சனி, 7 ஜூலை, 2018
நாட்டில் 7 சதவிகிதம் பேர் மட்டுமே எளிதாக வீட்டுக்கடன் பெறுகின்றனர்~ ஆய்வில் வெளியான தகவல்…!
புதுதில்லி;
வெறும் 7 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே வீட்டுக் கடன்களை எளிதாகப் பெறுவதாக ஆய்வில் ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சொத்து விவகாரங்கள் தொடர்பான இணையதளமான 'மேஜிக் பிரிக்ஸ்' நடத்திய இந்த ஆய்வின்படி, வீட்டுக்கடன் பெறுவது குறித்தும், கடனைப் பெறுவதற்கான செயல்முறைகள் குறித்தும் 93 சதவிகித வாடிக்கையாளர்கள் அச்சப்படுவதும் தெரிய வந்துள்ளது.
அந்த ஆய்வு மேலும் கூறுவதாவது:
அதிகரித்து வரும், வட்டி விகிதங்கள் 45 சதவிகிதம் பேர் வீடு வாங்குவதற்கான முட்டுக்கட்டையாக உள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகமாக இருப்பதை 27 சதவிகிதத்தினரும், கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள் கடினமாக இருப்பபதை 21 சதவிகிதத்தினரும் மிகப்பெரும் தொல்லையாக கருதுகின்றனர்.
வீடமைப்பு நிதியுதவிச் சந்தையில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும், வெறும் 7 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வீட்டுக் கடன் பெறுவது எளிதாக அமைகிறது. ஆனால், வங்கிகள் இதுபோன்ற விஷயங்களில் அக்கறை செலுத்துவதில்லை. கடன் பெறுவோர் அக்கடனைச் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்வதிலேயே வங்கிகள் கவனம் செலுத்துகின்றன. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)