வெள்ளி, 19 ஜூலை, 2019

EMIS - மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தவறான தகவல் - சரியான தகவல் இல்லையெனில் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு



மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க நெறிமுறைகள்_பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை நாள் 17.07.2019






அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 - மார்ச் / ஏப்ரல் 2020, இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் - தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாட்கள் குறித்த செய்திகுறிப்பு வெளியிடக்கோருதல் - சார்பு...

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் LKGயில் மட்டும் 200 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அந்த LKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து 15ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்...



சந்திராயன்-2 விண்கலம் 22ம் தேதி விண்ணில் பாய்கிறது ~ விஞ்ஞானிகள் தகவல்…

வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் படம், வீடியோ பாதுகாப்பானதா?

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ~ விண்ணப்பப் படிவம்...

தமிழ் மொழியை மொழி பாடமாக, பயிலாத ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்விஇயக்குனர் செயல்முறை



*🔥பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை*

*🔥பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை*

*இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை ஜூலை 24ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் பேர் வரை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.*

*இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.*

*இந்நிலையில் மாணவர்கள் விவரங்களை கல்வியியல் மேலான்மை தகவல் மையம்(எஜூகேசன் மேனேஜ்மன்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்-இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சில பள்ளிகளில் ஆய்வு செய்தபோது, இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மாணவர்கள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்யாதது தெரியவந்துள்ளது.*

*அதனால் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் ஜூலை 24ம் தேதிக்குள் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும், இஎம்ஐஎஸ்ஸில் குறிப்பிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தில் வேறுபாடு இருக்கக்கூடாது. இஎம்ஐஎசில் உள்ள மாணவர் சேர்க்கை விவரத்தை வகுப்பு வாரியாக விவரத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் இ-மெயில் முகவரிக்கு ஜூலை 24ம் தேதி மாலை 4 மணிக்குள் அனுப்ப வேண்டும்.*

*இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 25ம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இணை இயக்குனர்கள் வர உள்ளனர். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.*

EMIS இணையதளத்தில் மாணவர்கள் விவரங்கள் முழுமையாக உள்ளீடு செய்யப்பட்டமைக்கான சான்று...

பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் - EMIS - மாணவர்களின் சேர்க்கை விபரம் EMIS இணையதளத்தில் வேறுபடுதல் - சரிசெய்ய தெரிவித்தல் - சார்பு...