செவ்வாய், 31 ஜனவரி, 2023

புதன், 25 ஜனவரி, 2023

பள்ளிக்கல்வி - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 05.01.2023



 

பள்ளிக்கல்வி - NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்18.01.2023


 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கபிலர்மலை ஒன்றியம் (கிளை) 2022- 2023 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை நாள் : 23.01.2023 & 24.01.2023

 





திங்கள், 23 ஜனவரி, 2023

12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ‘தமிழைத் தேடி’ பயணம் ~ ராமதாஸ் அறிவிப்பு....


12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"உலகின் மூத்த மொழியான தமிழின் இனிமை, பழமை, பெருமைகள், சிறப்புகள் ஆகியவை குறித்து மகிழ்ச்சி அடைய ஏராளமான செய்திகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இன்று தமிழின் இருப்பு எவ்வாறு உள்ளது? என்பதை நினைக்கும் போது தான் பெரும் கவலையும், வருத்தமும் வாட்டுகின்றன.

தமிழ்நாட்டில்
 ‘எங்கும் தமிழ்... 
எதிலும் தமிழ்’ 
என்பது தான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும் ஆகும். 

ஆனால், தமிழ்நாட்டில் ‘எங்கே தமிழ்?’ என்பது தான் எதார்த்தம். தமிழில் பிறமொழிச் சொற்களின் கலப்பு, வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிற மொழிகளில் எழுதப்படுதல், அரசு நிர்வாகத்திலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழுக்கு உரிய இடம் மறுக்கப்படுவது போன்றவை காலம் காலமாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

ஆனால், அனைத்து இடங்களிலும் தமிழை நிலை நிறுத்த சட்டங்கள் இயற்றியும் கூட நிலைமை மாறாதது வலியை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தமிழைக் கட்டாயப்பாடமாக்க சட்டம் இயற்றி 16 ஆண்டுகள் ஆகியும் கூட தமிழ் இன்னும் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தவிர பிற பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று 18.09.2014-ஆம் நாளில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு
 8 ஆண்டுகள் நிறைவடைந்தும் அந்த பள்ளிகளிலும் இன்னும் தமிழ் இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் தான் கட்டாயப் பயிற்றுமொழி என்று 23 ஆண்டுகளுக்கு முன் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் கூட தமிழ் இன்னும் பயிற்றுமொழி ஆகவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட தமிழ் இன்னும் உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆகவில்லை. 1956-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாடு அரசின் அரசாணைகளில் முழுமையாக தமிழ் இல்லை.

ஆலயங்களில் தமிழ் ஒற்றை வழிபாட்டு மொழியாகவில்லை. சமஸ்கிருதத்தில் மட்டும் தான் வழிபாடு நடத்தப்படுகிறது. சில ஆலயங்களில் மட்டும் வலியுறுத்திக் கேட்டால் கூடுதலாக தமிழில் வழிபாடு செய்யப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக 1983-ஆம் ஆண்டு முதல் 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும் கூட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு உரிய இடம் இல்லை.

அன்றாட வாழ்வில் தமிழ் இல்லை. பெரும்பான்மையான வீடுகளில் அம்மா, அப்பா என்ற சொற்களே புழக்கத்தில் இல்லை. மம்மி, டாடி மட்டும் தான் புழக்கத்தில் உள்ளன. தமிழ் இசைக்கு இடமில்லை; அதை வளர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் வேகம் பெறவில்லை. உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் ஏற்படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் தமிழின் இன்றைய நிலைக்கு ஏதேனும் ஒரு தரப்பை மட்டுமே குறை கூறுவதில் பயன் இல்லை. அடித்தட்டு மக்களில் தொடங்கி அரசு வரை அனைவரும் இந்த அவல நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழ் மொழியில் பேச வேண்டும்; தமிழில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழராய் பிறந்த அனைவருக்கும் ஏற்பட வேண்டும். 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் தான் காரணம் என்பதால், தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டை ஆளும் அரசுகள் நினைக்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டில் அன்னை தமிழுக்கு உரிய மரியாதை கிடைக்கும். இது தான் மறுக்க முடியாத உண்மை.

இருளை பழிப்பதை விட விளக்கை ஏற்றுவது தான் சிறந்த செயல். அதனால் தான் தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக போராடி வருகிறேன். கடந்த 2004-ஆம் ஆண்டில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி தமிழ் வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் மேற்கொண்டேன். ஆனால், தமிழுக்கு இன்னும் உரிய இடமும், மரியாதையும் வழங்கப்படாத நிலையில், மீண்டும் இயக்கம் நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடங்கும் இந்த பரப்புரை பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வரும் பிப்ரவரி 28-ம் நாள் நிறைவடையும். தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வித்துறை, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சனி, 21 ஜனவரி, 2023

Income tax sheet Financial year 2022-2023

https://docs.google.com/spreadsheets/d/1oW0BxcAdYjf_ZWvDiKSSkR30vrgrFx5P/edit?usp=drivesdk&ouid=108307440687463556003&rtpof=true&sd=true

பள்ளிக்கல்வித்துறை - அலுவலக உதவியாளர்கள் பணிமாறுதல் - தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள் 20.01.2023

click here....
 https://drive.google.com/file/d/1oCFLs369KPNBmmXAYVlWHfYT77h84S__/view?usp=drivesdk

பள்ளிக்கல்வி - துறை தணிக்கை- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள்!


 

School Education - Temporary Posts - Continuation Orders from 01.01.2023 awaited from Government - Certificate for a Period of 3 months from 01.01.2023 Issued - Regarding...


 

GPF ல் உள்ளவர்கள் ஓய்வு பெறும்போது பின்பற்ற வேண்டிய IFHRMS வழிமுறைகள்...












 

SMC கூட்டத் தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தில் விவாதித்தல் சார்ந்து SPD Proceedings 20.01.2023



 

வியாழன், 19 ஜனவரி, 2023

தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச்செயலாளர்களின் ஒதுக்கப்பட்ட துறைகள் சார்ந்த ஆணை 14.01.2023



 

உலக ஈரநிலங்கள் நாள் விழா - நாமக்கல் மாவட்ட அனைத்துவிதமான பள்ளிகளிலும் பேச்சுப்போட்டி நடத்துதல் சார்ந்து CEO Proceedings




 

G.o.No 15/18.01.2023 - GPF ஆண்டு சந்தாதொகையை 5இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!




 

நாமக்கல் மாவட்டத்தின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி அனைத்து வகை ஆசிரியர்களின் விடுப்பு விபரங்களை வட்டாரக்கல்வி அலுவலர்கள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!

 





TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விடுப்பை பதிவேற்றம் செய்வது பற்றிய விளக்கம்...


1) முதலில் TNSED App - individual login செய்யவும்

2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.

3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்

4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்

5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்

6) பிறகு "compensatory leave" என்ற option வரும்.அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff),எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்

7)  EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.

8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்

5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்

10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள்

15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்

20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள்

ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.

உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.

180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.

9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள்  எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.

10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!

குறிப்பு :

தற்போதுவரை இந்த வசதி அப்டேட் செய்யப்படவில்லை. அப்டேட் ஆனவுடன் பதிவு செய்யவும்.