ஞாயிறு, 4 அக்டோபர், 2020

🌄தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வணக்கத்திற்குரிய, முனைவர் , மன்றம் நா. சண்முகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தேனி மாவட்ட ஆய்வுக்கூட்டம் மற்றும் மாற்று இயக்கத்தினர் மன்றத்தில் இணையும் விழா நிகழ்வுகள்.

🌄தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வணக்கத்திற்குரிய, முனைவர் , மன்றம் *நா. சண்முகநாதன்* அவர்களின் தலைமையிலும்
🔥மாநில அமைப்பு செயலாளர் *திரு கோ.சிவக்குமார்* ,
🔥மாநில பொதுக்குழு உறுப்பினர் **திரு ந. ரவிச்சந்திரன்* 
🔥விழுப்புரம் மாவட்டச் *செயலாளர் **சீனி. சின்னசாமி* 
🔥புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் *திரு க.சு செல்வராசு* ஆகியோரின் முன்னிலையிலும் 03/10/2020 அன்று ஆசிரியர் மன்றம் *தேனி மாவட்டக் கிளையில் ஆய்வுக்கூட்டம்* நடைபெற்றது.                   🔥இக்கூட்டத்தில் தேனி மாவட்டம் ஆசிரியர் மன்றம் செயலாளர் திரு ந . ராஜவேல் அவர்களின் தலைமையிலான தேனி மாவட்ட மன்றம் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மாநில அமைப்பு மனமார வாழ்த்தி.... மேலும் பல உறுப்பினர்களை ஆசிரியர் மன்றத்தில் இணைத்து... தேனி மாவட்டத்தை மன்றம் கோட்டையாக மாற்ற வழிகாட்டுதலும் மாநில அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.
🔥இக்கூட்டத்தில் தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்         வட்டாரத்      தலைவர்        🌞 *திரு பா கோகுல பாண்டியன்* 🌞அவர்கள் தலைமையில் ஆசிரியர் மன்றத்தில் இணைந்தனர்.* அவர்களுக்கு ஆசிரியர் மன்றம் மாநிலத் தலைவர் பொன்னாடை போர்த்தி வரவேற்று... உறுப்பினர் அட்டை வழங்கினார்.
🌍 அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆசிரியர் மன்ற செயலாளர் *திரு ந. ராஜவேல்* அவர்களின் புதுமனை புகுவிழாவில் ஆசிரியர் மன்ற மாநில தலைவர் வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் *நா சண்முகநாதன்* மற்றும் உடன் வந்த ஆசிரியர் மன்றம் போராளிகள் கலந்துகொண்டு சிறப்பு  செய்தனர்.
🌍நெல்லை, தென்காசி, தூத்துகுடி மாவட்டங்களில் உள்ள  *24 வட்டாரங்களைச் சார்ந்த  தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அக்கூட்டணியில் இருந்து விலகி  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தில் இணைந்தனர்.* இதற்கான முன் முயற்சி எடுத்து அரும்பாடுபட்ட மாநிலத் தலைவர் *வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் நா. சண்முகநாதன்* அவர்களுக்கு தேனி மாவட்டம் கிளை மனமார வாழ்த்தி மேலும் பல மாற்று சங்கத்தினரை இணைக்க வேண்டும் அதற்கான *சக்தியை* மன்றம் தலைவர் பெறவேண்டும் என மேலும் வாழ்த்துகிறது..... தேனி மாவட்ட கிளை.
🌍தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பு செய்த மாநிலத் தலைவர் *வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் நா சண்முகநாதன்* அவர்களுக்கு தேனி மாவட்ட கிளையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அத்துணை மன்றம் போராளிகளுக்கு ஆசிரியர் மன்றம் தேனி மாவட்ட கிளை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று. விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிப்போட்ட சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.

 விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிப்போட்ட சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று. 

சிறுவனாக இருக்கும் பொழுதே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆப்பிரிக்காவில் போராடி வந்த போயர்களுக்கு ஆதரவாக கவிதைகள் எழுதினார்.

 அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து விடுதலைக்கனலை மூட்டினார். வங்கப்பிரிவினை, இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை கொண்டுவரும் போக்கில் நிறைவேற்றப்பட,  அதை எதிர்த்து சுதேசி இயக்கம் நாடு முழுக்க பரவியது.

தமிழகத்துக்கு பிபின் சந்திர பால் வந்து உரையாற்றி எழுச்சி ஏற்படுத்திவிட்டு போயிருந்தார். பாரதியார் எழுச்சி கீதங்கள் பாடினார். சுதேசி கம்பெனி,கப்பல்கள் என்று வ.உ.சி அவர்கள் இயங்கிக்கொண்டே இருந்தார். சுப்ரமணிய சிவா தூத்துக்குடியில் வ.உ.சி அவர்களை சந்தித்தார். கோரல் மில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கு கொண்டார். எழுச்சி மிகு உரைகளால் இருவரும் மக்களை கிளர்ந்து எழ செய்தார்கள்.

காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பல்லுக்கு பல் என ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர் இவர். திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு வெள்ளையருக்கு ஓயாமல் தொல்லைகள் கொடுத்துக்கொண்டு இருந்த இவர்களை வழக்குகள் போட்டு ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசால் சென்னை மாகாணத்தில் சிறையில் அரசியல் கைதியாக முதன்முதலில் அடைக்கப்பட்டவர் இவரே. நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தொழுநோய் தாக்கி சிறையை விட்டு வெளியேறி வந்தார்.

தொழுநோய் தொற்று நோய் என அரசு கருதியதால் தொடர்வண்டிகளில் தொழுநோயாளிகள் பயணிக்க கூடாது என அரசு தடை விதித்த பொழுது ."பாரத மாதா என் அக்ரதேவதை; இந்த நாடே நான் ஆராதிக்கும் புண்ணிய பூமி !"என நெகிழ்ந்து சொல்லி சாக்கு மூட்டையில் தன்னை கட்டிவைக்க சொல்லி ஊர் ஊராக தொலைவண்டியில் பயணம் சென்று அன்னை தேசத்துக்கு போராட இளைஞர்களை திரட்டினார்.

புண்களில் ரத்தம் வடிய நடந்தே சுதந்திர கனலை தமிழகமெங்கும் பரப்பிய அவர் சென்னை மைலாப்பூரில் வசித்த காலத்தில் மாலை நேரத்தில் ஒரு மேஜை,ஒரு நாற்காலி,ஒரு இரவு விளக்கு ஆகியன மட்டும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு போவார். அங்கே மேசையின் மீது ஏறி நின்று வந்தே மாதரம் என்று முழங்கிவிட்டு விடுதலை தாகம் பொங்கும் உரைகளை நிகழ்த்துவார்.

ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். மீண்டும் தொழுநோயோடு இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப்போரால் தன்னால் ஆன பங்களிப்பை தந்துகொண்டே இருந்தார். பாரத மாதாவிற்கு பாப்பாரப்பட்டியில் கோயில் கட்ட வேண்டும் என்று சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டி நிதி திரட்டிய அவர் அந்த ஆலயத்தில் பூசாரிகள் கிடையாது என்றும், எளிய மக்களே வழிபடுவார்கள் என்றும் உறுதி கூறினார். அந்த கனவு நிறைவேறும் முன்னரே மரணமடைந்தார்.

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.

திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று.

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். 

இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 


1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன். 

குமரன் மண்டை உடைந்து உயிரிழந்த நிலையிலும் தேசியக் கொடியை கீழே விழாமல் பாதுகாத்தார்.
இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று. உலக விலங்குகள் தினம் இன்று

அக்டோபர் 4, 
வரலாற்றில் இன்று.

 உலக விலங்குகள் தினம் இன்று.


இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது. இறைத் தூதுவராக போற்றப்பட்ட அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.

இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தன்மையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள்தான் மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும். இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும்