சனி, 18 ஜனவரி, 2020
ஜனவரி 18, வரலாற்றில் இன்று.
வீணை எஸ்.பாலச்சந்தர் பிறந்த தினம் இன்று(1927).
எஸ்.பாலச்சந்தர் சிறந்த வீணை வித்வானாகவும் சிறந்த தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், சிறந்த நகைச்சுவை நடிகராகவும் பெயர் பெற்றவர்.
சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார்.
அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு அவரே இசையமைக்கவும் செய்தார்.
பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் நன்னிலம் வட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் கிராமம் ஆகும். தந்தை சுந்தரம் ஐயர் சென்னைக்கு வந்து சட்டப் படிப்பை முடித்த பின்னர் மைலாப்பூரில் வக்கீலாகத் தொழில் பார்த்து அங்கேயே குடியேறி விட்டார்.
சென்னையிலேயே பாலச்சந்தர் பிறந்தார். பாலச்சந்தரின் அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜெயலட்சுமி சிவகவி என்ற திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். கஞ்சிரா பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக் கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் வீணை, தபேலா, மிருதங்கம், ஆர்மோனியம், புல்புல்தாரா,
தில்ருபா, சித்தார் மற்றும் செனாய் இசைக்கருவிகளை
ஆசான் எவரும் இன்றி இசைக்கக் கற்றார்.
பாலச்சந்தர் 1953 ஆம் ஆண்டில் சாந்தா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராமன் என்ற மகன் உள்ளார்.
தமது பன்னிரெண்டாவது அகவையிலேயே பாலச்சந்தர் சிதார் இசைப்பதில் தனிக் கச்சேரி நடத்துமளவு திறமை பெற்றார். பதினைந்து முதல் பதினெட்டு வயதிலேயே சென்னை அகில இந்திய வானொலியில் ஊதியம் பெறும் கலைஞராக பணியாற்றினார். விரைவிலேயே வீணை இசைப்பதில் நாட்டம் கொண்டு முழுநேரத்தையும் அதற்கே செலவிடலானார். இரண்டாண்டுகளில் எந்த ஆசிரியர் துணையுமின்றி கச்சேரி நடத்துமளவிற்கு பயிற்சி பெற்றார். குருவின் தாக்கமில்லாது இவரது பாணி தனித்துவமிக்கதாக அமைந்திருந்தது. கருநாடக இசை தவிர இந்துஸ்தானி இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச் சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
1934 ஆம் ஆண்டில் பிரபாத் கம்பனியின் சீதா கல்யாணம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது தந்தை ஜனகராகவும், தமையன் ராஜம் இராமராகவும், தமக்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தமக்கை சரசுவதி ஊர்மிளையாகவும் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இதில் இராவணனின் அரண்மனையில் கஞ்சிரா வாசிப்பவராகத் தோன்றினார். தொடர்ந்து “ரிஷயசிருங்கர்” (1934), “ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்” (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: தேவகி(1951), ராஜாம்பாள் (1951), ராணி (1952),
இன்ஸ்பெக்டர் (1953), பெண் (1954), கோடீஸ்வரன் (1955), டாக்டர் சாவித்திரி (1955) மற்றும் மரகதம்(1959).
திரைப்படங்களில் நடித்ததுடன் 1960-களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். இது நிஜமா (1948), என் கணவர்(1948), கைதி (1951), அவனா இவன்? (1962), பொம்மை (1964) மற்றும் நடு இரவில் (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளிலும் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய அந்த நாள் (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.
ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்துவது பாலச்சந்தரின் ஸ்டைல். 1963-இல் வெளிவந்த பொம்மை படத்தில் டைட்டில் கார்டு போடும் வழக்கமிருந்த காலத்தில் அப்படத்தில் பங்குபெற்ற கலைஞர்களைக் கொண்டே அவரவரின் பெயர்களைக் கூற வைத்து அக்காலத்தில் ஒரு புதுமையைப் புகுத்தினார். இவரது பொம்மை படத்தின் மூலமாகத் தான் கே.ஜே.யேசுதாஸ் தமிழில் பாடத்துவங்கினார். ”நீயும் பொம்மை நானும் பொம்மை நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை” என்ற பாடலே யேசுதாஸ் முதன் முதலாக தமிழில் பாடியது.
”நாலு பக்கம் ஏரி, ஏரியில தீவு, தீவுக்கொரு ராணி, ராணிக்கொரு ராஜா” என்ற ஒரு பாடலை நடு இரவில் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரியைக் கொண்டு பாடவைத்தார். வித்தியாசமான இசையமைப்பு அதிலே நிறைந்திருக்கும். இப்பாடல் மிகவும் ஹிட்டான பாடலாகும்.
எதி நிஜம் (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.
பாலச்சந்தர் 1990, ஏப்ரல் 13 இல் சத்தீஸ

ஜனவரி 18,
வரலாற்றில் இன்று.
குமாரசுவாமி புலவர் பிறந்த தினம் இன்று.
வரலாற்றில் இன்று.
குமாரசுவாமி புலவர் பிறந்த தினம் இன்று.
தமிழின் இலக்கண, இலக்கியத்திற்கு சிறந்த பங்காற்றிய குமாரசுவாமி புலவர் இலங்கையில் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18இல் பிறந்தவர். தமிழ் மொழியின் மீது இவருக்கிருந்த பற்றின் காரணமாக இலக்கியம், இலக்கணம், செய்யுள், காப்பியம் போன்றவற்றை மூத்த தமிழறிஞரிடம் தேடிச் சென்று கற்றார். புலவர் ஆறுமுக நாவலர் இவரது நண்பராவார். 1902ஆம் ஆண்டு பாண்டித்துரை தேவரால் உருவாக்கப்பட்ட மதுரை தமிழ் சங்கத்தின் செந்தமிழ் இதழிற்கு கட்டுரைகள் எழுதியுள்ளார். வடமொழியிலும் புலமை பெற்ற இவர், வடமொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பதிகம், சிற்றிலக்கிய நூல்கள், உரைநடை நூல்கள் ஆகியவற்றை படைத்துள்ளார்.
ஜனவரி 18,
வரலாற்றில் இன்று.
ப. ஜீவானந்தம் அவர்களின் நினைவு தினம் இன்று.
ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.

எக்ஸ்ரே இயந்திரம் முதல்தடவையாக காட்சிப்படுத்தப்பட்ட தினம் இன்று (1896).
எக்ஸ் கதிர்கள் மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரை இருக்கும்.
வில்ஹம் கான்ரட் ராண்ட்ஜென்
விர்ஸ்பொர் பல்கலைக்
கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப்
பணிபுரிந்து வந்தார்.
தனது ஆய்வுக்கூடத்தில் சில
வாயுக்களை வைத்து சோதனை செய்தார்.
வாயுக்களிலிருந்து வெளிப்படும்
மின்சாரம்பற்றிய ஆராய்ச்சியைச்
செய்து பார்த்தார். இந்த ஆய்வை,
ஒரு கேத்தோடு குழாயை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அந்த அறை முழுவதும்
இருட்டாக இருந்தது. கருப்புக்
காகிதத்தால் கேத்தோடு குழாயையும்
மூடி வைத்திருந்தார். அந்தக்
குழாய்க்கு அருகிலிருந்த
பிளாட்டிளா சையனைட் படிகம்
வெளிச்சம்பட்டு மின்னியுள்ளது.
ஆச்சரியத்தில் மூழ்கினார்.
குழாயிலிருந்து ஏதோ கதிர்
ஒன்று வெளிப்பட்டு குழாயை மீறி,
மூடி வைத்திருந்த கருப்புக்
காகிதத்தையும் தாண்டி வந்திருக்க
வேண்டும் எனக் கணித்தார்.
கண்களுக்குப் புலப்படாதவையாக
இருந்த இந்தக் கதிர்கள்
அதுவரையிலும் புதிதாகக்
கண்டுபிடிக்கப்படாததால் எக்ஸ்
ரே எனப் பெயர் வைத்தார்.
எல்லா ஒளிக்கதிர்களும்
போட்டோ தகடுகளில் படியும்
தன்மை கொண்டுள்ளதால் இவர்
கண்டுபிடித்த கதிர்களையும்
தகடுகளில் பதியவைக்க
ஆசைப்பட்டார். எனவே,
இக்கதிர்களை போட்டோ தகட்டில்
வைத்திருந்த
மனைவி கை மீது செலுத்திப்
பார்த்தார். செலுத்தியபின் அந்தத்
தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார்.
அதில், அவரது மனைவியின்
கை எலும்புகளும் அவர்
அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன.
1895 இல் - தனது 50 ஆவது வயதில்
இந்த அற்புதத்தை நிகழ்த்தினார்.
இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக
1901 இல் உலகின் இயற்பியலுக்கான
முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இக்கதிர் அடிக்கடி ஊடுருவினால்
உடலுக்குப் பெரும்
பாதிப்பு உண்டாகும். ராண்ட்ஜென்
மற்றும் அவருடன்
ஆராய்ச்சி செய்தவர்கள் எக்ஸ்
ரே கதிர்களின்
பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)