வியாழன், 28 நவம்பர், 2019

பள்ளிக்கல்வி - அரசு/நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்- மாணவ, மாணவியர்க்கு ஒவ்வொரு நாளும் உடல் சார்ந்த பயிற்சிகள் (physical activities) அளித்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்-சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்



பள்ளிக் கல்வி - அரசு/நகராட்சி/தொடக்க/நடுநிலை/உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் பராமரித்தல்- சார்பாக இயக்குநர் செயல்முறை நாள் 28.11.2019



பள்ளிக்கல்வி - மாவட்ட கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர் பதவி உயர்வு - கண்காணிப்பாளர் பதவி உயர்வு சார்ந்து இயக்குநர் செயல்முறை



5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவனை வெளியீடு






BEO வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் விருப்பம் உள்ளவர்கள் இணையத்தில் 27.11.209 முதல் விண்ணப்பிக்கலாம்



        

EMIS ONE ~ மாணவர்கள் வருகைப்பதிவு மற்றும் TNTP பயன்பாட்டிற்கான செயலி...

அனைவருக்கும் வணக்கம்...
                    
EMIS ONE என்ற புதிய செயலி மாணவர்கள்  வருகைப்பதிவு  மற்றும்  TNTP பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. 

User id-UDISE NUMBER.
Password-EMIS password.
நன்றி...



நவம்பர் 28,
வரலாற்றில் இன்று.


 பெண்களுக்கு என்று பிரத்யேக பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய இந்திய சமூக புரட்சியாளர் ஜோதிராவ் புலே நினைவு தினம் இன்று(1890).

தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்த பின் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களால் வளர்க்கப்பட்டார்.

இயல்பாக போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் "கீழ்சாதி ஆள்" என சொல்லி, அவரை அவமானப்படுத்தி வெளியேற்றிய நிகழ்வு மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஏகத்துக்கும் வாசிக்க ஆரம்பித்தார். மேற்குலகின் நூல்களை படித்தார். வேதங்களை படித்து, அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் சார்ந்து கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தார்.

உடல் உழைப்பை கொட்டித்தரும் மக்களை சூத்திரர் என பாகுபடுத்தி,
சோம்பிக் கிடக்கிற வேலையை தான் பிராமணர்கள் செய்கிறார்கள் என்றார். 1857ஆம் ஆண்டு விடுதலைப் போரை உயர் சாதிகளின் செயலாகவே அவர் பார்த்தார்.

பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே. இயல்பாக பகடி செய்து செல்லும் அந்த கடிதம் இது தான்...

பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன்
தந்தை பெயர் : ஆதி நாராயணன்
இடம் : எங்கும் பார்க்கலாம்

அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு,

பிராமணர்களின் மூலமாக உலகுக்கு சொல்லப்படும் உங்கள் மந்திரங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே செய்து காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைக்க செய்ய வேண்டும்.

என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம்.

அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகர்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பிராமண பக்தர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு,
தங்களைப் பற்றிய பிரசாரப் பெருமையின்
நிஜத்தை சோதிக்க விரும்பும்
ஜோதிராவ் கோவிந்தராவ் புலே

கல்வி அறிவை தராமல் மக்களை ஒடுக்கும் வேலையை செய்த இந்து மதத்தின் காவலர்களை பகடி செய்தார். ‘சத்திய சோதக் சமாஜ்' எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தார்.

ஒரு மதத்தை விட்டு வெளியேறி அதை விமர்சிப்பதைவிட அதை உள்ளிருந்தே அதன் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலை போக கல்வியறிவே சிறந்த கருவி என உணர்ந்தார்.

தன் மனைவி சாவித்திரிபாய் புலே உடன் இணைந்து தாழ்த்தப்பட்ட, ஏன் இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கினார். உயர் சாதி மக்கள் கலவரம் செய்தார்கள்; போகிற பொழுது கல்லெறிந்தார்கள். என்றாலும் தன் கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நின்றார்.

பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது. 1851 ஜூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலுமாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ் புலே.

சாவித்திரி பாய் அக்கல்விக்கூடங்களில் முதல் பெண் ஆசிரியராக ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர், ஜோதிபாயிடம் புலம்பியதும் "அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ! பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள்!"என்றார்.

அவ்வாறே செய்தார். தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர்.

பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார்.

அவரின் பார்வை இன்றைக்கும் அவசியமாக இருப்பதை இவ்வரிகளே காட்டும், "தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
அப்போதுதான் பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக - பொருளாதார மாற்றங்களுக்குக்கு வழிகோலும்"
நவம்பர் 28,
வரலாற்றில் இன்று.


பெர்டினண்ட் மெகல்லன் பசுபிக் பெருங்கடலை அடைந்த தினம் இன்று (1520).

 பெர்டினண்ட் மெகல்லன் (Fernando de Magallanes) (1480 - ஏப்ரல் 27, 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார்.


மேற்கத்திய நாடுகளிடையே தோன்றிய கல்வி மறுமலர்ச்சியினால் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளும், கலை, இலக்கியப் படைப்புகளும் உருவாகின. புதிய சிந்தனைகள் பல மக்களிடையே விதைக்கப்பட்டன. பழைமை வாதங்கள் புறந்தள்ளப்பட்டன. புதுமைகள் புகுத்தப்பட்டன. இது அனைத்திலும் நிகழ்ந்தது. மெகல்லன் காலத்தில், பூமி தட்டையானது என்றும், ஓரிடத்திலிருந்து கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டு சுற்றிவர இயலாது என்றும் எடுத்துரைக்கப்பட்டு வந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் புவி கோள வடிவமுடையது என்னும் கருத்துப் பரப்பப்பட்டது. கி.பி.1492 இல் முதலாவது புவிக்கோளம் அமைக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் தோன்றிய பூமி பற்றிய புதிய கருத்துகளும், புதிய கடல்வழிப் பாதைகளின் தேவைகளும், புதிய குடியேற்ற நாடுகளின் மீதான வேட்கைகளும் கடலோடிகளிடத்தில் பெரும் விருப்பத்தை உண்டுபண்ணியிருந்தன. தவிர, சில முன்னோடிக் கடலோடிகளின் உந்துதல்களும் கடல் பயணத்தின் மீதான உள்ளார்ந்த விருப்பங்களும் மெகல்னின் கடல்வழிப் பயணத்திற்கு தூண்டுகோல்களாக அமைந்தன.

மெகல்லன்
1505 இல் வாஸ்கோடகாமா கீழைத்தேசம் நோக்கிய பயணத்தில் ஈடுபட்டார். இதில் இருபத்தொரு பயணக்கப்பல்கள் பயணித்தன. ஒரு கப்பலின் தளபதியாக மெகல்லனும் திகழ்ந்தார். இதுவே மெகல்லனின் முதல் கடல் பயணம் ஆகும்.


ஸ்பெயின் மன்னனின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு, மெகல்லன் சிறிய பாய்மரக் கப்பல்களில் தம் கடல்வழிப் பயணத்தைத் தொடங்கினார்.  1520 நவம்பர் 28 அன்று மெகலலனின் மூன்று கப்பல்கள் பசுபிக் பெருங்கடலை அடைந்தன.
 பசிபிக் பெருங்கடலைக் கடக்கும்போது, மெகல்லன் இதனை மார் பசிபியோ (Mar Pacifico) என்றழைத்தார். இச்சொல்லுக்குப் போர்த்துக்கீசிய மொழியில் அமைதியான கடல் என்று பொருளாகும். பசிஃபிக் என்னும் பெயர் இதிலிருந்து உருவானது.
நவம்பர் 28,
வரலாற்றில் இன்று.


 கவிஞர் வில்லியம் பிளேக் பிறந்த தினம் இன்று.

இவர் 1757ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இலண்டனில் பிறந்தார். இவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர்.

இவருடைய தீர்க்கதரிசன கவிதைகளில், "ஆங்கில மொழியில் மிகக் குறைவாகப் படிக்கப்படும் கவிதைக் கட்டமைப்பு, அதன் சிறப்புத்தன்மையின் விகிதத்துடன் தொடர;பு கொண்டிருப்பது எது" என்பதை உருவாக்குவதாக சொல்லப்பட்டிருக்கிறது.

அவருடைய தனி மனப்போக்குள்ள நோக்கங்களுக்காக அவருடைய சமகாலத்து அறிஞர்களால் பைத்தியம் என கருதப்பட்ட பிளேக், அவருடைய வெளிப்பாட்டுத்தன்மை மற்றும் படைப்புத்திறன் காரணமாகவும் அவருடைய வேலைப்பாடுகளில் இருந்த மெய்யறிவாற்றல் மற்றும் மறைபொருள் உணர்ச்சி வடிவங்களுக்காகவும், பிற்காலத்து விமர்சகர்களால் உயர்வாகக் கருதப்படுகிறார்.

வில்லியம் பிளேக் 1827ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி தன்னுடைய 69ஆவது வயதில் மறைந்தார். இவர் இறந்த நாளன்று தன்னுடைய மனைவியின் உருவப் படத்தை வரைந்து முடித்து விட்டு, தன்னுடைய கருவிகளை கீழே வைத்து விட்டு பாடல்களை பாடிக் கொண்டே இறந்து விட்டார்.
நவம்பர் 28,
வரலாற்றில் இன்று.

 ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவியலாளர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பிறந்த தினம் இன்று.


இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார்.
நவம்பர் 28,
வரலாற்றில் இன்று.


நோபல் பரிசு பெற்ற அணுசக்தி அறிஞர் என்ரிகோ ஃபெர்மி நினைவு தினம் இன்று.

இத்தாலியில் வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். அண்ணன் மறைந்த சோகத்தில் இருந்து மீள, பெற்றோர் வாங்கித் தந்த இயற்பியல் புத்தகங்களைப் படித்தவர் அதன் மீது ஆர்வமானார். அப்போது அவருக்கு வயது 14.

இளம் வயதிலேயே நண் பர்களோடு இணைந்து பல்வேறு சுவாரசியமான ஆராய்ச்சிகளைச் செய்தார். ரோமில் தண்ணீர் அடர்த்தி பற்றிக்கூட ஆய்வு செய்தார்.

இயற்பியலில் சிறந்த அறிஞராக விளங்கிய ஃபெர்மி 26 வயதில் ரோம் பல்கலை.யின் பேராசிரியராக உயர்ந்தார்.

பீட்டா சிதைவை ஃபெர்மி கண்டுபிடித்ததன் மூலம் அடிப்படை விசைகளில் 4ஆவது விசையான அணுக்கரு விசை உலகுக்கு தெரியவந்தது.

புள்ளியியல் விதிகளை வகுத்தார். அதற்கேற்ப இயங்கும் மூலத்துகள்கள் ‘ஃபெர்மியான்’ என்று அழைக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் மின்இயங்கியல் துறையில் ஆய்வு செய்தவர், செயற்கை கதிரியக்கத்தை க்யூரி தம்பதி கண்டறிந்த பின்னர் அந்த பக்கம் கவனத்தைத் திருப்பினார். நியூட்ரான்களால் தனிமத்தை மோதச்செய்து, புதிய தனிமங்களை உருவாக்கினார். அவை கதிரியக்கத் தன்மை கொண்டவையாக இருந்தன. இந்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 37.

இத்தாலியில் முசோலினி ஆட்சியில் யூதர்களுக்கு எதிராக சட்டங்கள் போடப்பட்டன. யூதப் பெண்ணை மணந்திருந்த ஃபெர்மி எப்படி தப்பிப்பது என்று யோசித்தார். ஸ்வீடனில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு சென்றவர் அப்படியே அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார்.

அணுப் பிளவு சாத்தியம் இல்லை என்று கூறப்பட்ட சூழலில் ஆட்டோஹான், ஸ்ட்ராஸ்மென் இருவரும் அதை சாதித்தனர். அதை நியூட்ரான்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்று கூறிய ஃபெர்மி, அதுசார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார். ஒரு மைதானத்துக்குப் பின்புறம் இருந்த ஆய்வகத்தில் உலகின் முதல் கட்டுப்படுத்தப்பட்ட அணு வினையை சாதித்தார்.

அணுஉலை, அணுகுண்டு இரண்டும் உருவாவதற்கான அச்சுப்புள்ளி இவரால் போடப்பட்டது. மன்ஹாட்டன் திட்டத்தில் இணைந்து அணுகுண்டு உருவாக்கத்தில் பங்காற்றினார். ‘சிகாகோ பைல்’ எனப்படும் உலகின் முதல் அணு உலை, இவரது வழிகாட்டுதல் மற்றும் ஆய்வில் எழுந்தது. இதன் காரணமாக, ‘அணுகுண்டின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க குழு அமைக்கப்பட்டபோது அதை கடுமையாக விமர்சித்தார். பின்னர் அக்குழுவில் உறுப்பினராகி அது சாத்தியமில்லை என்று நிரூபிக்க முயன்றார். Synchrocyclotron-ஐ உருவாக்கி அதன்மூலம் அணுப்பிளவு மற்றும் அணு ஆய்வுக்கான புதுக் கதவுகளை திறந்துவிட்டார். குடல் புற்றுநோய் ஏற்பட்டு சிகாகோ இல்லத்தில் தூக்கத்திலேயே காலமானார்.

Enrico Fermi (29 September 1901 – 28 November 1954) was an Italian-American physicist and the creator of the world's first nuclear reactor, the Chicago Pile-1. He has been called the "architect of the nuclear age" and the "architect of the atomic bomb". He was one of the very few physicists in history to excel both theoretically and experimentally. Fermi held several patents related to the use of nuclear power, and was awarded the 1938 Nobel Prize in Physics for his work on induced radioactivity by neutron bombardment and the discovery of transuranic elements. He made significant contributions to the development of quantum theory, nuclear and particle physics, and statistical mechanics.