வியாழன், 19 ஏப்ரல், 2018

தொடக்கக்கல்வி நிறைவுச் சான்றிதழ்...

பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை ஓரிரு தினங்களில் வெளியீடு...


2018-19க்கான  பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும் ஓரிரு தினங்களில்  வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அவர்களுக்குரிய‌ அரசு அலுவலகங்களில் வழங்கலாம் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அரசு/அரசுநிதி பள்ளிகளில் முதுகலை/பட்டதாரி/இடைநிலை ஆசிரியர்: மாணவர் விகிதம் ~ ஆகஸ்டு முதல் தேதி அடிப்பயையில் கணக்கிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் செயல்முறைகள்…

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு...


பள்ளிக்கல்வித்துறை கல்வி முறைகளில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில்,10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தன. 

இத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதிகளை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி ,
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 16-5-2018 அன்றும்,
 
11ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 30-5-2018 அன்றும்,

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 23-5-2018 அன்றும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்திட வலியுறுத்தி ஏப்பிரல் 23ஆம் தேதியன்று மாவட்ட தலைநகர்களில் நடைபெறும் மனிதசங்கிலிபோராட்டத்தில் ஆசிரியர்மன்றம் பங்கேற்கிறது~ பொதுச்செயலாளர் அறிக்கை…

ஊதிய முரண்பாடுகளை களைய ஒருநபர் குழு - தமிழக அரசு உத்தரவு...


ஊதிய முரண்பாடு மற்றும் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.எம்.ஏ. சித்திக் நியமனம்.

மனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேசவும் ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது.

அரசு பணியாளர்கள் கோரிக்கைகளை நேரிலோ omc_2018@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.