ஞாயிறு விடியல் நமக்கானதாகும்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வேலகவுண்டம்பட்டியில் மன்ற ஒன்றிய அலுவலகம் திறப்பு...
**********************
அன்பானவர்களே!வணக்கம்.
(07.01.2018-ஞாயிறு)முற்பகல் 09.00மணியளவில் வேலகவுண்டம்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எலச்சிப்பாளையம் ஒன்றியக்கிளையின் *ஒன்றிய அலுவலகம்திறப்புவிழா*நடைபெறுகிறது.
*எலச்சிப்பாளையம் ஒன்றியக்கிளை பெரும்பாடுபட்டு பாசறையாக செயல்படத்தக்க வகையில் ஒன்றிய அலுவலகம் திறக்கிறது.
*மாற்றமைப்பின் பொறுப்பாளர்களை மற்றும் உறுப்பினர்களை மன்றத்திற்கு இனிதே வரவேற்று இணைத்துக்கொண்டு சிறப்புச்செய்கிறது.
*அலுவலகம் திறப்பு மற்றும் மன்றத்தின் வளர்ச்சி ஆகியனவற்றால் ஏற்பட்டுள்ள மகிழ்வில் விழாவின் பங்கேற்பாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு அறுசுவையில் விருந்தோம்பல் செய்கிறது.
*நாமக்கல் மாவட்டத்தின் மாநில,மாவட்ட,ஒன்றியப்பொறுப்பாளர்களின்,மன்றமுன்னோடிகளின்,ஆசிரியப்பெருமக்களின் பங்கேற்பை,வருகையை உவகைபொங்க எதிர்பார்க்கிறது;இருகரம் குவித்து வரவேற்கிறது.
* ஞாயிறு விழா வெகு சிறப்பாக அமைந்திட,வருகை தருவோரின் பாராட்டினை,வாழ்த்தினை பெற்றிட ஒன்றியவிழாக்குழு கண்துஞ்சாது பணியாற்றி வருகின்றது.
தங்கள் அனைவரிடமும் நான் வேண்டுவது யாதெனில்,
எலச்சிப்பாளையம் ஒன்றியக்கிளையின்பணிகளை ஊக்கப்படுத்திடும் வகையினில்,உற்சாகப்படுத்திடும் வகையினில்,
பெருமைப்படுத்திடும்வகையினில்,பாராட்டிடும் வகையினில் (ஞாயிறு) வேலகவுண்டம்பட்டியில் சங்கமிப்பீர் என அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
~முருகசெல்வராசன்.