புதன், 14 நவம்பர், 2018

தொப்பையை குறைக்க இந்த பயிற்சியை செய்து பாருங்க

தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்...!






சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது.


மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும். வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.


செய்முறை: குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும், மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கிக் கொள்ளவும். கைகளை தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும்.




ஒரு முறைக்கு ஐந்து முதல் பத்து வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓவ்வொரு காலாக தூக்கி பழகலாம். பலன்கள்: வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்.

மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும்.

முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.



திருக்குறளில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்


ஆசிரியர்களின் விடா முயற்சி மற்றும் பணி அர்ப்பணிப்பால், அரசு பள்ளி மாணவர்கள் திருக்குறளில் பல்வேறு சாதனை புரிந்து வருவது பெற்றோர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

 மீஞ்சூர் ஒன்றியம், ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ப்ரி கே.ஜி., முதல், 5ம் வகுப்பு வரை, 74 மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள். மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக இருந்து வருகின்றனர்.திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் அதிகாரங்களின் வரிசையிலும், எண்களின் வரிசையிலும் உச்சரிப்பு பிழையின்றி சொல்லி அசத்துகின்றனர். திருக்குறள் துவங்கும், முடியும் வார்த்தை என. எப்படி கேட்டாலும், அந்த குறளினை முழுமையாக கூறுகின்றனர்.மூன்று ஆண்டுகளாக, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமா, உதவி ஆசிரியர் கனிமொழி, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் சங்கீதா ஆகியோரின் பணி அர்ப்பணிப்பால், மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். 
கடந்த மாதம், உலக திருக்குறள் மையம் சார்பில் நடந்த போட்டியில், இப்பள்ளியைச் சேர்ந்த, 21 மாணவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர்.'ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்து உள்ளனர். மேலும், திருக்குறள் ஞாயிறு, திருக்குறள் பிஞ்சு என, பல்வேறு பட்டங்களையும் பெற்று உள்ளனர். 'லிம்கா ரெக்கார்ட்சில்' இடம் பெற தற்போது தீவிர பயிற்சியில் உள்ளனர்.



2018 - 2019 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்



INCOME TAX RETURNS FINANCIAL YEAR 2018-2019 (ASSESSMENT YEAR 2019-2020) வழிகாட்டி தகவல்கள்

குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு: ஆட்சேபங்களை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்

குரூப் 2 தேர்வு:
உத்தேச விடைகள் வெளியீடு: ஆட்சேபங்களை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள்  வெளியிடப்பட உள்ளன.
இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால்,
அவற்றை மறுத்து இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க முடியும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை
 குரூப் 2 தேர்வில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார்  வெளியிட்டுள்ள அறிவிப்பு:

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்படும். இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவிக்கலாம். இதற்கான கோரிக்கைகள் இதுவரை எழுத்துப்பூர்வமாகவே அதாவது கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவே பெறப்பட்டு வந்தன.
புதிய நடைமுறை ஏன்?: கடிதம் அல்லது மின்னஞ்சல் வழியாக பெறப்படும் கோரிக்கைகளை அட்டவணைப்படுத்தி, வினா எண் வாரியாக பிரித்தெடுத்து, அதற்கான ஆவணங்களை நகலெடுத்து உரிய வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு சுமார் ஒரு மாதம் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த கால தாமதத்தை குறைக்க தேர்வாணையம் புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

புதிய முறை:

உத்தேச விடைகள் குறித்த மறுப்புகள் இனி இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அந்தத் தேர்வுக்கு உரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.
தேர்வின்போது, தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து, தேர்வர்கள் தேர்வெழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால், அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும்.
எப்போது நிராகரிக்கப்படும்?: விடைக்குறிப்பில் இடம்பெற்றுள்ள விடைகளில் மாறுபட்ட கருத்து இருந்தால் அதன் கீழே தோன்றும் சரியான விடை அல்லது விடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே இருக்கும் கட்டத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்.
அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
பின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களை பிடிஎஃப் கோப்புகளாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற்கான தகவல்களும், விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.
பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையை உத்தேச அச்சிட்டுக் கொள்ளலாம். ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது. அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எந்தக் காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

கடைசி தேதி:

14.11.18 ?(புதன்கிழமை) வெளியிடப்படும் குரூப் 2 உத்தேச விடைகளில் தவறு இருந்தால், வரும்
நவம்பர் 20 -ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலமாக மறுப்பு தெரிவிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்

🔥🔥சிறப்பாசிரியர் தேர்வில் தொடரும் குளறுபடி: இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவது எப்போது?



💥💥தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு ஒரு மாதம் ஆகியும், தமிழ்வழி சான்றிதழ் பிரச்னை காரணமாக, இப்பட்டியலை இறுதி செய்யாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி பாடங்களில் சிறப்பாசிரியர் பணியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை 35,000-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதற்கான மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூன் 14 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்ற தேர்வர்களின் பட்டியல் ஜூலை 27 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2, 850 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. அப்போது தேர்வர்களின் கல்விச் சான்றிதழ்களும், சாதி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு விவரம் என அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. அத்துடன் வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு, பதிவு காலத்துக்கேற்ப உரிய தகுதிகாண் மதிப்பெண் (அதிகபட்சம் 5 மதிப்பெண்) அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது.
தமிழ்வழிச் சான்றிதழ் சமர்ப்பிக்காத... தையல், ஓவியம் பிரிவுகளில் தமிழ்வழி (மீடியம்) ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் இருந்தும், டிடிசி-க்கு முந்தைய தேர்வான உயர்நிலை (ஹையர் கிரேடு) தேர்வுக்கு தமிழ்வழிச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, பல தேர்வர்களின் பெயர் இடம்பெறவில்லை.

பணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிடிசி (தொழில் ஆசிரியர் சான்றிதழ்) ஆகியவற்றுக்கு தமிழ்வழிச் சான்றிதழ் அளித்திருந்தும், தங்களைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்ற பல தேர்வர்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசு தேர்வுத் துறை தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்குவது கிடையாது என தேர்வர்கள் விளக்கிக் கூறியதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கவில்லை. தேர்வர்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை மட்டும் பெற்றுக் கொண்டது.
இந்தப் பிரச்னை தொடர்பாக நூற்றுக்கணக்கானோர் நேரில் வந்தும் மனு அளித்துள்ளனர். ஆனால், அந்த மனுக்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தமிழ்வழிச் சான்று பிரச்னை தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அரசு தேர்வுத் துறையானது, தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்குவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது. தொழில்நுட்பத் தேர்வை நடத்திய அரசு தேர்வுத் துறையே தமிழ்வழியில் சான்றிதழ் வழங்க இயலாது என்று பலமுறை விளக்கம் அளித்துவிட்டதால், அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வுப் பட்டி யலில் இடம்பெறாத தையல், ஓவியம் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்..

தொடரும் பிரச்னைகள்: சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது.
ஆனால் தையல், ஓவியம் பாடங்களில் ஹையர் கிரேடு தமிழ்வழி சான்றிதழ் பிரச்னை, இடஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் போன்றவற்றால் தற்காலிக தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி செய்யாமல் உள்ளது.
மேலும், சிறப்பாசிரியர் பணி நியமனம் முடிவடையாததால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடுவது, அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவது, 2019-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை தயாரிப்பது என அனைத்துப் பணிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முடங்கியுள்ளன.

குழந்தைகள் தின உறுதிமொழி...

துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி வித்தியாசமான கண்டுபிடிப்பு - மாணவியர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

எம்.சாண்டுக்கு பதிலாக கட்டட கழிவில் இருந்து மாற்று மணல், துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், பள்ளி மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.


அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. 'கழிவில் இருந்து வளம்' (வேஸ்ட் டூ வெல்த்) என்ற தலைப்பில் மாணவ, மாணவியரின் ஆய்வு கட்டுரைகள், புதிய கண்டுபிடிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்டன.திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த செஞ்சுரி பவுண்டேஷன் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு தமிழ் பிரிவு மாணவியர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீசக்தி சிநேகா ஆகியோர் தங்களது ஆய்வை சமர்ப்பித்தனர்.

அதில், பின்னலாடை கழிவுகளில் இருந்து கட்டிங் வேஸ்ட், அயர்னிங் வேஸ்ட், பஞ்சு வேஸ்ட்டுகளில் இருந்து காட்டன் தீக்குச்சி, சானிடரி நாப்கின், பை, கால்மிதி கார்பெட் மற்றும் ஒலித்தடுப்பு பலகைகள் செய்திருந்தனர். இந்த மறுசுழற்சி பொருட்களின் விலை, சந்தையில் அதே வகையான பொருட்களை விட, 50 சதவீதம் குறைவாகவும், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கலக்காத சுற்றுச்சூழல் காக்கும் விதமாகவும் இருக்கும் என்பதை விளக்கி, பாராட்டு பெற்றனர்.இதே பள்ளி ஆங்கிலப்பிரிவு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கிஷோர் மற்றும் அஸ்வின் ஆகியோர், கட்டட கழிவுகளில் இருந்து டைல்ஸ், கான்கிரீட் கல், கிராதிகளை தயாரித்திருந்தனர். சிப்ஸ், ஜல்லிக்கு பதிலாக, 4.75 மி.மீ., அளவுள்ள மாற்று ஜல்லியை பயன்படுத்தலாம். 2.36 மி.மீ., அளவிலான மணலை, ஆற்று மணலுக்கும், எம்.சாண்டுக்கும் மாற்று மணலாக பயன்படுத்த முடியும் என்று விளக்கினர்
அம்மாணவர்கள் கூறுகையில், 'எங்கள் பள்ளி கேண்டீனில் தரைத்தளம் அமைக்க இவற்றை பயன்படுத்தினோம். தமிழக அரசு திட்ட வடிவமைப்பு பொறியாளர் அருண் தம்புராஜ் மற்றும் பொதுப்பணித்துறை மாநில உதவி நிர்வாகப்பொறியாளர் பொதுப்பணித்திலகம் போன்றோர் இந்த ஆய்வு குறித்து விசாரித்துள்ளனர்' என்றனர்.அறிவியல் ஆசிரியர்கள் பாரத் மற்றும் கலைவாணி ஆகியோர் ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தங்கள் பள்ளி மாணவர்களை பாராட்டினர்.

அண்ணா விருது 2019 - வீரச் செயல் புரிந்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பரிந்துரைகள் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்


குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...