சனி, 12 அக்டோபர், 2019

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு-ஊதியம் நிர்ணயம் செய்தல் தெளிவுரைதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை நாள் 11.10.2019




NISHTHA - introduction guide

சாலச்சித்தி school external evaluation dashboard

*அக்டோபர் 12,-வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*

*🌷அக்டோபர் 12

, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.தமிழ்மொழியை செம்மொழி என்று இந்திய அரசு  அறிவித்த தினம் (2004)*

*2.*இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம்.*

--------------------------------------------

 *🌷தமிழ் மொழியை  செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்த தினம் இன்று (2004).*

*ஒரு மொழி .. செம்மொழியாவதற்கு:*

*1.1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள்* *பதிவுபெற்ற வரலாறு.*
*2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய* *பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதப்படும் இலக்கிய நூல்கள்.*
*3. அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழி குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட*

*இந்த 3 தகுதிகளை உடைய மொழிகளையே செம்மொழி என்கின்றனர்.*

*மேலும்,  செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.*

*1. தொன்மை*
*2. தனித்தன்மை*
*3.பொதுமைப் பண்பு,*
*4.நடுவு நிலைமை,*
*5.தாய்மைத் தன்மை,*
*6.மொழிக்கோட்பாடு,*
*7.இலக்கிய வளம்,*
*8.உயர் சிந்தனை,*
*9.பண்பாடு, கலை,*
*10.பட்டறிவு*
*11.வெளிப்பாடு*
*ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும்.*

*இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.*

*தமிழ்,செம்மொழியே என*
 *முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர்.*

*தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.*

*அயர்லாந்து நாட்டில் "ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர்.*

*தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலை கழகங்களும் குரல் கொடுத்தன.*

*மேலும்,  மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், வா.செ. குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார்சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர்.*

*பல்லாண்டு காலம் போராட்டத்திற்கு பிறகு தமிழ் மொழியை  செம்மொழி என்று பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த 2004, அக்டோபர் 12இல் தமிழ் செம்மொழி என அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.*
-----------------------------------------------
*🌹இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் இன்று.*

*🇮🇳இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற* *ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,*

*இங்கு பெற அல்லது வரப்படும் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு* *செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப் படுகின்றது. அவற்றை* *ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து* *அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.*
*புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும்.* *அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்*
*தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.*

*டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.*
-----------------------------------------------