வியாழன், 9 ஜனவரி, 2020

ஜனவரி 9, வரலாற்றில் இன்று.

விஞ்ஞானி டாக்டர்  ஹர்கோபிந்த் குரானா பிறந்த தினம் இன்று.

1959ல் மனித உடலின் செயல் முறைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் கோ என்சைம் ஏ என்ற வேதிப் பொருளை கண்டறிந்தது மட்டுமன்றி
1960ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று, விஸ்கான்சின் பல்கலைக்கழக என்சைம் மற்றும் செயற்கை உயிர் உற்பத்தி துறையில் பணியாற்றி வருகையில்
தொடர்ந்து ஆய்வுகளை "மார்ஷல் நோரென்பர்க்" அவர்களுடன் இணைந்து மேற்கொண்டு, அதன் மூலம் மரபு வழி நோய்களை (ஆர். என். ஏ. ரிலேட்டட் ஜெனடிக்கல் டிசாடர்ஸ்) குணமாக்க இயலும் என்ற  அவர்களது கண்டு பிடிப்புக்காக...""1968ல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு"" டாக்டர் குரானா, டாக்டர் நோரென்பர்க், மற்றும் டாக்டர் ஹாலே ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் இணைந்து வழங்கப்பட்டது.!

1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் அப்போது சுமார் 100 குடும்பங்கள் மட்டுமே கொண்ட, தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ராய்பூர் கிராமத்தில் பிறந்த குரானா அவர்கள் இளவயது முதலே  படிப்பில் சிறந்து விளங்கினார்.

மேற்குவங்க மாநிலத்தின் முல்தானில் பள்ளிப் படிப்பைச் சிறப்பாகப் பயின்று முடித்து, லாகூரில், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி மற்றும் பேராசிரியர் "மதன்சிங்" அவர்களின் மேற்பார்வையில், 1945ம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டமும் பெற்று, அரசின் ஸ்காலர்ஷிப் மூலம் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, "பேராசிரியர் ரோஜர் ஜே. எஸ். பீர்" வழிகாட்டுதலில், ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து, திரு குரானா அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றார்.!

தொடர்ந்து மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில், உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி...ஜெனடிக் பாலிமார்பிசம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, டாக்டர் குரானா மற்றும் 24 பேர் அடங்கிய குழுமத்தின் 9 ஆண்டுகள் விடாமுயற்சியின் பயனாக மனிதர்களின் குடற் பகுதியில் வாசம் செய்யும், ஈ. கோலை ( ஈஷ்சீரியா கோலை)என்று அழைக்கப்படும் அனரோபிக் பாக்டீரியத்தின் 207 மரபணுக்களை செயற்கையாக உருவாக்கி, 1976ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம்...அந்த மரபணுக்களை இயற்கை மரபணுக்கள் போல செயல்பட வைத்த நிகழ்வு உலகப் புகழ் பெற்றது.

டாக்டர் குரானா பெற்ற பிற விருதுகள் :

1. 1968 - ஹாவாயில், ஹோனலூலுவின் "சிறப்பு மிக்கச் சேவைக்கான விருது".!

2. 1969ஆம் ஆண்டு இவருக்கு, மைய அரசின் 2ம் சிவிலியன் விருதான  பத்மபூஷண்.!

3. 1971‍ல் அமெரிக்கன் அச்சீவ்மெண்ட் அவார்ட்...பிலடெல்பியா பலகலைக் கழகம் .!

4. 1972‍ல் கல்கத்தா...போஸ் நிறுவனம் 'ஜே.சி. போஸ்' பதக்கம்.!

5. 1973-74 ஆண்டுக்கான அமெரிக்க வேதியல் பிரிவின் வில்லர்ட் கிப்ஸ் பதக்கம்.!

6. தொடர்ந்து'கெய்ர்ட்னர் அமைப்பு அனைத்துலக விருது', 'லூயிசா குரோஸ் ஹார்விட்சு பரிசு' ,'ஆல்பர்ட் லாஸ்கரின் அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான விருது' முதலிய விருதுகளையும் டாக்டர் குரானா பெற்றுள்ளார்.!

அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம், ரஷ்யாவின் அறிவியல் கழக அயல் நாட்டு உறுப்பினர், ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினர் போன்ற பதவிகள் மட்டுமன்றி இந்திய வேதியல் கழகத்தில் கௌரவ ஆய்வு உறுப்பினர் என்ற பதவியினையும் வகித்தார் டாக்டர் குரானா அவர்கள்.!

 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் நாள் தனது 89ம் வயதில் முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.