புதன், 22 ஜூலை, 2020

*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண் 379 நாள் :22.07.2020 அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் சார்பான அரசாணை வெளியீடு*

*🟡பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்: அரசுத்தேர்வுகள் இயக்ககம்.*

*🌟12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 24 - 30 வரையிலான நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.*

*🌟பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்*

*🌟மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்*

*🌟தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*

*🌟மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்.*

*🌟விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்.*

*🌟மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும்.*

*🌟'பள்ளி வளாகத்திற்குள் ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும்'.*

*🌟மாணவர்கள் முகக்கவசமும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள்  கையுறையும் அணிந்திருக்க வேண்டும்.*

*🌟தனி மனித இடைவெளி, கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிப்பு*

*🌟கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் பள்ளிகளில் சென்று சான்றிதழ்களை  பெறலாம்.*

*🌟சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாக பள்ளிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.*




TNEB Traiff Calculater....

Click here...

ஜூலை 22, வரலாற்றில் இன்று. இந்தியவின் தேசியக்கொடி உறுதி செய்யப்பட்ட தினம் இன்று(1947).

ஜூலை 22, வரலாற்றில் இன்று.

இந்தியவின் தேசியக்கொடி உறுதி செய்யப்பட்ட தினம் இன்று(1947).

நம் நாட்டு தேசியக்கொடி ஒரே நாளில் உருவாக்கப்பட்டதல்ல. அது பலரது உழைப்பாலும், போராட்டத்தாலும் இன்றைய நாளில் நாம் வணங்கும் மூவர்ணக் கொடியாக உருப்பெற்றது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை நிலைப்படுத்தவும், இந்தியர்களின் அடையாளத்திற்காக
வும் கொடியை உருவாக்கினர்.

மகாத்மா காந்தி, நேதாஜி, அன்னிபெசன்ட், பைக்கஜி காமா ஆகியோரின் முயற்சியால் பல சின்னங்களை கொண்ட பல கொடிகள் உருவாகின. இறுதியாக இன்று இருக்கும் தேசியக் கொடியை பிங்கலி வெங்கையா வடிவமைத்தார். இந்த கொடி, 1947ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் எழுச்சியையும், விடுதலையையும் குறிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி முதன் முதலாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் ஏற்றப்பட்டது.

ஜூலை 22, வரலாற்றில் இன்று. தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் பிறந்த தினம் இன்று(1904).

ஜூலை 22, வரலாற்றில் இன்று.

தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் பிறந்த தினம் இன்று(1904).

இவர்
 திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன்.

பாஸ்கரத் தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். கல்லூரி நாட்களில் ரா. பி. சேதுப்பிள்ளையின் தூண்டுதலால் ஆனந்த போதினி இதழில் கம்ப இராமாயணம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரின் ”வட்டத் தொட்டி” என்றழைக்கப்பட்ட இலக்கிய வட்டத்தில் ஒருவரானார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழகமெங்கும் பயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து கல்கி இதழில் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார்.

2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை நாட்டுடைமையாக்கியது

அவரது படைப்புகள் சில

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
ஆறுமுகமான பொருள்
இந்தியக் கலைச்செல்வம்
இரசிகமணி டி.கே.சி
கம்பன் சுய சரிதம்
கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்
சீதா கல்யாணம்
பட்டி மண்டபம்
பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
வேங்கடத்துக்கு அப்பால் (வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு)
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) முதல்பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) இரண்டாம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) மூன்றாம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) நான்காம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) ஐந்தாம் பாகம்

ஜூலை 22, வரலாற்றில் இன்று. தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும், பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் (Vanidasan) பிறந்த தினம் இன்று.

ஜூலை 22, வரலாற்றில் இன்று.

தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும், பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் (Vanidasan) பிறந்த தினம் இன்று.

புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரில் (1915) பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கசாமி. 7 வயதில் தாய் மறைந்தார். தந்தை மற்றும் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். 2 ஆண்டுகள் திண்ணைக் கல்வி கற்றார்.

பின்னர் வில்லியனூர் பள்ளியில் பயின்றார். அங்கு பாரதிதாசன், எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர் ஆசிரியராக இருந்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழும் பிரெஞ்சும் கற்றார். பள்ளி இறுதித் தேர்வில் புதுவையில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

 1937 முதல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். தமிழார்வத்தால் கவிதை எழுதத் தொடங்கினார். பாரதியின் நினைவு நாளையொட்டி இவர் இயற்றிய ‘பாரதி நாள் இன்றடா’ என்ற இவரது முதல் கவிதை, ‘தமிழன்’ நாளிதழில் வெளிவந்தது.

இவரது கவிதைகளை வெளியிட்டுவந்த ‘தமிழன்’ இதழாசிரியர் இவருக்கு ‘வாணிதாசன்’ என்று பெயர் சூட்டினார். பாரதிதாசனோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1945-ல் சென்னையில் வித்வான் பட்டம் பெற்றார். புதுச்சேரி திரும்பிய இவர், அங்கு கல்வே கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார். பிரான்ஸ் நாடு இவருக்கு ‘செவாலியர்’ விருது வழங்கியது.

இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. தனிப்பாடல்கள் எழுதுவதோடு இல்லாமல் குறுங்காப்பியங்களையும் படைக்கத் தொடங்கினார். ‘தமிழச்சி கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ ஆகிய குறுங்காப்பிய நூல்கள் வெளிவந்தன. இசைப்பாடல்களின் தொகுப்பான ‘தொடுவான’த்தில் தனது இசைஞானத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

திரு.வி.க. இந்நூலுக்கு முன்னுரை எழுதினார். 1956-ல் வெளிவந்த இவரது 88 பாடல்கள் அடங்கிய ‘வாணிதாசன் கவிதைகள்’ இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. இந்நூல் இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, தமிழ், பூக்காடு, இசைக்குரியார் உள்ளிட்ட 7 தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு ‘பொங்கல் பரிசு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ‘தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி’, ‘தீர்த்த யாத்திரை’, ‘இன்ப இலக்கியம்’, ‘எழிலோவியம்’, ‘குழந்தை இலக்கியம்’, ‘பெரிய இடத்துச் செய்தி’, ‘சிரித்த நுணா’, ‘இரவு வரவில்லை’ என ஏராளமான நூல்கள் எழுதினார்.

ஏராளமான பாட்டு அரங்கங்களில் இவர் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘பாட்டரங்கப் பாடல்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இயற்கை குறித்தும் நிறைய எழுதினார். இதனால் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி, புதுமைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

இவரது கவிதைகள் உருது, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது. இறுதிவரை இலக்கியத் தொண்டாற்றி வந்த வாணிதாசன் 1974ஆம் ஆண்டு தமது 59ஆவது வயதில் காலமானார்-

ஜூலை 22, வரலாற்றில் இன்று. இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்! இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்!டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினம் இன்று.

ஜூலை 22,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்!

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்!

முதல் பெண் சட்டசபை துணைத்தலைவர்!

இந்தியாவின் முதல் மகளிர் சங்கதலைவி!

இந்தியாவுக்கே முன்மாதிரி

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
நினைவு தினம் இன்று.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
அவர்கள் புதுக்கோட்டையில்
1886ஆம் ஜூலை 30ஆம் நாள் பிறந்தார்.
நன்றாக கல்வி பயின்றார்.

முதல் பெண் மருத்துவர்
என்ற பெருமையை பெற்ற
டாக்டர். முத்துலட்சுமி அவர்கள்
1912 ஆம் ஆண்டு
Madras Medical College ல்
மருத்துவ படிப்பை முடித்து
Gold medal பெறுகிறார்.

1927  ஆம் ஆண்டு
சென்னை மாகாணத்தின்
சட்டமன்ற உறுப்பினராக
இந்தியாவிலேயே
முதல் பெண் உறுப்பினராக
தேர்வு செய்யப்படுகிறார்.

1956 ஆம் ஆண்டு
மத்திய அரசு
பத்மபூஷன் விருது
வழங்கியது.

இந்தியாவில்
பெண்களுக்கு எதிரான
"தேவதாசி" முறையை
ஒழிக்க காரணமாக விளங்கியவர்.

புற்றுநோய்
மருத்துவத்துறையில்
ஏராளமான நோயாளர்களுக்கு
சிகிச்சை வழங்கினார்.

1952 ஆம் ஆண்டு
சக்தி ஹரிஹரன்
அவர்களுடன் இணைந்து
அடையார் புற்றுநோய்
மருத்துவமனை தொடங்கினார்.

இன்று
உலக அளவிலான
புற்றுநோய்
மருத்துவமனையாக
சிறந்து விளங்குகிறது.

உலகம் முழுவதுமுள்ள
புற்றுநோய் பாதித்த
ஏராளமான நோயாளர்களுக்கு
புற்றுநோய் சிகிச்சை பெறும்
வாய்ப்பை ஏற்படுத்திய
பெருமைக்குரிய மருத்துவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி.

ஏழை எளிய பெண்களின்
நலனில் அக்கறை கொண்டவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

ஏழை எளிய பெண்களின்
மகப்பேறு காலத்தில்
இலவசமாக
பிரசவம் பார்த்தார்...!
மகப்பேறு காலத்தில்
தேவையான மருந்துகளை
இலவசமாக வழங்கினார் ...!!

தன் வாழ்நாள்
முழுவதும்
பெண்களின்
முன்னேற்றத்திற்கு
பாடுபட்டவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள்

இன்று
தமிழக அரசு
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
அவர்களது நினைவாக
கர்ப்பிணி பெண்களுக்கு
உதவும் நோக்கத்தில் மகப்பேறு
உதவித் தொகை
ரூபாய் 18,000/-
மூன்று தவணைகளாக
வழங்கி வருகிறது
தமிழக அரசு....

80 ஆண்டுகளுக்கு முன்னால் இதே வயதுள்ள, ஆதரவற்ற ஏழைப் பெண் குழந்தைகள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு 60% கூட இருக்காது. உயிர் மிஞ்சியிருந்தால் நிச்சயம் திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்திருக்கும். அந்தக் காலகட்டத்தின் முக்கியமான தலைவர்கள் பெண்ணடிமைத்
தனத்துக்கு எதிராகக் குரல்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு அடிமைத்தனத்தில் ஆணிவேர் என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. இந்தப் புரிதல் இருந்த மிகச் சிலரில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் ஒருவர். இன்று தமிழகத்தின் பெண்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு அடி கோலியவர் முத்துலட்சுமி ரெட்டி என்று கூறலாம்.

முத்துலட்சுமி ரெட்டி மிகச் சிறந்த மருத்துவர். ஆனால், மிகச் சிறந்த எழுத் தாளர் அல்ல. அவரது வாழ்க்கை வரலாற்றை இலக்கியத் தரத்துக்கு உதாரணமாகக் கொள்ள முடியாது. ஆனால், நூல் முழுவதும் ததும்பி வழியும் உண்மையும் நேர்மையும் அதை முக்கியமான படைப்பாக ஆக்குகிறது.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தில் பெண்களின் நிலை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் நிலை, எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய முக்கியமான
தடைகளைத் தாண்டி…
முத்துலட்சுமி ரெட்டி என்றால், தேவதாசி முறைக்கு எதிராகக் குரல்கொடுத்தவர் என்றுதான் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், அந்தக் குரல் மக்களிடையே ஒலிக்க, அவர் மிகப் பெரிய தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது.

பெரியவளானதும் பள்ளி செல்ல இயலாததால், தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி வெற்றி பெற்ற முத்து லட்சுமி, புதுக்கோட்டையில் மிகவும் பாடுபட்டு கல்லூரியில் சேர்ந்தார். இண்டர் வகுப்பு முடிந்தபின், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அவர் உடல்நலம் சீராக இல்லாத போதிலும், மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

மருத்துவராகத் தொழில்புரிந்து பல வெற்றிகளைப் பெற்றாலும், நமது நாட்டின் அடித்தள மக்களின் தேவைகளைப் பற்றி அவர் மறக்கவேயில்லை. அவர் கூறுகிறார்:

இந்தியாவின் பெரிய நகரங்களில் 1,000 பிறப்புக்கு இறப்பு (ஒரு வயதுக்குள்) 350-லிருந்து 400 வரை. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகள்தான். அறியாமை, வறுமை, சுத்தமின்மை, குறைந்த கல்வியறிவு, சுகாதாரக் கட்டுப்பாடுகள்பற்றிய அறியாமை ஆகியவையே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று கொள்ள வேண்டும். எனவே, இலவசக் கட்டாய ஆரம்பக் கல்வி, இந்தியாவின் எல்லா இடங்களிலும் அவசரத் தேவையாக இருக்கிறது.

சிசுக்களுக்குப் பால் வேண்டும். உழைக்கும் பெண்களின் குழந்தைகளுக்குக் காப்பகங்கள் வேண்டும், ஏழைகளுக்கு இலவச மருத்துவமனைகள் வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர் முத்துலட்சுமி.

மகாத்மா காந்தியிடம் மிகுந்த பற்றுக்கொண்டிருந்த அவர், பெண்ணின் திருமண வயதை 16 வயது வரை உயர்த்தத் தனது உறுதியான ஒப்புதலை காந்தி அளித்ததையும், தேவதாசி முறையை அவர் கடுமையாக எதிர்த்ததையும் நன்றியோடு நினைவுபடுத்துகிறோம்!