ஜூன் 26, வரலாற்றில் இன்று.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிறந்த தினம் இன்று.
கப்பலோட்டிய தமிழனைப் பற்றி முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவா் ம.பொ.சிவஞானம்.
1927இல் 'தமிழ்நாடு ' நாளிதழில் அச்சு கோப்பாளராக பணியாற்றிய ம.பொ.சி அங்கே அவா் அறிய நோ்ந்த விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் அவருக்குள் சுதந்திர வேள்வியை எழுப்பின. பலமுறை சிறை சென்றாா்.
சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிாித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திர மக்கள் கோாினாா்கள். 'மதராஸ் மனதே' என்று ஆந்திரா்கள் எழுப்பிய இந்தக் குரலுக்கு, 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று வீர முழக்கம் எழுப்பியவா் ம.பொ.சி. ஒரு கட்டத்தில் சென்னையை பொது தலைநகரமாக ஆக்கலாம், அல்லது இரண்டாகப் பிாிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது. சென்னை நகாின் மீது தமிழா்களுக்கு உள்ள உாிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சா் லால்பகதூா் சாஸ்திாிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை ம.பொ.சி நடத்தினாா். இதன் தாக்கத்தால் மத்திய அரசின் முடிவினை மறுபாிசீலனை செய்வதாகவும் சாஸ்திாி உறுதி கூறினாா்
ம.பொ.சியின் கடும் போராட்டத்திற்கு பின் ம.பொ.சியின் எண்ணம் போல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.
நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி அவா்கள் சேர, சோழ, பாண்டியாின் சின்னமான 'வில், புலி, மீன்' சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பாிந்துரைத்தாா். இன்று வரை ம.பொ.சி பாிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது.
ம.பொ.சியின் தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளைவாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரா்களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக