செவ்வாய், 24 டிசம்பர், 2019

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர்  சந்திப்பு 
-------------------------------


நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களை (24/12/19) செவ்வாய் அன்று பிற்பகல் 04.30 மணியளவில்,    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் திரு.க.ஆசைத்தம்பி தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில்
மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன்,
  மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,   மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல்,  மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் திரு.மு.ரவி,    நாமக்கல் ஒன்றியச் செயலாளர் திரு.அ.ஜெயக்குமார்,  சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் திரு.கா.சுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.பொ.சுதாகர்,   புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் திரு.கொ.கதிரேசன்,  மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி , எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் திரு.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர் .
-மெ.சங்கர்














மருத்துவ குறிப்பு: உலர் திராட்சை நன்மைகள்


உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

* இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
* கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.
* உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

* மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.
* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
* ஆண்கள் க்கு ஏற்படும் நரம்பு தளர்சி தளர்வுத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.

* எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்...

ஊராட்சி/நகராட்சி தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் இடித்தல்/பழுதுபார்த்தல் நடவடிக்கை சார்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் செயல்முறை



திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு-

திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர்  சந்திப்பு-
-------------------------------


திருச்செங்கோடு மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களை (24/12/19) செவ்வாய் அன்று பிற்பகல் 02.00 மணியளவில்,    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் திரு.க.ஆசைத்தம்பி தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில்
மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன்,  மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர், மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் திரு.மு.ரவி, திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் திரு.சி.கார்த்திக், நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பொருளாளர் திரு.முருகேசன்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார் , மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ஆகியோர் பங்கேற்றனர் .
-மெ.சங்கர்


திருப்பாவை விழாவில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்களை தயார் செய்தல் சார்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலர் செயல்முறை


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் மற்றும் தேசிய கொடி சார்ந்து வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் பின்பற்றுமாறு திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் செயல்முறை




டிசம்பர் 24,
வரலாற்றில் இன்று.

வாஸ்கோடகாமா நினைவு தினம் இன்று(1524).

இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தான்.

1498 மே மாதம் 20ஆம் தேதி அந்த வெள்ளிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் பொர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்து சேர்ந்தான்.இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத்துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனைத் திரவியங்களும் மிகுந்திருப்பதாய் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல் வழியே 1492இல் இந்தியாவிற்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த சம்பவத்திற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

வாஸ்கோடகாமாவோடு கப்பலில் பயணம் செய்த குழுவில் ஒருவன் எழுதி வைத்த டயரிக்குறிப்பில் அந்தப் பயணத்தின் அதிர்ஷ்டம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
பயணம் செய்த குழு தரை இறங்கி விசாரித்துவிட்டு படகில் கப்பலுக்குத் திரும்பியபோது கொண்டு விட வந்த கோழிக்கோட்டுக்காரன் “அதிஷ்டமான பயணம்! மகா அதிஷ்டமான பயணம்! வைரமும் வைடூரியமுமாய் இருக்கின்றன. இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்கு தாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.: என போர்ச்சுக்கீசிய மொழியிலேயே பேசியது கண்டு பிரமிப்பு அடைந்து போனார்களாம்.

இந்த பயணம்தான் ஐரோப்பாவிலிருந்து போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வழி அமைத்து கொடுத்தது.

ரூட் அறிந்து அடுத்தடுத்து (மூன்றாவது முறையாக) இந்தியா வந்தபோது இந்தியாவுக்கான அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் வாஸ்கோடகாமா. ஆனால் வந்த சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு 1524ஆம் ஆண்டு  டிசம்பர் 24ஆம் தேதி அவர் கோழிக்கோட்டிலேயே காலமானார். கொச்சியில் உள்ள ஒரு தேவலாயத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டு பின்னர் 1539ஆம் ஆண்டு அதன் மிச்சங்கள் போர்ச்சுக்கலுக்கு அனுப்பபட்டன.
டிசம்பர் 24,
வரலாற்றில் இன்று.

ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் பிறந்த தினம் இன்று.

ஆற்றல் அழிவின்மை விதியை உருவாக்கிய அறிவியல் அறிஞரான ஜூல், 1818ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் பிறந்தார். ஒரு பொருளினை ஒரு மீட்டர் தொலைவிற்கு நகர்த்த தேவையான ஆற்றலின் அலகு ஜூல் என அழைக்கப்படுகிறது. மொத்த ஆற்றலானது ஒருபோதும் மாறாததாகும். ஆற்றல் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறக்கூடியது. ஆனால் அதனை ஒருபோதும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதை ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் நிரூபித்தார்.
💐டிசம்பர் 24,வரலாற்றில் இன்று.தந்தை பெரியார் நினைவு தினம்.

1. தந்தை பெரியார் 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டது.

2. தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.

3. 1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.

4. ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார்.

5. அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.

6. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அழைக்கப்பட்டார்.

7.1925-ம் ஆண்டு சமுகத்தில் இருக்கும் மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என ‘சுயமரியாதை இயக்கம்’  தொடங்கினார். அதே அண்டு “குடியரசு நாளிதழை” தொடங்கினார் தந்தை பெரியார். இந்த நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்க்கு மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

8. 1937-ம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. 1938-ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


9. 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ம் ஆண்டு ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது.


10. 1949-ம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்பட்டனர். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.


11. 1949-ம் ஆண்டு தனது வழிகாட்டியான தந்தை பெரியாரிடமிருந்து அண்ணாதுரை விலகி, திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.


12. இந்து மத கடவுள்கள் மூடநம்பிக்கைகளை மக்களிடையே வளர்ப்பதாக கூறி, 1952-ம் ஆண்டு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார்.


13. 1962-ம் ஆண்டு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் அவருக்கு பொறுப்பை தந்தார்.


14. அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் திரிகுனா சென் அவர்களால், தந்தை பெரியாருக்கு ‘யுனஸ்கோ விருது’  1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி வழங்கப்பட்டது.


15. 1973-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில், சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டார்.
1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24அன்று தனது 94 வது வயதில் காலமானார்.
டிசம்பர் 24,
வரலாற்றில் இன்று.

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று.

இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும் வழிவகை செய்கிறது. மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.