செவ்வாய், 15 மார்ச், 2022
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பொறுப்பாளர்கள் வட்டாரக்கல்வி அலுவலர் சந்திப்பு!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியப்
பொறுப்பாளர்கள் வட்டாரக்கல்வி அலுவலர் சந்திப்பு!
++++++++++++++++++++
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பொறுப்பாளர்கள் நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.செல்வி அவர்களை 12.03.2022 அன்று பிற்பகல் 05.00 மணியளவில் சீராப்பள்ளி வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில்
ஒன்றியப் பொறுப்பாளன்கள் 11.03.2022 ஆம் நாளைய ஒன்றியச்செயற்குழுக்கூட்டத் தீர்மானங்களை படைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திடுமாறு வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் விரைந்து நிறைவேற்றித்தந்து ஆசிரியர் நலன்களை காப்பதாக நம்பிக்கைத் தந்தார்கள்.
நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலருடான சந்திப்பு. இணக்கமான -சுமூகமான வகையில் ஒன்றிய ஆசிரியர்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்திருந்திருந்தது.