புதன், 18 செப்டம்பர், 2019

தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் ஒழுங்குமுறைச் சட்டம்எண்:35/2019வெளியீடு

















GoNo:166 மேல்நிலை வகுப்புகளுக்கு மதிப்பெண் 600லிருந்து 500ஆக குறைப்பு.








பாவேந்தர் பாரதிதாசன் அழைப்பு

பாவேந்தரின் அழைப்பு
******************
வீட்டைப் பூட்டிக் குடும்பத் தோடு
நாட்டை மீட்க இன்றே ஓடு!
காட்டியதாம் கைவரிசை தில்லி! - அதன்
சீட்டுக் கிழிந்து போனதென்று சொல்லி!

ஆட்டுவாராம்! அடக்குவாராம்!
அழிப்பாராம்! ஒழிப்பாராம்!
ஓட்டுவாராம்; நம்மைஅவ் வடக்கர் - மேலும்
தீட்டுவாராம் கத்தியைஅவ் விடக்கர்!

வெற்றி பெற்றால்
மீள்வதென்று
வீழ்ச்சி யுற்றால்
சாவதென்று
நற்றமிழன்னைக்குறுதி கூறு - அட
நாம்தமிழர்! நாம்தமிழர்! ஏறு!

செந்தமிழைக் கொல்லச் சொல்லி,
சீரகத்தை அழிக்கச் சொல்லி,
இந்தியினைக் கற்கச் சொல்லிச் சொல்லி - ஒரு
மந்தியாட்டம் ஆடியதாம் தில்லி!

தாய்க்கரிசி இல்லை என்பார்;
தமிழர்க்கெல்லாம் தொல்லை என்பார்;
வாய்க்கரிசி போட்டுக்கொண்டு
முந்து - நல்ல
போர்பரிசு நீபெற நினைந்து!

- பாவேந்தர்பாரதிதாசன்.

*PAN Card பற்றிய தகவல்:

*🌼Pan card பற்றிய தகவல்: நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிகவும் அவசியமான ஒன்று.வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமானவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் அதில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.*

*பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.*

*1. பான் கார்ட் வைத்திருக்கும் ஒருவர், இ-பான் கார்ட் பெற முடியாது.*

*2. தனி நபர் மட்டுமே இந்த இ-பான் கார்டை பெற முடியும். குடும்பங்களோ, நிறுவனங்களோ பெற முடியாது.ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். ஓடிபி மூலம் ஆதாரம் உறுதி செய்யப்படும்.*

*3. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்ய uidai.gov.in என்ற இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள் ஆதாரின் இ- கே.ஒய்.சி உறுதி செய்யப்பட்டபின், இ – பான் கார்டை பெற முடியும்.*

*4. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் பொருத்தே இ – பான் கார்ட் கொடுக்கப்படும்.*
*பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற தகவல்களில் பிழை இருந்தால்,uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று திருத்திக் கொள்ளுங்கள்.*

*5. இ-பான் கார்டை பெற விண்ணப்பதாரரின் கையொப்பம் வெள்ளை காகிதத்தில் இடப்பட்டு, ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். 200 டி.பி.ஐ, அதிகபட்சம் 10 கே.பி அளவு கொண்ட படமாக இருக்க வேண்டும்.*

*இப்படி பான் கார்டு வாங்கவும் சரி, பான் கார்டு தொலைந்தாலும் சரி நீங்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அலைச்சலும் கூட. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமான பான் கார்டை நீங்கள் பாதுகாக்க வேண்டியது உங்களது கடமை. அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது மிகவும் ஆபத்தாகும்.*

*உங்கள் பான் கார்டு நம்பர் மற்றவர்களுக்கு தெரிந்தால் நூதன் மோசடிகள் பலவற்றிலும் உங்களது பான் கார்ட்டை பயன்படுத்த வாய்ப்புண்டு.*

*உங்களின் பான் கார்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தால் அதனை உடனே செய்து விடுங்கள். இல்லையெனில் அதைக் கொண்டு சிலர் ஏமாற்று வழிகளில் ஈடுபடலாம்.*

*ஒருவரின் பான் கார்டு விவரத்தை கொண்டு அவரின் மொத்த விவரத்தையும் எளிதாக தெரிந்துக் கொள்ள முடியும்.*

*வருமான வரித்துறையினர் பான் கார்டு குறித்து தொடர்ந்து கவனித்து வருவார்கள்.*

*மன்றச் செய்திகள்,நாமக்கல் மாவட்டம்.*

புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை முன்கூட்டியே அமல் படுத்தும் தமிழக அரசு

புதியகல்விக் கொள்கை(2019) வரைவறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.தமிழகத்தில் அமலாகியுள்ளது.தமிழகம் முன்னேறிய மாநிலம் அல்லவா?!இதனாலும்  முன்னேற்றம் காண்பதற்கு 
பள்ளிகளுக்குள் அரசு சாராதொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் அனுமதிக்கப்படுவதற்கு வழிகாட்டியுள்ளனர்.
 எல்லாவிதமான கொடுமைகளுக்கும்,
அக்கிரமங்களுக்கும், அராசகங்களுக்கும், 
அநீதிகளுக்கும்  ஏதேனும்
 ஒரு பெயரில், ஒருவடிவில் , 
ஒரு இடத்தில் , 
ஒரு நாயகன் உதயமாகி கணக்கு தீர்ப்பார்;
பாடம் புகட்டுவார் எனும் பெரியோர் வரிகளில்   நம்பிக்கை வையுங்கள்!
தளராத நம்பிக்கையோடு பயணியுங்கள்! #நாளைநமதே...

Go No:165 அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள் வெளியீடு







*🌼மழைக்காலங்களில் ஏற்படும் நிகழ்வுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள-அறிவுரைகள் வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.*👆

*🌼மழைக்காலங்களில் ஏற்படும் நிகழ்வுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள-அறிவுரைகள் வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.*👆

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை ~ பத்திரிக்கைச் செய்தி...

TEACHERS RECRUITMENT BOARD~Direct Recruitment for the Post of Post Graduate Assistants Physical Education Directors Grade-I 2018-2019~ REVISED TIME TABLE…