திங்கள், 5 அக்டோபர், 2020

🌟அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்கலாம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

🌟அக்டோபர் 15 முதல் பள்ளிகளை  திறக்கலாம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.


தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.


 அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


பெற்றோரின் ஒப்புதல் கடிதம் கொண்டு வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம்.


 மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யலாம்.

 
ஆன்லைன் கற்றலை ஊக்குவிக்கலாம்.

மேலும் மாநிலங்கள் தங்களுடைய சொந்த நடைமுறைகளை வகுத்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாகக் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வைக் கடந்த செப்.30-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதில் அக்.15 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியப் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வெளியிட்டுள்ளது. இதை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

*🌟அதில் கூறப்பட்டுள்ளதாவது:*

பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிகளுக்கு மாணவர்கள் வரமுடியும்.

மாணவர் வருகைப் பதிவேட்டில் நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

பாடம் கற்க ஆன்லைன் வகுப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பள்ளிகள் தங்களின் வகுப்பறைகள், கழிப்பறைகள், பிற அறைகள், வளாகம் மற்றும் உபகரணங்களை முறையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

எல்லா நேரங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தனிமனித இடைவெளி, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பலகைகள், பேனர்களை வாய்ப்புள்ள இடங்களில் வைக்க வேண்டும்.

என்சிஇஆர்டி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்குவது அவசியம்.

அவசரகால உதவிக் குழு, பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உள்ளிட்ட செயல்பாட்டுக் குழுக்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.

வீட்டுப் பள்ளியில் இருந்து முறையான பள்ளிப் படிப்புக்கு மாணவர்களை மென்மையான முறையில் மாற்றிக் கொண்டுவருவதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.

பள்ளியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.

அக்டோபர் 5,வரலாற்றில் இன்று.சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 5,
வரலாற்றில் இன்று.

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பிறந்த தினம் இன்று.


சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். குழந்தைகளுடன் தாய் சென்னை அடுத்த பொன்னேரியில் குடியேறினார். பின்னர் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.

 தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வியைத் தொடங்கினார். பின்னர், தக்க ஆசிரியர்களிடம் பயின்று, தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை. முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.

ஒருமுறை கோயிலில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பியவர், அண்ணியை எழுப்ப மனமின்றி வீட்டு திண்ணையில் பசியோடு படுத்துவிட்டார். அவருக்கு அம்பிகையே நேரில் வந்து அறுசுவை உணவு பரிமாறியதாக நம்பப்படுகிறது.

சைவம், வேதாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், தமிழ் இலக்கிய நூல்களை ஆராய்ந்தறிந்தார். பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.

 ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்று மாற்றினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே. உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.

பெண் கல்வியைப் போற்றினார். யோக சாதனப் பயிற்சி பெண்களுக்கும் அவசியம் என்றார். அனைவரும் தமிழ், ஆங்கிலம், வடமொழி கற்க வலியுறுத்தினார். திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.

சிறு வயதிலேயே சிறப்பாக கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். முருகனை வாழ்த்தி ‘தெய்வமணி மாலை’ என்ற பாமாலையை இயற்றினார். இவர் பாடிய ‘திருவருட்பா’ 6 திருமுறைப் பகுதிகளாக 399 பதிகங்கள், 5,818 பாடல்களைக் கொண்டது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள்.

தண்ணீரில் விளக்கை எரியச் செய்தது உட்பட பல அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. 1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே இரவில் பாடி முடித்தார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல குறிப்புகளை எழுதியுள்ளார்.

வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அங்கு 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றினார். அதனால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மிக்கவர். ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்று இறைவனை ஜோதி வடிவில் கண்ட ராமலிங்க சுவாமிகள் 51ஆவது வயதில் (1874) இறை ஜோதியில் ஐக்கியமானார்.

அக்டோபர் 5, வரலாற்றில் இன்று.சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.

அக்டோபர் 5, வரலாற்றில் இன்று.

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ
அமைப்பால் 1994ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து  அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.

ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்
படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

அக்டோபர் 5,வரலாற்றில் இன்று.உலக குடியிருப்பு தினம் இன்று

அக்டோபர் 5,
வரலாற்றில் இன்று.

உலக குடியிருப்பு தினம் இன்று.

'வீடமைப்புக் கொள்கை, தாங்கக்கூடிய வீடு' என்றும் தொனிப்பொருளில் 'உலக குடியிருப்பு தினம்' இன்று கொண்டாடப்
படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை 1985ம் ஆண்டு பிரகடனப்படுத்திய உலக குடியிருப்பு தினம் 1986ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதலாவது திங்கட்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.