செவ்வாய், 30 ஜூன், 2020

Go.Ms.No:288 date 29.6.2020 ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வாழ்நாள் சான்று பெற நேரில் கருவூலத்திற்கு வருவதில் இருந்து இந்த ஆண்டு (2020 ஏப்ரல், மே, ஜூன்) விலக்கு - தமிழக அரசு ஆணை வெளியீடு

*🌐ஜூன் 30, வரலாற்றில் இன்று:பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 30, வரலாற்றில் இன்று.

பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ் பிறந்த தினம் இன்று.

சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் பாரத ரத்னா விருதை பெற்ற மூன்றாவது அறிவியல் அறிஞர் ஆவார். இதற்கு முன்னர் சர்.சி.வி.ராமன்,அப்துல் கலாம் ஆகியோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பிறந்த இவர் தன்னுடைய பட்டப்படிப்பை மைசூர்,பனராஸ் இந்து பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வை அமெரிக்காவின் புர்டூ பல்கலையில் செய்தார்.
அமெரிக்காவில் தீரா ஆர்வம் கொண்ட திறமை மிகுந்த ஆய்வாளராக அறியப்பட்ட காலத்திலேயே நேருவின் அழைப்பில் இந்தியா நோக்கி வந்த எண்ணற்ற விஞ்ஞானிகள் வரிசையில் இந்தியாவின் முக்கிய அறிவியல் கல்வி அமைப்பான இந்திய அறிவியல் கழகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

 பின்னர் ஐ ஐ டி கான்பூரில் வேதியியல் துறை தலைவரான காலத்தில் திடப்பொருள் மற்றும் பொருள் வேதியியல் துறைகளில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான ஆய்வுகளை ஈடுபடும் ஆய்வகங்களை அமைத்து எண்ணற்ற கண்டுபிடிப்புகள்,
பங்களிப்புகள் செய்தார். பின்னர் ஐ ஐ எஸ் சி இயக்குனராக பத்தாண்டுகள் அதே பணியை சிறப்பாக செய்தார்.
திடப்பொருள் வேதியியல் துறையை உலகளவில் முன்னேற்றியத்தில் மிக முக்கியமான பங்கு அவருக்கு உண்டு என்கிற அளவுக்கு அவரின் ஆய்வுகள் இருந்தன. இந்திய அரசின் அறிவியல் முன்னெடுப்புகளில் TWAS,JNCASR முதலிய முக்கியமான அமைப்புகளை உருவாக்குவதிலும் அரசின் திட்டங்களை வகுப்பதிலும் மிக முக்கிய பங்காற்றி உள்ளார்.
உலோக ஆக்சைடுகளை எலெக்ட்ரான் அளவில் பிரிக்கிற முறைகளை உருவாக்கியுள்ளார் இவர். குறை கடத்தி மற்றும் கார்பன் நானோட்யூப்களை பிரிக்க எளிய முறையும் இவரின் பங்களிப்பே. இவரின் ஆய்வுகள்,கண்டுபிடிப்புகள் ஆற்றல் பிரித்தல்,பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்குதல்,மருந்துகள் துல்லியமாக உடம்பில் இயங்குதல் ஆகியவற்றை சாதிப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன. சீன அரசின் மிக உயரிய அறிவியல் விருது துவங்கி எண்ணற்ற அமைப்புகளின் உயரிய விருதுகளை பெற்றிருக்கும் இவர் விரைவில் நோபல் பரிசு பெறுவார் என்று அடித்துச்சொல்லுகிறார்கள்
குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் அறிவியல் மனப்பாடம் செய்யவே தூண்டுகிறது,
அவர்களுக்கு அது உற்சாகம் தருவதாக இருக்க வேண்டும் என்று அழுத்தி சொல்லும் இவர் அரசு ஒட்டு மொத்த ஜிடிபியில் இரண்டு சதவிகிதத்தை அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்.

*🌐ஜூன் 30,* *வரலாற்றில் இன்று:பாக். நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்ற மு.நவரத்தினசாமியின் நினைவு தினம் இன்று.*

ஜூன் 30,
வரலாற்றில் இன்று.

 பாக். நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்ற மு.நவரத்தினசாமியின் நினைவு தினம் இன்று.

முருகுப்பிள்ளை நவரத்தினசாமி ( பிப்ரவரி 16, 1909 - ஜூன் 30, 1969) இலங்கையின் நீச்சல் வீரர் ஆவார். பாக்.நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 26 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.

*🌐ஜூன் 30, வரலாற்றில் இன்று:வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 30, வரலாற்றில் இன்று.

 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் பிறந்த தினம் இன்று.

இவர் 1926ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், ப்ரூக்ளின் நகரில் பிறந்தார்.

நியுக்ளிக் அமிலங்களின் உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ. தொடர்பான ஆய்வுகளில் வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வெவ்வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கிய முதல் விஞ்ஞானி பால் பெர்க் ஆவார்.

*🌐ஜூன் 30, வரலாற்றில் இன்று:இயற்கையின் செய்தித் தொடர்பாளன் மா.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (1912)*

ஜூன் 30, வரலாற்றில் இன்று.

 இயற்கையின் செய்தித் தொடர்பாளன் மா.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (1912).

நான் ஒரு தேவாங்காகப் பிறந்திருக்கலாம்!' என்று யாரால் சொல்ல முடியும்?

‘என் மரணத் தருவாயில் ஒரு ‘வக்கா'வின் குரலை நான் கேட்க நேரிடலாம்!' என்று யாரால் சொல்ல முடியும்?

எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி இயற்கையை இயற்கைக்காகவே நேசிக்கும் ஒரு மனிதனால் மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும். மா.கிருஷ்ணனால் அது முடிந்தது.

மாதவையா கிருஷ்ணன் எனும் மா.கிருஷ்ணன் 1912-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அன்று பிறந்த தமிழர், சென்னையில் வாழ்ந்தவர். தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு உயிர்மூச்சாக இருந்த முன்னோடி. எனினும், தமிழ் மொழி அறிந்த வாசகர்களிடையே அவருடைய எழுத்து சென்று சேர்ந்ததைவிட, ஆங்கிலத்தில் அவர் எழுதிய படைப்புகள்தான் பெரும் வாசகப் பரப்பைப் பெற்றுத் தந்தன.

காட்டுயிர்கள் குறித்து வறட்டுத்தனமான விவரணைகளை எழுதாமல், நேரடிக் கள அனுபவங்கள், ஆய்வுகள் மூலமாகவும், ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்தும் இயற்கையை உயிர்ப்புள்ளதாகத் தீட்டினார்.

பன்முக ஆளுமை

தமிழில் அவர் எழுதிய படைப்புகள் ‘மழைக்காலமும் குயிலோசையும்' மற்றும் ‘பறவைகளும் வேடந்தாங்கலும்' என இரண்டு தலைப்புகளில் முறையே எழுத்தாளர்கள் சு. தியடோர் பாஸ்கரன் மற்றும் பெருமாள் முருகன் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டுச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகின. அந்தப் புத்தகங்கள் தமிழர்களிடம் மெல்ல மெல்லப் பரவலாகிவரும் நிலையில், அவருடைய ஆங்கிலப் படைப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்வது நலம்.

தன் வாழ்நாளில் (1912 முதல் 1996 வரை) ஆங்கிலத்தில் எழுதியவற்றை ‘ஜங்கிள் அண்ட் பேக்யார்ட்' மற்றும் ‘நைட்ஸ் அண்ட் டேஸ்' ஆகிய தலைப்புகளில் புத்தகங்களாக வெளியிட்டார். ஆனால் துர்பாக்கியம், அந்த இரண்டு புத்தகங்களும் தற்போது அச்சில் இல்லை.

இந்தியாவின் காட்டுயிர் குறித்து ‘ஜவஹர்லால் நேரு நிதி நல்கை'யை முதன்முதலில் பெற்ற அவர், ‘Ecological survey of the larger mammals of peninsular India’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வை ‘India's wildlife in 1959-70’ தலைப்பில் ‘பம்பாய் இயற்கை வரலாற்று கழகம்' பதிப்பித்தது. அது தற்போது அச்சில் இல்லை.

மிக நீண்ட தொடர்

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘தி ஸ்டேட்ஸ்மேன்' ஆங்கில நாளிதழில் 1950-ம் ஆண்டு முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக 46 ஆண்டுகளுக்கு ‘கன்ட்ரி நோட்புக்' என்ற தலைப்பில் இயற்கை தொடர்பான கட்டுரைகளை அவர் எழுதிவந்தார். இந்திய இதழியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் வெளிவந்த தொடர்களில் ஒன்று இது.

அந்தக் கட்டுரைகளில் சிலவற்றை ‘நேச்சர்ஸ் ஸ்போக்ஸ்மேன்' என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தொகுத்து வெளியிட்டிருக்கிறார். கிருஷ்ணன் எடுத்த காட்டுயிர் ஒளிப்படங்கள், சில பதிவுகளைத் தொகுத்து ‘ஐ இன் தி ஜங்கிள்' என்ற தலைப்பில் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் சாந்தி, ஆஷிஷ் சந்தோலா புத்தகமாகப் பதிப்பித்துள்ளனர். பறவைகள் தொடர்பாகப் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான அவருடைய கட்டுரைகளை ‘ஆஃப் பேர்ட்ஸ் அண்ட் பேர்ட் ஸாங்' என்ற தலைப்பில் அவர்களே தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

தன் பேத்தி ஆஷா ஹரிகிருஷ்ணனுக்கு கிருஷ்ணன் எழுதிய கடிதங்கள் ‘புக் ஆஃப் பீஸ்ட்ஸ்' என்ற தலைப்பில் சமீபத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரையின் முதல் வரி, அந்தப் புத்தகத்தில்தான் காணக் கிடைத்தது.

2 ஆயிரத்துக்கும் மேல்

மா.கிருஷ்ணன் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும், ஒளிப்படக் கலைஞராகவும் மட்டுமில்லாமல் கலை, கிரிக்கெட், கர்னாடக இசை போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இலக்கியம் மீது அவருக்கிருந்த ஆர்வம், தமிழில் ‘கதிரேசன் செட்டியாரின் காதல்' என்ற துப்பறியும் நாவலாகவும், ஆங்கிலத்தில் ‘தி டேல்ஸ் ஆஃப் தாவூத் கான் அண்ட் அதர் ஸ்டோரீஸ்' எனவும் வெளிப்பட்டது.

‘தான் உயிரோடிருந்தவரை அவர் எழுதிய கட்டுரைகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலிருக்கும்' என்று ராமச்சந்திர குஹா தான் தொகுத்த புத்தகத்தில் கூறியுள்ளார். அவற்றில் தற்சமயம் நமக்குக் கிடைத்திருப்பது கால்வாசிதான் என்று சொன்னால் மிகையில்லை. மீதமிருக்கும் அவரது எழுத்தும் பதிப்பிக்கப்பட்டால், அவரின் அறியப்படாத ஆளுமையும் தெரிய வரலாம்.

சின்ன விஷயங்களின் மனிதர்

இன்றைக்கு யானை, சிங்கம், புலி, காண்டாமிருகம் போன்ற 'பெரிய' விலங்குகள் குறித்து எழுதுவதும் பேசுவதும் மட்டும்தான் சுற்றுச்சூழல் என்று நம்ப வைக்கச் சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. காரணம், மேற்கண்டவை வசீகரமானவையாகக் கருதப்படுவதுதான். அதிலும் குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், அமைப்புகள் அவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்.

ஆனால், யானை, சிங்கம் அளவுக்கு ‘வசீகரம்’ இல்லாத பாம்பு, பல்லி, பூனை, பூச்சி, மீன் போன்ற ‘லெஸ்ஸர் கரிஸ்மாடிக்' உயிரினங்களைப் பெரும்பாலோர் சீந்துவதில்லை. ஆனால் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உருவாகாத 1950, 60-ம் ஆண்டுகளிலேயே பூனை, பல்லி, நாய் போன்றவை குறித்து மிகுந்த அவதானிப்புடன் அவர் எழுதியிருக்கிறார்.

தன்னுடைய பதினோறாம் வயதில் வீட்டிலேயே கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்திருக்கிறார் என்பதை அறியும்போது, மக்களின் ஆர்வம் திரும்பாத ‘சின்ன உயிரினங்கள்' மீது அவர் கொண்டிருந்த அக்கறை தெரிய வரும்.

பறவைகளின் தோழன்

பறவையியலாளர் சலிம் அலியை 'பறவை மனிதர்' என்று சொன்னால், மா.கிருஷ்ணனை ‘பறவைகளின் தோழன்' என்று சொல்லலாம். பறவைகளைத் தேடி அவர் காடுகளுக்குச் செல்வதும், பறவைகள் அவரின் வீட்டுக்கு வருவதும் எனப் பறவைகளும் அவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்துவந்துள்ளனர். தன் கையெழுத்தைக்கூட ஒரு பறவை பறப்பதுபோலப் போடுவார் என்றொரு தகவல் உண்டு.

பறவைகள் மீது சிரத்தையுடன் செயல்பட்ட அவர், பறவை நோக்குதல் குறித்தும் ஒரு அருமையான விஷயத்தைச் சொல்கிறார். "நீங்கள் நாள் முழுக்க ரயிலில் பயணிக்க வேண்டியதிருக்கலாம். அப்போது புத்தகம் படிக்க முடியாதபடியோ அல்லது பேச்சுத் துணைக்கு ஆளற்றோ அல்லது தூங்கும் வழக்கம் இல்லாதவராகவோ இருக்கலாம். கவலைப்பட வேண்டாம். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவாறே செல்லுங்கள். உங்கள் இருக்கையிலிருந்து கொஞ்சம் கீழாக, சற்றுச் சாய்ந்து அமர்ந்துகொள்ளுங்கள். இப்போது ஜன்னல் வழியே மேலே பாருங்கள். மின்சார ஒயர்கள் சென்று கொண்டிருக்கும். அவற்றில் சில பறவைகள் அமர்ந்திருக்கும். நீங்கள் ஆனந்தமடைய அவையே போதும்" என்கிறார்.

அடுத்த முறை நீங்கள் ரயிலில் செல்லும்போது இவ்வாறு பாருங்கள். ஏதேனும் ஒரு பறவையின் வடிவத்தில் மா.கிருஷ்ணன் உங்களுக்குத் தென்படலாம்!

தனக்கு இருந்த இருமொழிப் புலமையின் காரணமாகத்தான் பல பறவைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை அவரால் இனம் காண முடிந்தது. ஆங்கிலத்தில் ‘நைட் ஹெரான்' எனும் பறவை ‘வக்கா' என்று முன்பு தமிழில் அழைக்கப்பட்டதை அவர் பதிவு செய்துள்ளார்.

‘தேசியப் பறவையாக எதைத் தேர்வு செய்வது' என்பது குறித்த விவாதத்தில் கானமயில்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைப் பற்றியும் எம்.கிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார். ‘எதிர்காலத்தில் அவை அழிவின் விளிம்புக்குச் செல்லும் நிலை வரலாம்' என்று அன்றே அவர் யூகித்திருக்கிறார். அந்தக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 1961! இன்று அது நிஜமாகி இருக்கிறது.

சேவல் சண்டையை ஒரு விளையாட்டாகப் போற்றும் அவர், ‘அப்படியான சேவல்கள் அழிவின் நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம், சண்டைக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. அவற்றால் வேறு பயன்கள் எதுவுமில்லை' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

'இந்தியாவில் சில விஷயங்களைத் தனிமைப்படுத்திவிட்டு வாழ்க்கை நகராது. உதாரணத்துக்கு ஒருவர் உறக்கத்தை விட்டுக் காலையில் கண் விழிக்கும்போதும், மாலையில் ஒருவர் உறக்கத்தின் விளிம்பிலும் எங்கோ தூரத்தில் ஒரு காகம் கரைவதை உணரவே செய்வார்' என்று காகம் குறித்துத் தன் பார்வையைப் பதிவு செய்திருக்கிறார்.

"பொதுவாக, ‘டிட்- யூ - டூ - இட்?' (நீ அதைச் செய்தாயா?) என்கிற தொனியில் கீச்சிடும் பறவை, வேடர்கள் வரும்போது தன் சகாக்களுக்கு ‘டோன்ட் யூ ஸீ ஹிம்?' (நீ அவனைப் பார்க்கவில்லையா?) என்று கேட்பதுபோல இருக்கும். அதனால்தான் அந்தப் பறவைக்குத் தமிழர்கள் ‘ஆள்காட்டிப் பறவை' என்று பெயரிட்டிருக்கலாம்" என்று ஆங்கிலத்தில் 'ரெட் வேட்டில்ட் லேப்விங்' என்று ஷ பறவையின் தமிழ்ப் பெயருக்குச் சற்றே கிண்டலாக விளக்கம் தருகிறார் கிருஷ்ணன்.

*☀தேசிய மதிய உணவுத்திட்டம்-கொரோனா நோய் காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்ட மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் பள்ளி செயல்படாத நாட்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உணவூட்டு செலவினத் தொகை வழங்குதல்-மாணவ-மாணவிகளின் வங்கிக்கணக்கு விபரம் கேட்டல் சார்பாக சமூக நல ஆணையர் பள்ளிக்கல்வி/தொடக்கக்கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதம்.*

*☀தேசிய மதிய உணவுத்திட்டம்-கொரோனா  நோய் காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்ட மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் பள்ளி செயல்படாத நாட்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உணவூட்டு செலவினத் தொகை வழங்குதல்-மாணவ-மாணவிகளின் வங்கிக்கணக்கு விபரம் கேட்டல் சார்பாக சமூக நல ஆணையர் பள்ளிக்கல்வி/தொடக்கக்கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதம்.*

திங்கள், 29 ஜூன், 2020

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை ஜூலை 31 வரை நீடிக்கும் - மத்திய அரசு

#BREAKING: பொதுமுடக்க தளர்வு 2.0: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை ஜூலை 31 வரை நீடிக்கும்

- மத்திய அரசு

#unlock2 #centralgovt #IndiaFightsCOVID19 #CoronaLockdown #Schools #Colleges

*மத்திய அரசு தடை விதித்துள்ள சீன செயலிகள்.*

*மத்திய அரசு தடை விதித்துள்ள சீன செயலிகள்.*

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு உத்தரவு !

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு உத்தரவு !











தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளதாம்! ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கொரோனா பரவுமாம்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் , பரமத்தி ஒன்றியக்கிளை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு! மாற்றுவடிவில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்வது குறித்து ஒன்றியச் செயற்குழு கூடி முடிவாற்றும்! விதிகளில்- பணிகளில் தெளிவற்றோருக்கு பாடம் புகட்டுவோம்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளதாம்!
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால்  கொரோனா பரவுமாம்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,
பரமத்தி ஒன்றியக்கிளை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
மாற்றுவடிவில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்வது குறித்து ஒன்றியச்
செயற்குழு கூடி முடிவாற்றும்!
 விதிகளில்-
பணிகளில் தெளிவற்றோருக்கு பாடம்  புகட்டுவோம்!

குழந்தைகள் மகிழ்ச்சி அடைய பறவைகளை கூப்பிடுங்க

இங்குள்ள பறவைகளை தொடுங்கள் உங்களுடன் அதன் ஒலியில் பேசும்
https://coneixelriu.museudelter.cat/ocells.php

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:பிரபல இந்திய அணுசக்தி விஞ்ஞானியும், இந்திய அணுக்கருப் பிளவு சோதனைகளில் முக்கியப் பங்காற்றியவருமான பி.கே.அய்யங்கார் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 29, வரலாற்றில் இன்று.

பிரபல இந்திய அணுசக்தி விஞ்ஞானியும், இந்திய அணுக்கருப் பிளவு சோதனைகளில் முக்கியப் பங்காற்றியவருமான பி.கே.அய்யங்கார் பிறந்த தினம் இன்று.

திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1931).இவரது முழுப்பெயர், பத்ம நாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார். பள்ளிக் கல்வி முடித்ததும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 1963-ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலைய அணுசக்தித் துறையில் இளநிலை ஆராய்ச்சி விஞ்ஞானியாகத் தன் தொழில்வாழ்வைத் தொடங்கினார். நியூட்ரான் சிதறல் தொடர்பான பல்வேறு விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1954-ல் தொடங்கப்பட்டு, பிறகு ‘பாபா அணு ஆராய்ச்சி மையம்’ என பெயரிடப்பட்ட அணுசக்தி அமைப்பில் சேர்ந்தார்.

நோபல் பரிசு பெற்ற நெவில்லி புரோக்ஹவுஸ் என்ற விஞ்ஞானியின் வழிகாட்டுதலில் 1956-ல் கனடாவில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டவாறே பயிற்சியும் பெற்றார். அப்போது ஜெர்மனியத்தில் (germanium) லாட்டிஸ் இயக்கவியல் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.

அணுசக்தித் துறை ஆராய்ச்சிக் குழுவுக்குத் தலைமையேற்று, அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். பாபா அணுசக்தி நிலையத்தில் அணு உலை தயாரிப் பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

1960-ல் உள்நாட்டிலேயே பூர்ணிமா அணு உலையை வடிவமைத் தார். உத்தரபிரதேசத்தின் நாரோராவிலும் குஜராத்தின் கக்ராபாராவிலும் அணு உலைகளைத் தொடங்கினார். 1972-ல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநர் பொறுப்பை ராஜா ராமண்ணா ஏற்றபோது, இயற்பியல் குழுவின் இயக்குநர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

ராஜா ராமண்ணா தலைமையில் 1974-ல் பொக்ரானில் நடத்தப்பட்ட ‘சிரிக்கும் புத்தர்’ என்ற அணுகுண்டு வெடிப்பு சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றியில் இவரது பங்களிப்புக்காக 1975-ல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

1985-ம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஒரு இயக்குநராக முதன்முதலில் துருவா ரியாக்டரை கட்டமைக்கும் திட்டத்தைப் பொறுப்பேற்று, வெற்றிகரமாக நிறைவேற்றினார். மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் தொழில்துறையில் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்க வழிவகுத்தார்.

இதற்காக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ‘டெக்னாலஜி டிரான்ஸ்பர் செல்’ என்ற பிரிவை ஆரம்பித்தார். 1990-ல் இந்திய அணுசக்திப் பேரவையின் குழுமத் தலைவராகவும் அணுசக்தித் துறையின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவராகவும் செயல்பட்டார்.

இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளிலும் (cold fusion experiments) முக்கியப் பங்கு வகித்தார். பதவி ஓய்வுக்குப் பிறகும் கேரள அரசின் அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டார். அகஸ்தியா சர்வதேச அறக் கட்டளையை நிறுவி, கிராமப்புறக் குழந்தைகளிடம் படைப்புத் திறன் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டார்.

இவரது அறிவியல் பங்களிப்புகளுக்காக பட்நாகர் விருது, இந்திய அறிவியல் அகாடமி விருது மற்றும் தேசிய அறிவியல் அமைப்பின் சோதனை இயற்பியலுக்கான பாபா பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவின் முன்னணி அணு விஞ்ஞானிகளில் ஒருவரான பி.கே.அய்யங்கார், 2011ஆம் ஆண்டு 80ஆவது வயதில் காலமானார்.

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் நினைவு தினம் இன்று.*

ஜூன் 29, வரலாற்றில் இன்று.

தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் நினைவு தினம் இன்று.

இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நல்ல தகுதியுடைய, நீதி, நேர்மையோடு பணிசெய்த எவரையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அதனால் தானோ என்னவோ இன்று நீதி, நேர்மை செத்துப்போய் விட்டது.

 வ.ஐ.சுப்ரமணியம் தன் பதவிகாலத்தில் எந்த அரசியல்வாதிகளையும் பல்கலைக்கழக வளாகத்தில் மூக்குநுழைக்க அனுமதிக்க வில்லை. மேலும் அவர் பணியிலிருந்த காலத்தில் தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை தன் மேஜையின் மீது வைத்திருந்தவர்.

தன் மரணத்திற்கு பின் தன் அஸ்தியை பல்கலைகழக வளாகத்தில் தூவவேண்டும் என்று உயில் எழுதி வைத்தவர்.

 அப்படியென்றால் தான் பணிசெய்த பல்கலை கழகத்தின் மீது எவ்வளவு பெரிய அன்பும் ஈடுபாடும் இருந்ததை எத்தனைபேர் அறிந்திருப்பார்கள்?

கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில்  குப்பம் என்கிற பகுதியில் "திராவிடியன் யூனிவேர்சிட்டி" என்கிற பெயரில் பல்கலைகழகத்தை உருவாக்கி, பிற்பாடு கேரள அரசிடமே ஒப்படைத்து விட்டார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற மனிதரை நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்த தினம் இன்று(1925)*

ஜூன் 29, வரலாற்றில் இன்று.

தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்த தினம்  இன்று(1925).

 நாமக்கல்லில்  பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர். 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அடிமைப்பெண்', 'இதயக்கனி' உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

* இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81ஆவது வயதில் (2006) காலமானார்.

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகலனோபிஸ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 29, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகலனோபிஸ் பிறந்த தினம் இன்று.

இவர் 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவர் பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் நண்பர் ஆவார். புள்ளியியல் மீதான ஆர்வமும் இவருக்கு அதிகம்.

கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931-ல் நிறுவினார். மகலனோபிஸ் தொலைவு, ரேண்டம் சாம்ப்ளிங் முறை ஆகியவற்றை வரையறுத்துள்ளார்.

அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்மவிபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சி துறைகளில் மிக உன்னதமான பங்களிப்பை வழங்கிய மகலனோபிஸ் 79வது வயதில் (1972) மறைந்தார்.

*ஜூன் 29, வரலாற்றில் இன்று:சர்வதேச புலிகள் தினம் இன்று.*

ஜூன் 29, வரலாற்றில் இன்று.

சர்வதேச புலிகள் தினம் இன்று.

புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது. புலிகள் இருந்தால் தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலி இருந்தால், அங்கு புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். உணவுக்கு மான் போன்ற விலங்கினங்கள் இல்லாத போது புலிகள் நாட்டிற்கு உள்ளேயும் ஊடுருவுகின்றன.

ஞாயிறு, 28 ஜூன், 2020

TN custodial deaths: Judicial magistrate should be dismissed, says ex-HC judge

TN custodial deaths: Judicial magistrate should be dismissed, says ex-HC judge

Retired judge Justice K Chandru made this statement with regard to the case of the father-son duo (Jayaraj and Emmanuel Benicks) who died in police custody in Thoothukudi

அரசாணை எண் :250, மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை நாள்: 17.06.2020 இன் வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் கோரோனோ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும் ! பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் கடிதம்!

அரசாணை எண் :250,
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை நாள்: 17.06.2020 இன் வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்!
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் கோரோனோ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும் !
பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் கடிதம்!




*🎬ஜூன் 28, வரலாற்றில் இன்று:புகழ்பெற்ற “தேவர்பிலிம்ஸ்” நிறுவனர்* *பிரபல திரைப்பட தயாரிப்பாளர்* *சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினம் இன்று(1915)*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

புகழ்பெற்ற “தேவர்பிலிம்ஸ்” நிறுவனர்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
சாண்டோ சின்னப்பா தேவர்
பிறந்த தினம் இன்று(1915).

விலங்குகளை வைத்து திரைப்படமெடுத்து தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பலவெற்றிப்படங்களை கொடுத்தவர். மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரை வைத்து சுமார் 17 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

ஹிந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜேஷ் கன்னாவை அமர்த்தி "ஹாத்தி மேரா சாத்தி"(1971) என்ற ஹிந்திப் படத்தை முதன் முதலாகத் தயாரித்தார் தேவர்.

   ராஜேஷ் கன்னா குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர மாட்டார். தாமதமாக வந்துவிட்டு சீக்கிரமே போய்விடுவாராம்.

   ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள தேவருக்கு, இதெல்லாம் பிடிக்காமல், அவ்வப்பொழுது ராஜேஷ் கன்னாவை "அசைவ" வார்தைகளால் அர்ச்சனை செய்வாராம் தேவர். படப்பிடிப்பு தளத்திலேயே பலருக்கும் முன்னால் தன்னை அசிங்கமாகத் திட்டுகிறார் என்பது ராஜேஷ் கன்னாவுக்கு தெரிந்து விட்டது.

   ஒரு நாள்..(இதைத் தேவர் ஆரூர்தாசிடம் சொன்னது.. அவரின் அசைவச் சொற்கள் நீங்கலாக)
  ""ராஜேஷ் கன்னா, அவனோட மேக்கப் ரூமுக்கு கூப்பிட்டான். சரி என்னமோ ஒண்ணு நடக்கப் போறது, அவன் கையை நீட்டுனான்னா, நாம காலை நீட்டிட வேண்டியது தான். இன்னைக்கு ஒண்ணு நானாச்சு இல்ல அவனாச்சின்னு முடிவு பண்ணிக்
கிட்டுப் போனேன்.
   மேக்கப் ரூமுக்குள்ள நுழைஞ்சதும், கதவை மூடி தாழ்ப்பாள் போட்டான். நான் என் வேஷ்டியை இருக்கிக் கட்டிக் கிட்டேன். குனிஞ்சு அவன் போட்டிருந்த செருப்பைக் கழட்டுனான்.
   நான் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, கழட்டுன செருப்பை என் கையில் கொடுத்தான். ஏன் கொடுத்தான்னு நான் யோசிக்கறதுக்குள்ளே, அவனே
இங்கலீசுல பேசுனான். நான் புரிஞ்சிகிட்டேன்.
   "மிஸ்டர் தேவர் ! தப்பு என்னுது தான்..அதுக்காக இங்கே தனியா எத்தனை அடி வேணுமின்னாலும்
இந்தச் செருப்பால அடிங்க. ஆனா
அங்கே அத்தனை பேருக்கு முன்னால் கெட்ட வார்தையால
கண்டபடி திட்டாதீங்க. இங்கே உங்களுக்கு நான் சாதாரண நடிகனா இருக்கலாம்.ஆனா பம்பாய் பட உலகமே இன்னைக்கி என் கையில  தான் இருக்கு. அவுங்க என்னைக் கேவலமா நினைப்பாங்க. தயவுசெய்து  என்ன அவமானப் படுத்தாதீங்க..ப்ளீஸ் "
   இதைச் சொன்ன ராஜேஷ் கன்னா, குனிஞ்சு என் காலைத்தொட , நான் உணர்ச்சி வசப்பட்டு,
அவனைக் கட்டி அணைச்சு, கண் கலங்கி சொன்னேன், "மன்னிச்சிக்க  முருகா ! இனிமே உன்ன, எப்பவும் நான் திட்ட மாட்டேன்" னு.
   "நானும் இனிமே ஷூட்டிங்குக்கு
லேட்டா வரமாட்டேன்.கரெக்ட் டயத்துக்கு செட்ல இருப்பேன்" ன்னு சொன்னான்.""
   நடந்த மறுநாள் காலை 8 மணிக்கு வாகினி ஸ்டுடியோவில்,
6 வது தளத்தில் ஷீட்டிங் தொடங்கி விட்டது என்பதற்கான கிளாப் கட்டை அடிக்கும் ஒலி கேட்டது. அந்தப் பக்கம் வந்த நாகிரெட்டியார், "உள்ளே நடிச்சுகிட்டிருப்பது யார் ? " என்று கேட்க, "ராஜேஷ் கன்னா" என்று யாரோ பதில் சொல்ல, புருவத்தை உயர்த்திக் கொண்டு நாகிரெட்டி
சொன்னாராம், "சின்னப்பா தேவரா...கொக்கா...!"

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பிறந்த தினம் இன்று.

பேராசிரியர் முகமது யூனுஸ் (பிறப்பு – ஜூன் 28 1940 சிட்டகொங், வங்காளதேசம்) வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார்.

ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் ‘Banker to the Poor’ எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார்.

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று.

பி. வி. நரசிம்ம ராவ் ஜூன் 28, 1921ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.

✍ இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன், 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.

✍1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அன்று மாரடைப்பால் காலமானார்.

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:முதலாம் உலகப் போருக்கு காரணமான சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

முதலாம் உலகப் போருக்கு காரணமான சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.

1914 ஜூன் 28 ஆம் தேதி ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட், அவரது மனைவி சோபி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியாவின் மீது போர் தொடுத்தது.இந்தப் போர் தான் முதல் உலகப் போராக மாறியது. இப்போரில் ஈடுபட்ட நாடுகள் 20 ஆயிரம் கோடி டாலர்களை  செலவிட்டன. 30 நாடுகளைச் சேர்ந்த ஆறரை கோடி வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர். இதில் ஏறத்தாழ ஒரு கோடி என்கிற அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டது. நேச நாட்டு சக்திகள் தரப்பில் 60 லட்சம் வீரர்களும் மைய சக்திகள் தரப்பில் 40 லட்சம் வீரர்களும் இறந்தனர். முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்கும்தான் அதிக இழப்பு. ஜெர்மனி 19 லட்சம் உயிர்களையும், ரஷ்யா 17 லட்சம் உயிர்களையும் இழந்தது.  இந்தப் போரில் 11 லட்சம் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பவே இல்லை.
a

*🥇ஜூன் 28, வரலாற்றில் இன்று:2016 Summer Paralympic இல் தங்கப்பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி உயரம் தாண்டுதல் வீரர் ( Paralympic high jumper)“தமிழகத்தின் தங்கமகன்“* *“பத்மஶ்ரீ”* *மாரியப்பன் தங்கவேலு பிறந்த தினம் இன்று( 1995).*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

2016 Summer Paralympic இல் தங்கப்பதக்கம் பெற்ற
 மாற்றுத்திறனாளி உயரம் தாண்டுதல் வீரர்
( Paralympic high jumper) 
“  தமிழகத்தின்  தங்கமகன் “
“பத்மஶ்ரீ”
மாரியப்பன் தங்கவேலு
பிறந்த தினம் இன்று( 1995).

சனி, 27 ஜூன், 2020

தூய தமிழில் பேசுவோருக்கு பரிசு - ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - அகரமுதலி திட்ட இயக்குனர்


*🥇ஜூன் 27,* *வரலாற்றில் இன்று:இந்தியாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று(1964).*

ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று(1964).

அந்தச் சிறுமி பிறந்தது, கேரளாவின் கோழிக்கோடு எனும் மாவட்டத்தில் உள்ள பையோலி. அது, ஒரு விவசாய கிராமம். 1960களில் அங்கே பள்ளிக்கூடம் கிடையாது. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், பெரும்பாலும் வயல்வெளியில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்வார்கள். 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஓர் ஊரில், ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து வயதானதும் அந்தச் சிறுமியை பள்ளியில் சேர்த்தார்கள். விடியற்காலையில் அம்மாவுடன் கொஞ்ச நேரம் வயல் வேலைகள் பார்க்கும் அவள், 25 கிலோமீட்டர் தூரத்தையும் ஓடியே பள்ளிக்குப் போய்விடுவாள். அவளது பெயர், உஷா.

மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இடையே சிறார்களைத் தேர்வுசெய்து, பந்தயங்களுக்குப் பயிற்சி அளிக்கும் மைதானம் ஒன்று, உஷா பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இருந்தது. ஒருநாள், அங்கே ஒரு கூட்டத்தைக் கண்டாள். அங்கே பயிற்சியில் இருந்த மாணவர்கள், கால் சராயும் ஷூவும் அணிந்திருந்தார்கள். கூட்டமாக ஓடி பயிற்சி செய்தார்கள்.

மறுநாள், தனது ஊரில் இருந்து பள்ளிக்கு ஓடும்போது, அவர்களைப் போலவே பாவனை செய்துகொண்டு ஓடினாள். 'நானும் ஒருநாள், அவர்களைப் போல பயிற்சிபெறும் மாணவி ஆவேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டபோது, உஷாவின் வயது ஆறு.

நாட்கள் ஓடின. ஒருநாள், அந்த மைதானத்தில் ஓட்டப்பந்தயம் நடப்பதைக் கண்டாள். பள்ளிக்குப் போக வேண்டும் என்றது கடமை. ஓட்டப்பந்தயம் பார்க்க வேண்டும் என்றது ஆர்வம். இந்த மனப் போராட்டத்தில் ஓட்டப்பந்தயமே ஜெயித்தது. அவள் எட்டி நின்று வேடிக்கை பார்த்தாள். பிறகு, அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. திடீரென, 'யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்’ என்றார்கள். ஏழு வயது சிறுமியான உஷா, அந்தப் போட்டியில் கலந்துகொண்டு, மற்ற மாணவிகளைவிட வேகமாக ஓடி, முதல் இடம் பிடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தாள்.

உஷா நினைத்தது நிறைவேறியது. 'ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தயங்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பதைப் புரிந்துகொண்டாள். பிறகு, அவளது அப்பா, உஷாவை அந்த பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார்.

காலில் ரப்பர் ஷூவுடன் தனது கனவு வாழ்க்கையை நோக்கி ஓடத் தொடங்கினாள். வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும், விளையாட்டுத் திறன் மிகுந்த குழந்தைகளை ஊக்கப்படுத்த, கேரள அரசு 250 ரூபாய் உதவித்தொகை கொடுத்துவந்தது. அதைப் பெற்றபோது, உஷாவின் வயது எட்டு.

மாவட்டம், மாநிலம் என, சப் ஜுனியர் பந்தயங்களில் அவளுக்கே முதல் இடம். மாநிலத்தில் தலைசிறந்த விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி, கண்ணூர் எனும் நகரில் இருந்தது. அங்கே, பயிற்சியோடு கல்வியும் பெறத் தேர்வு பெற்றாள் உஷா.

அகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையில் ஒவ்வொரு வருடமும் நேஷனல் ஸ்கூல் கேம்ஸ் நடக்கும். 1979இல், தனது 13ஆவது வயதில் அதில் கலந்துகொண்டாள். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்ற அவளை, உலகப் பிரசித்திபெற்ற பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார், தனது கனவுகளின் ஆதர்ச மாணவியாகப் பெற்றார்.

ஒரே வருடம்தான். மிகக் கடுமையான பயிற்சியில், மிகச் சிறப்பாக உயர்ந்த அவளது அதிவேக ஓட்டத்தை வியக்காதவரே இல்லை. 1980இல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தேசிய சாதனை. 1982இல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கி, அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் 102 பதக்கங்களை வென்று, இந்தியாவின் தங்கத் தாரகையாக மிளிர்ந்தார் பி.டி. உஷா. 'பையோலி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

''நான், பையோலியில் இருந்து என் பள்ளிக்கு ரயிலைவிட வேகமாக ஓடி, என் வாழ்க்கையைத் தொடங்கினேன்'' என்று சொல்லும் தங்கத் தாரகை பி.டி. உஷா, நம் அனைவருக்கும் உதாரணமாக விளங்கும் சுட்டி நாயகியே.

*🌐ஜூன் 27,வரலாற்றில் இன்று:ஜெர்மன் கருவியலாளர்,நோபல் பரிசு பெற்றவர் ஹன்ஸ் ஸ்பெமான் பிறந்த தினம் இன்று(1869).*

ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

ஜெர்மன் கருவியலாளர், நோபல் பரிசு பெற்றவர் ஹன்ஸ் ஸ்பெமான்
(Hans Spemann) பிறந்த தினம் இன்று(1869).

ஹன்ஸ் ஸ்பெமான் 1888 ஆம் ஆண்டில் பள்ளியை விட்டுச் சென்றபின், தனது தந்தையின் வணிகத்தில் ஒரு வருடம் செலவிட்டார்,

 1889-1890 ஆம் ஆண்டுகளில் காஸல் ஹுஸார்ஸில் இராணுவ சேவை, ஹம்பர்கில் புத்தக விற்பனையாளராக சிறிது காலம் கழித்தார்.

1891 ஆம் ஆண்டில் அவர் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார், அங்கு மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டார்,

1893 இல் தனது ஆரம்ப பரிசோதனையை மேற்கொண்டார். அங்கே உயிரியல் நிபுணரும் உளவியலாளருமான கஸ்டவ் வுல்ப் சந்தித்தார், புதிதாக உருவாக்கப்பட்ட கருவியல் வளர்ச்சிகளில் பரிசோதனைகளை ஆரம்பித்த அவர், கண் அகற்றப்பட்டு, மீண்டும் மீண்டும் வருகிறது என்றார்.

 1893-1894-ல் அவர் மருத்துவ பயிற்சிக்காக முனிச் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், ஆனால் 1908 ஆம் ஆண்டு வரை விரிவுரையாளராக இருந்த வூர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் ஜுலோகிக்கல் இன்ஸ்டிட்யூட்டிற்கு மாற்றுவதற்கு பதிலாக மருத்துவ உதவியாளராக மாறினார்.

அவரது Ph.D. புவேரியின் மேற்பார்வையில், ஸ்பேமன் தனது போதனை டிப்ளமோ படிப்பிற்காக,  தவளை நடுத்தர காதுகளின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்தார்.

ஆய்வுகள்:-

ஒட்டுண்ணி புழுக்களின் வளர்ச்சி நிலைகளில் அவரது ஆய்வு முடிந்தபின், ஸ்பேமன் ஆராய்ச்சியின் பிரதான பகுதி என உயிரினங்களின் (புதியவை) கருவியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தேர்ந்தெடுத்தார்.

பின்னர் புதிய கருச்சிதைவு நடைமுறைகளை அவற்றின் கரு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

இந்த தலைப்பில் அவரது முதல் பரிசோதனை, அவரது "முடி இரட்டை" (1901), அவரை பரந்த அங்கீகாரம் பெற்றார்.

ஒரு கருவைச் சுற்றியுள்ள குழந்தையின் தலைமுடியைப் பிடுங்குவதன் மூலம், ஸ்பேம் ஒரு ஒற்றை அணுவிலிருந்து இரண்டு சிறிய ஆனால் முழு லார்வாக்களை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றார்.

1921 ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்ட மாணவர் ஹில்டி மாகோல்ட் உடன் நடத்தப்பட்ட பல பரிசோதனையங்களில் அவர் கண்டறிந்தார், ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள திசுக்களின் ஒரு சிறிய பகுதி திசுக்களின் எதிர்காலப் பகுதியிலிருந்தே இரண்டாம் நிலை புதைபொருள் ப்ரிடார்டியாவின் தலைமுறையை "ஒழுங்கமைக்க" முடியும் என்றார்.

விருதுகள்:-

உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு (1935)

செப்டம்பர்-9, 1941இல் தனது 72ஆவது வயதில் ஜெர்மனியில் காலமானார்.

*🌐ஜூன் 27,* *வரலாற்றில் இன்று:எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் அகிலன்  பிறந்த  தினம் இன்று.

நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும், தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம் ஆகும்.

 பள்ளிப் பருவத்தில் 'சக்தி வாலிபர் சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார். அதன்பின் இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார். முதல் நாவல் 'மங்கிய நிலவு" 1944-ல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார்.

 'வேங்கையின் மைந்தன்" நாவல் 1963-ல் சாகித்ய அகாடமி விருதையும் 'சித்திரப்பாவை" 1975-ல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அகிலன் 1988 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி காலமானார்.

*🌐ஜூன் 27,வரலாற்றில் இன்று:தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று.*

 ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண்  போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மா அவர்களின்  நினைவு தினம் இன்று.

பெண்களுக்கெதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்கும் கருவியாக்கியதுதான்.

குறிப்பிட்ட சமூகப் பெண்களை கோவிலில் நடனமாடவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளவிடாமல் பொட்டுக் கட்டும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை நீடித்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள் நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.

இக்கொடுமையைக் கண்ட மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883ஆம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.

தன் குழந்தையை ஆச்சிக் கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும், ஒரு பழைய புடவைக்கும் விற்றுவிட்டார் சின்னம்மாள். காரணம். குடும்பத்தின் வறுமை. ஆச்சிக் கண்ணுவிடம் 7 வயது முதல் வளர்ந்தார் இராமாமிர்தம். பின்னாளில் தன் இனிஷியலாக ஆ என்று இவர் போட்டுக் கொண்டது இந்த ஆச்சிக் கண்ணுவின் பெயரைத்தான்.

தன் 17 வயதில் பொட்டுக்கட்டும் சடங்கை வெறுத்துக் கடும் எதிர்ப்பு தெரிவித்த இராமாமிர்தம், பின் உள்ளூர் தேவதாசிகள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.

65 வயது பணக்கார மிராசுதாரைத் திருமணம் செய்ய வற்புறுத்தி மீண்டும் தனக்கு வந்த சோதனையை எதிர்த்து, நடனம் சொல்லித் தந்த காங்கிரஸ் பற்றாளர் சுயம்புப் பிள்ளையை ஒரு கோவிலில் நெய் விளக்கின் முன் சத்தியம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தேவதாசி முறை ஒழிய காங்கிரசில் ஈடுபட்டு தீவிரப் பிரசாரம் செய்தனர்.

இராஜாஜியின் கடும் எதிர்ப்பையும் மீறி இராமாமிர்தம் நடத்திய மாநாட்டில் காந்தியார் கலந்து கொண்டார்.

1925ஆம் ஆண்டு நடத்திய மயிலாடுதுறை மாநாட்டில் திரு.வி.க., பெரியார் போன்றோர் கலந்து கொண்டனர்.

பெண்ணுலகு போற்ற வந்த கற்பகம் என்று இராமாமிர்தத்தை திரு.வி.க. பாராட்டினார்.

ராமாமிர்தம், தேவதாசி முறை ஒழிக்கப்பட திட்டம் வகுக்க வேண்டும் என்று காந்தியாருக்கு பல நீண்ட கடிதங்கள் எழுதினார். எதற்கும் காந்தியிடம் இருந்து பதில் வரவில்லை.

1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கிய போது, அவருடன் சுயமரியாதை இயக்கத்தில் பங்கு பெற்ற முதல் பெண்மணி இராமாமிர்தம் அம்மையார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்பட பல போராட்டங்கள் என அனைத்துமே அம்மையார் இல்லாமல் நடந்ததில்லை.

சுயசரிதை போன்று இவர் 1936இல் எழுதிய நாவல்தான் தாசிகளின் மோசவலை (அ) மதி பெற்ற மைனர் . இதில் தேவதாசி முறைக் கொடுமை பற்றியும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். பல கட்டுரைகள், கதைகளை எழுதி திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தை யாருக்கும் பயப்படாமல் செய்தார்.

1932ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த பிரசார நாடகத்தில் சிலர் புகுந்து கலவரம் செய்ததுடன் அவரின் நீண்ட தலைமுடியை அறுத்து எறிந்தனர். அதன் பின் கிராப்புத் தலையுடனே இறுதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகம் செய்த போது, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி  கடும் எதிர்ப்புத் தெரிவிக்க முத்துலெட்சுமி ரெட்டி தேவையென்றால் அவரினத்துப் பெண்கள் ஆடட்டும். எங்கள் இனப் பெண்கள் இனி ஆடமாட்டார்கள் என்றபோது, சட்டசபையே அதிர்ந்தது. முத்துலட்சுமி ரெட்டியின் இந்த அறைகூவலுக்குப் பின்னால் இருந்தவர்கள் தந்தை பெரியாரும், இராமாமிர்தம் அம்மையாரும்தான்.

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை முற்றாய் ஒழிக்கப்பட்டது.

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஜூன் 27, 1962ஆம் ஆண்டு காலமானார். அம்மையாரைச் சிறப்புச் செய்யும் விதமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ஒன்றை 1989ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

வெள்ளி, 26 ஜூன், 2020

*🌐ஜூன் 26,வரலாற்றில் இன்று:சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினம் இன்று.*

ஜூன் 26,
வரலாற்றில் இன்று.

சித்திரவதையால் பாதிக்கப்
பட்டோருக்கான ஆதரவு தினம் இன்று.

சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா. சபை கூறுகிறது.

சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது. சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர்க் கைதிகள்வரை தொடர்கிறது.

1997ஆம் ஆண்டில் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:வில்லியம் தாம்சன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

வில்லியம் தாம்சன் பிறந்த தினம் இன்று.

தாம்சன் (சூன் 26 1824 - திசம்பர் 17, 1907 )அயர்லாந்தைச் சேர்ந்த இவர்  இயற்பியல் அறிஞர்  ஆவார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

 மின்காந்தவியல், வெப்பவியல் என பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குறித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய ஸ்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு இலார்டு கெல்வின் எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை, இவர் நினைவாக கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.

வில்லியம் தாம்சன் 1824 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். இவர் தந்தையார் சேம்சு தாம்சன் ஒரு பயிர்த்தொழிலாளரின் மகன், இவரின் தாயார் மார்கரெட்டுத் கார்டனர். இப்பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களுள் சேம்பசு தாம்சனும் அவருடைய அண்ணன் சேம்சும் முதலில் வீட்டிலேயே அவர்களின் அக்காவால் பயிற்றுவிக்கப்பெற்றனர். பின்னர் வில்லியம் தாம்சன் இலண்டன் நகரிலும், பாரிசிலும், இடாய்ச்சுலாந்திலும், நெதர்லாந்திலும் பன்மொழிகள் கற்றனர். மொழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வில்லியம் தாம்சன் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பிற்காலத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பெல்ஃபாசுட்டு வேதியியல் கல்விக்கழகத்தில் பணிபுரிந்தார். கேம்பிரிட்சில் சேர வில்லியம் தாம்சனின் தந்தை நிறைய பணவுதவி முதல் நல்ல பரிந்துரை மடல்கள் பெறுவது வரை பல உதவிகள் செய்தார். வில்லியம் தாம்சன் 1845 இல் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது 'இராங்கலர்' (Second Wrangler)ஆகத் தேர்ச்சி பெற்றார். புதிய ஆய்வுக்கான சுமித் பரிசை (Smith Prize) வென்றார். அதன் பின் 1846 -இல் கிளாசுக்கோ(Glasgow) நகரில் இயல் தத்துவப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.

ஆரம்பத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires)அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849-ல் அடிப்படையான வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி செல்சியசு(Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி(Zero point) (O K)-273 °C ஆக அமைக்கப்பட்டது. வெப்பவியலிலும், வானவியலிலும் இது அருஞ்சாதனையாகும்.

வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போல திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். வெப்பவியலில் இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். சூரியனின் அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள்மூலம் இவர் கணித்தார். இதனைக் கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.

அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் 1907 டிசம்பர் மாதம்  17-ஆம் நாள் மறைந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் ஐசக் நியூட்டனின் சமாதி அருகே புதைக்கப்பட்டது.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிறந்த தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிறந்த தினம் இன்று.

 கப்பலோட்டிய தமிழனைப் பற்றி முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவா் ம.பொ.சிவஞானம்.

 1927இல் 'தமிழ்நாடு ' நாளிதழில் அச்சு கோப்பாளராக பணியாற்றிய ம.பொ.சி அங்கே அவா் அறிய நோ்ந்த விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் அவருக்குள் சுதந்திர வேள்வியை எழுப்பின. பலமுறை சிறை சென்றாா்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிாித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திர மக்கள் கோாினாா்கள். 'மதராஸ் மனதே' என்று ஆந்திரா்கள் எழுப்பிய இந்தக் குரலுக்கு, 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று வீர முழக்கம் எழுப்பியவா் ம.பொ.சி. ஒரு கட்டத்தில் சென்னையை பொது தலைநகரமாக ஆக்கலாம், அல்லது இரண்டாகப் பிாிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது. சென்னை நகாின் மீது தமிழா்களுக்கு உள்ள உாிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சா் லால்பகதூா் சாஸ்திாிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை ம.பொ.சி நடத்தினாா். இதன் தாக்கத்தால் மத்திய அரசின் முடிவினை மறுபாிசீலனை செய்வதாகவும் சாஸ்திாி உறுதி கூறினாா்

ம.பொ.சியின் கடும் போராட்டத்திற்கு பின் ம.பொ.சியின் எண்ணம் போல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.

 நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி அவா்கள்  சேர, சோழ, பாண்டியாின் சின்னமான 'வில், புலி, மீன்' சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பாிந்துரைத்தாா். இன்று வரை ம.பொ.சி பாிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது.

ம.பொ.சியின் தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளைவாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரா்களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று.

ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 கோடி பேர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.
போதை என்றால் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை என பலரும் நினைக்கின்றனர்.

 ஆனால் உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் போதையூட்ட பயன்படுத்தப் படுகின்றன.
இவை மனிதரின் உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
ஆனால் போதை பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதை பழக்கத்தின் தீமையை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்து சென்று சிசிச்சை அளித்து அவர்களின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும்.

*🌐ஜூன் 26, வரலாற்றில் இன்று:வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று.*

ஜூன் 26, வரலாற்றில் இன்று.

'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று.

வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார்.

 தந்தை துணை ஆட்சியர். இவரை செல்லமாக வளர்த்த பெற்றோர், வீட்டிலேயே ஆசிரியர்களை வைத்துப் பாடம் கற்பித்தனர்.

மிட்னாப்பூர் கான்வென்ட் பள்ளியில் சேர்ந்தார். இளம் வயதிலேயே இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறிகொடுத்தார்.

 வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே வங்கமொழியில் கவிதைகள் எழுதினார்.

இவரது கவிதைத் தொகுப்பு 'லலிதா ஓ மானஸ்' என்ற தலைப்பில் வெளிவந்தது.

ஆங்கிலத்தில் 'ராஜ்மோகன்ஸ் ஒய்ஃப்' என்ற கதையை எழுதினார்.

கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். துணை மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை மக்கள் மதிக்காததால்தான் அந்நியர்கள் மனம்போனபடி நடக்கின்றனர் என கருதினார்.

இலக்கியத்தின் வாயிலாக, இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தும் முனைப்புகளை மேற்கொண்டார்.

அதுவரை ஷேக்ஸ்பியர், மில்டர், ஷெல்லியைப் படித்துவந்த படித்த இளைஞர்கள், புராணம், உபநிஷதங்கள், பகவத்கீதை படிக்கத் தொடங்கினர். நமது இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வும், பெருமிதமும் மக்கள் மத்தியில் பரவியது.

முதல் நாவலான 'துர்கேஷ் நந்தினி' 1865-ல் வெளிவந்தது. அடுத்தடுத்து, பல நாவல்கள் வெளிவந்து வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. '

வங்க தர்ஷன்' என்ற இலக்கிய இதழை 1872-ல் தொடங்கினார்.

இவர் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள், கதைகள், நகைச்சுவை சித்திரங்கள், வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் அதில் வெளியாயின.

எளிய, சரளமான நடையால் அனைவரையும் ஈர்த்தார்.

 இவரது கதைசொல்லும் பாணி தனித்துவமானது. இவரது அனைத்து படைப்புகளும் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 'வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம்' என்பார் தாகூர்.

தாய்மொழி மீது மிகுந்த பற்று, பக்தி கொண்டவர். மதம், சமூகம், நடப்பு நிகழ்வுகள் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பினார்.

 1882-ல் வெளிவந்த 'வந்தேமாதரம்' பாடல் இடம்பெற்ற இவரது 'ஆனந்தமட்' நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.

கல்கத்தாவில் 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் பாடப்பட்டது. 'தாயை வணங்குவோம்' என்று பொருள்படும் 'வந்தேமாதரம்' கோஷம் இந்திர சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறி, நாடு முழுவதும் ஒலித்தது.

இது ஆங்கில அரசை நடுநடுங்க வைத்தது.

வன்முறையைத் தூண்டுவதாக கூறி இந்த கோஷத்தை அரசு தடை செய்தது. பின்னர் இப்பாடல் இந்திய தேசத்தின் கீதமாகப் புகழ்பெற்றது.

 இறுதி நாட்களில் ஆன்மிகம் குறித்து எழுதினார். நவீன வங்க இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகப் போற்றப்படும் பங்கிம் சந்திர சட்டர்ஜி 56ஆவது வயதில் (1894) நோய்வாய்ப்பட்டு காலமானார்.