வியாழன், 9 ஜனவரி, 2020

A,B grade ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் திரு.க.மீ வலியுறுத்தல்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
( குறள் எண்:166) 

 பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம் உடையும், உணவும் இல்லாமல் கெடும் என்கிறது திருக்குறள்.

 தமிழகரசே!
தமிழர் திருநாளுக்கு பொங்கல் 
மிகை ஊதியத்தை (போனசு) அனைத்தாசிரியர் மற்றும் அலுவலர்களுக்கும் வழங்கிடுக!

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர். பாவலர். திரு.க.மீ., வலியுறுத்தல்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை_பொங்கலுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு (11.01.2020முதல்19.01.2020)



ஜனவரி 9,
வரலாற்றில் இன்று.

1793ஆம் ஆண்டு ஜான் பியர் பிளன்சார் என்ற அமெரிக்கர் இராட்சத பலூனில் பறந்த தினம் இன்று.

 Jean-Pierre Blanchard becomes the first to fly in a gas balloon in the Western Hemisphere, from Walnut Street Jail in Philadelphia to Deptford Township, New Jersey. George Washington, John Adams, Thomas Jefferson, James Madison and James Monroe are among the spectators.
ஜனவரி 9, வரலாற்றில் இன்று.

விஞ்ஞானி டாக்டர்  ஹர்கோபிந்த் குரானா பிறந்த தினம் இன்று.

1959ல் மனித உடலின் செயல் முறைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் கோ என்சைம் ஏ என்ற வேதிப் பொருளை கண்டறிந்தது மட்டுமன்றி
1960ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று, விஸ்கான்சின் பல்கலைக்கழக என்சைம் மற்றும் செயற்கை உயிர் உற்பத்தி துறையில் பணியாற்றி வருகையில்
தொடர்ந்து ஆய்வுகளை "மார்ஷல் நோரென்பர்க்" அவர்களுடன் இணைந்து மேற்கொண்டு, அதன் மூலம் மரபு வழி நோய்களை (ஆர். என். ஏ. ரிலேட்டட் ஜெனடிக்கல் டிசாடர்ஸ்) குணமாக்க இயலும் என்ற  அவர்களது கண்டு பிடிப்புக்காக...""1968ல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு"" டாக்டர் குரானா, டாக்டர் நோரென்பர்க், மற்றும் டாக்டர் ஹாலே ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் இணைந்து வழங்கப்பட்டது.!

1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் அப்போது சுமார் 100 குடும்பங்கள் மட்டுமே கொண்ட, தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ராய்பூர் கிராமத்தில் பிறந்த குரானா அவர்கள் இளவயது முதலே  படிப்பில் சிறந்து விளங்கினார்.

மேற்குவங்க மாநிலத்தின் முல்தானில் பள்ளிப் படிப்பைச் சிறப்பாகப் பயின்று முடித்து, லாகூரில், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி மற்றும் பேராசிரியர் "மதன்சிங்" அவர்களின் மேற்பார்வையில், 1945ம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டமும் பெற்று, அரசின் ஸ்காலர்ஷிப் மூலம் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, "பேராசிரியர் ரோஜர் ஜே. எஸ். பீர்" வழிகாட்டுதலில், ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து, திரு குரானா அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றார்.!

தொடர்ந்து மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில், உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி...ஜெனடிக் பாலிமார்பிசம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, டாக்டர் குரானா மற்றும் 24 பேர் அடங்கிய குழுமத்தின் 9 ஆண்டுகள் விடாமுயற்சியின் பயனாக மனிதர்களின் குடற் பகுதியில் வாசம் செய்யும், ஈ. கோலை ( ஈஷ்சீரியா கோலை)என்று அழைக்கப்படும் அனரோபிக் பாக்டீரியத்தின் 207 மரபணுக்களை செயற்கையாக உருவாக்கி, 1976ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம்...அந்த மரபணுக்களை இயற்கை மரபணுக்கள் போல செயல்பட வைத்த நிகழ்வு உலகப் புகழ் பெற்றது.

டாக்டர் குரானா பெற்ற பிற விருதுகள் :

1. 1968 - ஹாவாயில், ஹோனலூலுவின் "சிறப்பு மிக்கச் சேவைக்கான விருது".!

2. 1969ஆம் ஆண்டு இவருக்கு, மைய அரசின் 2ம் சிவிலியன் விருதான  பத்மபூஷண்.!

3. 1971‍ல் அமெரிக்கன் அச்சீவ்மெண்ட் அவார்ட்...பிலடெல்பியா பலகலைக் கழகம் .!

4. 1972‍ல் கல்கத்தா...போஸ் நிறுவனம் 'ஜே.சி. போஸ்' பதக்கம்.!

5. 1973-74 ஆண்டுக்கான அமெரிக்க வேதியல் பிரிவின் வில்லர்ட் கிப்ஸ் பதக்கம்.!

6. தொடர்ந்து'கெய்ர்ட்னர் அமைப்பு அனைத்துலக விருது', 'லூயிசா குரோஸ் ஹார்விட்சு பரிசு' ,'ஆல்பர்ட் லாஸ்கரின் அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான விருது' முதலிய விருதுகளையும் டாக்டர் குரானா பெற்றுள்ளார்.!

அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம், ரஷ்யாவின் அறிவியல் கழக அயல் நாட்டு உறுப்பினர், ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினர் போன்ற பதவிகள் மட்டுமன்றி இந்திய வேதியல் கழகத்தில் கௌரவ ஆய்வு உறுப்பினர் என்ற பதவியினையும் வகித்தார் டாக்டர் குரானா அவர்கள்.!

 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் நாள் தனது 89ம் வயதில் முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.
ஜனவரி 9,
வரலாற்றில் இன்று.

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் இன்று.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9, 1915ஆம் ஆண்டு (மும்பை) இந்தியா திரும்பினார். காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஐ வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஜனவரி 9, வரலாற்றில் இன்று.

புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற தினம் இன்று (1921).

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
இந்தக் கோட்டை யில் தான். தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றுபெயர். இந்த சட்டமன்றத்தின் கூட்டம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில்,1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. கன்னாட் கோமகன் (Duke of Connaught) இதை தொடங்கி வைத்தார்.
ஜனவரி 9, வரலாற்றில் இன்று.

1951ஆம் ஆண்டு
ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட தினம் இன்று.

1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

 ஐக்கிய நாடுகள் சபையின் இந்தத் தலைமையகக் கட்டடம் 1949, 1950 ஆம் ஆண்டுகளில், ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது. இது மான்ஹட்டனின் கிழக்குப் பகுதியில், டர்ட்டில் பே (Turtle Bay) வட்டகையில், ஈஸ்ட் ஆற்றை நோக்கியிருக்கும் பரந்த நிலத்தில் அமைந்துள்ளது.

இக்கட்டிடத்தொகுதி அமைந்துள்ள இடம் நியூயார்க் நகரத்தில் இருந்தாலும், இந்த இடம் ஒரு அனைத்துலக ஆட்சிப் பகுதியாகும்.
அமெரிக்காவுக்கு (USA ) சொந்தமானதல்ல !