ஞாயிறு, 4 மார்ச், 2018

HRA & CCA ...

Pay Matrix...

'நாட்டா' தேர்வு~ 40 ஆயிரம் பேர் பதிவு…


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலான, சி.ஓ.ஏ., நடத்தும், நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 

இதற்கான ஆன்லைன் தேர்வு, 2017 முதல் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும், ஒரே நாளில் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான, 'நாட்டா' தேர்வு, ஏப்., 29ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, ஜன., 16ல் துவங்கியது.தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலின், http://www.nata.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் பதிவு செய்தனர். இதில், நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக, சி.ஓ.ஏ.,வட்டாரங்கள் தெரிவித்தன.

10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநிரவல்...

Soon,Computer Science to be allied with science ~Indian Express…

சித்த மருத்துவப் படிப்புக்கும் நிகழாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம்...


சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கும் நிகழ் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநில அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு முறை கடந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கும் 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கை: 

இந்த நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அண்மையில் ஓர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு சேர விரும்புவோர் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இந்தத் தகவலை அந்தந்த மாநில அரசுகள் பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நீட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே 2018-19-ஆம் கல்வியாண்டில் இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு கடிதம்: 

இந்நிலையில் நிகழ் கல்வியாண்டில் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையாகும்.
அதனை தமிழ் தெரிந்த மாணவர்கள் மட்டுமே எளிதில் கற்க முடியும். எனவே, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.

மாணவர்கள் குழப்பம்: 

பிளஸ் டூ தேர்வு தொடங்கிவிட்டது. மேலும், நீட் தேர்வுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த தெளிவான அறிவிப்பு கிடைக்காததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. எனவே, இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மாவட்டத்திற்கு 200 ஆசிரியர்கள் வீதம் 3000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு Digital content creation மற்றும் Digital Assessment creation ICT பயிற்சி...


3000அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு Digital content creation மற்றும் Digital Assessment creation
தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து சுமார் 200 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் இருந்து ஓர் மாவட்டத்திற்கு 100 ஆசிரியர்கள் வீதம் குறைந்தபட்ச கணினி அறிவு மதிப்பிடப்பட்டு  தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 இவர்களில் இருந்து ஓர் மாவட்டத்திற்கு 50 ஆசிரியர்கள் என்ற வீதம் Digital content creation க்கும், 50 ஆசிரியர்களுக்கு Digital Assessment சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படும்.

இதில் இருந்து சிறப்பான முறையில் Digital content மற்றும் Digital Assessment பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களுக்கு மேலும் மெருகேற்றும்  பயிற்சிகள் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. இவர்கள் இனி வரும் நாட்களில் தங்கள் மாவட்டங்களில் MRP களாக Digital content , மற்றும் Digital assessment creation காக  பயிற்சி வழங்கும் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

இவ்வகையான selection ஆனது ஒளிவு  மறைவு இன்றி மாவட்டங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதுவரை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 400 ஆசிரியர்கள் இவ்வகை பயிற்சிகளை முடித்து தயார் நிலையில் உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் இவ்வகை தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி வழங்குதல் முதல் கட்டமாக இந்த கல்வியாண்டுக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தங்கள் மாவட்டங்கிளில் இவ்வகை தேர்ந்தெடுப்பு முறை குறித்த தகவல்களை உங்கள் BRC மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் தலைமைப் பண்பு பயிற்சி - 5.3.18 to 9.3.18...

பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிப்பு...


நியூயார்க்: பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயர் 'WASP-39 B' என்பதாகும்.

இது பூமியில் இருந்து 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. நாசா விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.அந்த கிரகத்தில் இருந்து தண்ணீர் ஆவி ஆவதை வைத்தும், அது எதிரொளிக்கும் நிறத்தை வைத்தும் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.இந்த கிரகத்தில் சனி, பூமியை விட அதிக அளவு தண்ணீர் இருக்கிறது.

சனி கிரகத்தில் அளவை வைத்து கணக்கிட்டால் அதை விட 3 மடங்கு தண்ணீர் இந்த கிரகத்தில் இருக்கிறது. இதுவரை நாசா கண்டுபிடித்த எந்த கிரகத்திலும் இந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது இல்லை.சூரியனை சுற்றும் அதற்கும் சூரியன்அதேபோல் இந்த கிரகமும் அதன் சூரிய குடும்பத்திலேயே இருக்கிறது. இதன் சூரியனுக்கு டபுள்யூஏஎஸ்பி-39 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகம் இருக்கும் என்று கூறப்படவில்லை. ஆனால் இந்த கிரகம் சூரியனை 4 நாட்களுக்கு ஒரு முறை சுற்றுகிறது.

 பூமியில் இருந்து என்ன வித்தியாசம்:

இந்த கிரகம் சூரியனை சுற்றினாலும் தன்னை தானே பூமியைபோல சுற்றுவது இல்லை.இதனால்   இதன் ஒரு பகுதி எப்போது வெயிலாக இருக்கும். ஒரு பகுதி எப்போதும் இருளாக இருக்கும். அதாவது ஒரு பகுதி சூரியனை பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் வெப்பம்பூமிக்கும் சூரியனுக்கும் எவ்வளவு தூரம் இருக்குமோ, அதைவிட 20 மடங்கு குறைந்த தூரம் இந்த கிரகத்திற்கும் அதன் சூரியனுக்கும் இருக்கிறது. இதனால் சூரியன் படும் பகுதியில் 776.7 டிகிரி வரை வெப்பம் இருக்கிறது. இதனால் அங்கு மனிதர்கள் வாழ முடியாது. ஆனால் வேறு உயிரினம் வாழ வாய்ப்புகள் இருக்கிறது.

நாமக்கல் பகுதியில் பகல் வெப்பம் உயரும்~வானிலை மையம் தகவல்...