செவ்வாய், 7 ஜனவரி, 2020
தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழி தமிழே! இந்தி மொழித் திணிப்புகளை கைவிடுக! தமிழ்நாடு் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழி தமிழே!
இந்தி மொழித் திணிப்புகளை கைவிடுக!
தமிழ்நாடு் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் வேண்டுகோள்!
அன்பானவர்களே! வணக்கம்.
தேசியஅளவிலான பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் மேம்பாட்டுக்கான முன்னெடுப்புப் பயிற்சி(NISHTHA) நாமக்கல் , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு)யில் 07.01.2020 முதல் 5நாள்களுக்கு நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சற்றொப்ப 200 ஆசிரியப் பெருமக்கள் நாமகிரிப்பேட்டை, இராசிபுரம், வெண்ணந்தூர், எலச்சிப்பாளையம் , பரமத்தி மற்றும் எருமப்பட்டி ஒன்றியங்களில் இருந்து பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அலைச்சல் இன் றி , அலைக்கழிப்பு இன்றி அந்தந்த ஒன்றியங்களிலேயே பயிற்சி தருவதற்க்கு என்றே வட்டாரவள மையங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் ,ஏற்கனவே வளமையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஆசிரியர்களை அன்றாடம் சென்று வர 100கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்யவைத்து , ஒரு வாரத்தில் 500கிலோமீட்டருக்கு மேல் அலைக்கழிப்புச் செய்து காலை ,மதிய உணவுகளுக்கு சிரமங்களை உருவாக்கி பயிற்சி தரப்படுகிறது. இது போன்ற எல்லா விதமான பணியிடைப் பயிற்சிகளையும் அந்தந்த வட்டார வளமையங்களிலேயே நடத்திடுவதற்கு ஆவன செய்வது தான் பயிற்சிக்கு இலக்கணமாகும்: அழகாகும். இக்கோரிக்கையை கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டுள்ள ஆசிரியர்களை அவர்களது அலைபேசியைக் கொண்டு online test( pre traning survey-tamilnadu )செய்திடச் சொல்கின்றனர். இதில் உள்ள 40 வினாக்களும் ஆங்கிலத்திலேயே உள்ளது. இவ்வினாக்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புச்செய்து தமிழில் விடையை தேர்வு செய்திடும் வாய்ப்பு அறவே இல்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாகவும் மாநிலத்தின் பயிற்றுமொழியான தமிழ் மொழி , அல்லது வட்டார மொழி முற்றிலுமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த 40கேள்விகளில் ஒரு கேள்வி், அதாவது 22வது கேள்வி இந்தியில் தரப்பட்டுள்ளது. இந்த இந்திக்கேள்வியையும் தமிழில் மொழிபெயர்த்து விடையைத் தேர்வுசெய்திடும் வாய்ப்பு தரப்படவில்லை. இந்தியில் உள்ள கேள்வி என்ன வென்றே தெரியாத நிலைக்காணப்பட்டாலும் , அக்கேள்விக்குரிய விடையைத் தெரிவுச்செய்திட பணிப்பது கொடூரமான நடவடிக்கையாகும். இத்தகு இந்தித்திணிப்பை அவ்வளவு இலேசாக கடந்துவிட இயலாது என்பதுமட்டுமல்ல கடந்துவிடக்கூடாது என்பதே வேண்டுகோளாகும்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக் கான பயிற்சியின் online test இல் தமிழை முற்றாக புறக்கணித்திருப்பதும், இந்தியை போகிறபோக்கில் வினாக்களின் வழியில் வலிய திணிக்கப்பட்டு உள்ளதற்கு உடந்தையாக உள்ளதும்
கடும் கண்டனத்திற்குரியதாகும் .
அகில இந்தியத் தேர்வுகளில் , மாநிலத்தேர்வுகளில் எல்லாம் தமிழுக்கு உரிய இடம் கேட்டு போராடுவது போன்று தமிழ்நாட்டுக் கல்வியில் தமிழ்மொழிக்கு முதன்மையும், முக்கியத்துவமும் வலியுறுத்தியும் , தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழியாக
தமிழ் மொழியே இருந்திடல் வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் களம் காணுதல் தான் தாய்த்தமிழ்மொழிக்கு ஆற்றும் மிகச்சிறந்த தொண்டாகும் என்று பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
-முருகசெல்வராசன்,
மாநிலச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்.
நாமக்கல்மாவட்டம்.

ஜனவரி 7,
வரலாற்றில் இன்று.
எழுத்தாளர் லட்சுமி நினைவு தினம் இன்று.
லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.
லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.
தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.

அணுகுண்டு நோய் கொன்ற சிறுமி சடோகோ சசாகி பிறந்த தினம் இன்று(1943).
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளை வீசியது.
.1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9இல் அணுகுண்டுகளை வீசியது. இந்த கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள்.
அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் . ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயது.
ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறியப்பட்டாள் சசாகி.
பதறிப்போன அவளது அம்மா ஓடிச்சென்று பார்த்தபோது சசாகி உயிருடன்தான் இருந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினார் அவளது அம்மா. மொத்த நகரமும் அழிந்துபோனதால் அருகில் இருந்த மியோஷி நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கினார். அதன்பின்னர் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமான வளர்ந்தாள் சசாகி.
சடாகோ சசாகிக்கு 11 வயதானபோது கழுத்திலும், காதின் பின்புறத்திலும் வீக்கங்கள் ஏற்பட்டன. சில மாதங்களிலேயே இவளது கால்களில் ஊதா நிறப் புள்ளிகள் ஏற்பட்டன. இவளுக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவளது அம்மாவோ இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் சசாகி.சடாகொவின் குடும்பம் ஏழ்மையால் மட்டுமே நிரம்பியிருந்தது. குழந்தையை காப்பாற்ற முடியுமென்று தோன்றவில்லை. சடாகோவிடம் விஷயத்தை மென்று விழுங்கி சொன்னார்கள்.
சடாகோவின் தோழி சிஜுகோ பார்க்க வந்தாள். அவளிடம் அன்பும் கூடவே ஜப்பானிய நம்பிக்கை ஒன்றும் சேர்ந்து வந்திருந்தன. ஆயிரம் கொக்குகளை ஒரிகாமி முறையில் செய்து முடித்தால் கடவுள் நினைப்பதை தருவார் என்கிற நம்பிக்கை தான் அது.
சடாகோவுக்கும் தான் பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை பொங்கியது. இருக்கிற தாள்கள் எல்லாம் தீர்ந்து போனபின் மருந்து தாள்களில் கூட நம்பிக்கை மாறாமல் கொக்குகளை அவள் உருவாக்கினாள்.644 கொக்குப் பொம்மைகளை அவள் கைப்பட செய்தாள்.
இன்னமும் 356 கொக்குகள் முடிக்கப்படும் முன்னரே பன்னிரெண்டு வயதில் 1955 ஆம் ஆண்டு ரத்தப் புற்றுநோய்க்கு பலியானாள் சசாகி.
பின்னர் இவளது பள்ளி நண்பர்கள் இணைந்து 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் இவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன.
இவளது நினைவாக 1958இல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் தங்கக் கொக்கை சுமந்து நிற்கும் சடாகோவின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்
இதுதான் எங்கள் கூப்பாடு,
இதுதான் எங்கள் பிரார்த்தனை
உலகில் அமைதி வேண்டும்.
வருடாவருடம் எண்ணற்றோர் இவளின் நினைவிடத்தில் அணுகுண்டு வீசப்பட்ட தினத்தன்று கூடி ஆயிரம் கொக்குகளை செய்து வருகிறார்கள்.

1927ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து (3500 கி.மீ) முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது. அமெரிக்க தபால் மற்றும் தந்தி சேவையின் தலைவர் வால்டர் கிப்போர்ட் என்பவருக்கும், பிரிட்டிஷ் தபால் தந்தி நிறுவனத்தின் போஸ்ட்மாஸ்டர் ஜெனெரல் ஏவேலின் முர்ரே என்பவருக்கும் இடையில் அந்த பேச்சுப்பரிமாற்றம் நிகழ்ந்த தினம் இன்று.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)