திங்கள், 24 பிப்ரவரி, 2020

EMIS இணையத்தில் UDISE விவரங்களை 27.02.2020 தேதிக்குள் உள்ளீடு செய்ய அறிவுறுத்தல்- Namakkal CEO


EMIS - UDISE பதிவுகளில் கவனிக்கப்படவேண்டியவை...

1. Student profile  - மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அனைத்து விபரங்களும்  சரியாக இருத்தல்...

2. Staff profile -  ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் விபரங்களும் சரியாக இருத்தல்...

3. Part time instructor - appointed subject -  work , art , Health & physical edn.   மட்டுமே இருத்தல் வேண்டும்.

4. Staff details ~ staff training details  பயிற்சிகள்  எடுத்து க்கொண்ட விபரம் பதிவு செய்தல் வேண்டும்.

5. CWSN மாணவர்கள் விபரம் - student tagging ல் பதிவு செய்தல் வேண்டும்.

6. Toilet , drinking water  சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.

7 . UDISE விபரங்கள் அனைத்தும் விடுபடாமல் பதிவு செய்தல் வேண்டும்.

Emis Udise plus - How to enter the details in Emis website step by step explanations...

EMIS இணையத்தில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் சார்ந்த சுற்றறிக்கை_ Salem CEO


25.02.2020 பரமத்தி ஒன்றிய கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்- மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன்

அன்பானவர்களே! 🙏.
உங்களின்  முருகசெல்வராசன் நெடுநாள்களுக்கு பின் தங்களோடு போராட்டக்களம் நோக்கிய பயணத்திற்கான அழைப்புடன் பேசிட விழைகிறேன்.

‘ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது’ என்பார் மக்கள் சீனத்தின் மகத்தான தலைவர் பெருமகனார் மாசேதுங்.  அப்படித்தான் தாங்கள் எல்லோரும் அதாவது ஆசிரியப் பெருமக்கள் எல்லோரும் உணர வேண்டும் என்றே விரும்புகிறேன். தாங்கள் எல்லோரும் 
நாமக்கல்-பரமத்தி ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின் 10் அம்சக் கோரிக்கைகளை அறிந்திருப்பீர்!வாசித்திருப்பீர்!படித்திருப்பீர்! தங்களின் அனுபவங்களோடு பொருத்திப் பார்த்திருப்பீர்!
ஒப்பிட்டு இருப்பீர்!

பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் பத்து கோரிக்கைகளுக்கும் காரணம் யார்?ஆசிரியர்களா?! அல்ல...
வேறுயார்!? சாட்சாத்...
கல்வித்துறை அலுவலர்களே!

கல்வித்துறை அலுவலர்களின் அசாக்கிரதையும், அலட்சியமும், பொறுப்பின்மையும் ,
கடமையின்மையும்,
பாராமுகமும் தான் பத்து கோரிக்கைகளுக்கும் முழுக்காரணம் என்பேன்.
பத்துக்கோரிக்கைகளுக்கு மட்டுமல்ல...
பெப்ரவரி 25ஆம் நாள் ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கும் 
இம்மாட்சிமை தாங்கிய  அலுவலர்களே முழுக்காரணமாவர் என்பேன்.
 இவ்வாறு அல்லது இப்படி  சொன்னால்;
கூறினால் .
இது மிகையல்ல... இதுவே யெதார்த்தமான உண்மை நிலையாகும்.
 பத்துக் கோரிக்கைகளுக்கும் ,
ஆர்ப்பாட்ட போராட்டங்களுக்கும் 
மூலக்காரண
கர்த்தாவாகிய  கல்வித்துறை அலுவலர்களே, போராட்டத்தினால் ஏற்படும்அனைத்து  விளைவுகளுக்கும் பொறுப்பாவர் என்று அழுத்தமாக பதிவு செய்துக்கொள்கிறேன்.

ஒரு ஆசிரியருக்கு தேர்வுநிலை ஊதியம் நிர்ணயம்  செய்து , இவ்வூதிய நிர்ணயப் பயனை-பலனை இவ்வாசிரியர் துய்த்திட விண்ணப்பித்து இரண்டாண்டு காலம் ஆனாலும்  துய்த்திட இயலாது என்றால், இக்கொடுமையை எங்கே போய் சொல்வது?!இத்துறையின் நிர்வாக இலக்கணத்தை- நிர்வாக அழகியலை என்னவென்று சொல்வது?!

உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெற ஒரு ஆசிரியர்  இளங்கலை கல்வியியல்(பிஎட்) உயர்கல்வியை இரண்டாவது தடவையாக மீண்டுமொரு முறை படித்து  தேர்ந்து வந்து இன்னொரு இரண்டாண்டு காலம்  கழித்து  எதிரில் வந்து நின்றால் கூட ஊக்க ஊதியத்தின் பயனை-பலனை வழங்கிட வக்கற்றத்துறையாகி விட்ட  கல்வித்துறையை எப்படி சீர்த்திருத்துவது?!நெறிப்படுத்துவது?!முறைப்படுத்துவது?!

எங்கெங்கெல்லாம் செல்ல வேண்டுமோ?!சொல்ல வேண்டுமோ?!முறையிட வேண்டுமோ?!அங்கெல்லாம் சென்று வந்தாயிற்று!?
முறையீடு செய்தாயிற்று?!  முட்டி மோதியாற்று?! பலன் என்னவோ பெரும் பூச்சியம் தான்.!

இத்தகு கொடுமைக்கும்,
அக்கிரமத்திற்கும், அராசகத்திற்கும் ஒரு தீர்வு தேட வேண்டாமா?! 
ஒரு முடிவு காண வேண்டாமா?!

இதற்காகவே தங்கள் எல்லோரிடமும் நான் பேசுகிறேன்.

தாங்கள் எல்லோரும்  குழந்தைகளுக்கும், மக்களுக்கும்  சேவை செய்கிறீர்கள்!.
எல்லோருக்கும்  தரமான கல்வி எனும் மத்திய-மாநில அரசுகளின்  இலக்கு-நோக்கம் நிறைவேறிட அல்லும் பகலும் ஆர்வமுடன் தொண்டாற்றுகின்றீர்! இத்தகு பணியினை ஆற்றுவதாலேயே ஆசிரியப் பெருமக்களாகிய தாங்கள் எல்லோரும்  இறைவனுக்கு  இணையாக-நிகராக  வைத்து இன்றும்  போற்றப்படுகின்றீர்!
இத்தகு பெரும் பெருமையும்-
பெருஞ்சிறப்பும் நிறைந்த தங்கள் எல்லோரிடமும்   தெரியாமல் தான்  இவ்வினாவினை முன் வைக்கிறேன்;
எழுப்புகிறேன்;
கேட்கிறேன்.

ஆசிரியப் பெருமக்களாகிய தாங்கள் எல்லோரும்  மேற்கண்டவாறு குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் சேவை செய்கின்றீர்!
ஆமாம், இந்த கல்வித்துறை அலுவலர்கள் யாருக்கு சேவகம் செய்கின்றனர்.?!தங்களில் யாருக்கேனும் தெரிந்தால் ,
யோசித்து, சிந்தித்து , தெளிவாய் ,
உறுதியாய் இத்துறை அலுவலர்களின் பணிகளைப் பட்டியல் இட்டு தாருங்கள்.
நான் தெளிவு  பெற்றுக்கொள்கிறேன்;என்னை முழுமைப்படுத்திக் கொள்கிறேன்.

தாங்கள் எல்லோரும் பள்ளியில் பள்ளிநேரத்தில் மட்டுமல்ல! பள்ளி நேரமல்லாத நேரங்களிலும் பள்ளிக்காக- குழந்தைகளின் கல்விக்காக,
நலனுக்காக உழைக்கின்றீர்!.
எச்ஏபிஎல், எச்ஏஎல்எம், இருக்கிற அட்டை, இல்லாத அட்டை,
லேனிங் அவுட்கம்மிங்,
லேனிங் இன்கம்மிங்,
சிசிஇ ,
ஆன்லைன், ஆப்லைன்சர்வீசு, இஎம்ஐஎச்,
சாலாசித்தி,
யூஐடீஎச்.,
சீரோ மேனேச்மெண்ட் என்றெல்லாம் எத்தனை வசதிக்குறைவுகள், நிர்வாகக் கோளாறுகள்  பெருமளவில் இருந்தாலும்,
இணைய வசதி இல்லை என்றோ,
அலைபேசி வசதி தரப்படவில்லை என்றோ, இவைகள் போன்ற  எதையுமே  வெளியில் சொல்லிக்கொள்ளாமல், எவரையும்,
எதையும் காட்டிக்கொடுக்காமல்  , கார்ப்பரேட் ஐடி கம்பெனி ஆபிசு அளவில்  நிர்வாகம் நடத்தி,
கற்றல்-கற்பித்தல் செய்து, 
இருப்பது-
இல்லாதது,
பொல்லாதது என எல்லாவற்றையும்  அரசின், துறையின் ஆசை அறிந்து  வேலை செய்கின்றீர்! உழைக்கின்றீர்!.

எம்உழைப்பை பாராட்டி சான்றுகளோ, பரிசுகளோ,
பதக்கங்களோ தராது போனாலும் பரவாயில்லை;
தர வேண்டியதை ,
எங்களுக்குரியதை எங்களுக்கு உரிய காலத்தில்  தந்தால் தான் என்ன?!வழங்கினால் தான் என்ன?! என்று தாங்கள் எல்லோரும் ஒருமித்து ,ஒரே குரலில் , கேளாச்செவிகளின் செவிப்பறைகளில்  விழுமளவிற்கு ஓங்கி ஒலித்து வலுவாய் குரலெழுப்பி,
 கை உயர்த்தி கேட்க வேண்டும்;
வலியுறுத்திட வேண்டும்;
கோரிக்கைகளை முழங்கிட வேண்டுமென்றே அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்பின் ஆவேச நெருப்பினில் அநீதிகள் பொசுங்கட்டும்! 

பரமத்தியில் பற்றும் 
சிறுந் தீப்பொறி  அநீதிக்கெதிராய் பெரும் நெருப்பாய் படரட்டும்! பரவட்டும்! 

தங்கள் எல்லோருக்கும் என் பெரும்நன்றி!
--------------------------------
வேர்வையின் மக்களே விழித்தெழுவீர்!
வேள்விகள் தொடங்கட்டும்!
-கவிஞர்.
இன்குலாப்.
----------------------------