வியாழன், 24 மே, 2018
ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்புக் குழு ~ தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும் இன்று (24.05.2018) நாமக்கல் பூங்கா சாலையில் பிற்பகல் 05.00 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்...
அன்பானவர்களே!வணக்கம்.
ஜாக்டோ-ஜியோவின்
மாநில ஒருங்கிணைப்புக்
குழு தூத்துக்குடி படுகொலைகளைக்
கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும்
இன்று (24.05.2018) மாவட்டத்தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும்,
ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பாவலர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் மாநிலத்தலைவர் அவர்கள் அலைபேசியில் அழைத்து இவ்வார்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ நாமக்கல்
பூங்கா சாலையில் இன்று(24.05.18)
பிற்பகல் 05.00மணிக்கு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.
இதனடிப்படையில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாளர்கள், ஆசிரியர் மன்ற முன்னோடிகள்,
ஆசிரியர்மன்ற ஆசிரியப்
பெருமக்கள் இன்றைய (24.05.18)பிற்பகல்
05.00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாய்
ஒன்று கூடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
~முருகசெல்வராசன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)