜன., 22 முதல், பிப்., 19 வரை, நேர்காணல் நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.மீதம் உள்ள, 88 காலியிடங்களில், 45 பதவிகளுக்கு மட்டும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 25ல் நடத்தப்படும்.
இதில், 1 : 5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் பங்கேற்கலாம்.
இதுகுறித்த விபரங்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில்
 http://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, முதல்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று, அடிப்படை சம்பள விகிதம், 9,300 ரூபாயில், ஏதேனும் ஒரு பதவியை தேர்வு செய்தவர்கள், தற்போதைய காலியிடங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.