அக்டோபர் 5, வரலாற்றில் இன்று.
சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ
அமைப்பால் 1994ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.
ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்
படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.
ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக