வெள்ளி, 24 நவம்பர், 2017

ஜேக்டோ-ஜியோ போராட்டம் பாவலர் அவர்களின் அறிக்கை


பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த சேலத்தில் இணையவழி பண்பலை தொடக்கம்...


தமிழகத்தில் முதல்முறையாக, பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர், மாணவர்களின் திறனை ஊக்குவிக்க சேலத்தில் இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் உத்தமசோழபுரத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில், இணையவழி பண்பலை கல்வி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பண்பலை சேவையை, மாநில கல்வியியல் ஆரா ய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பொன்.குமார் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். தொழில்நுட்ப பிரிவு துறைத்தலைவர் விஜயலட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார். இணையதளத்தில் மாங்கனி பண்பலை அல்லது டயட்(DIET) சேலம் என்ற தளத்தில் மூலம் நிகழ்ச்சிகளை கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பண்பலை சேவையை தொடங்கி வைத்து இணை இயக்குநர் பொன்.குமார் கூறியது:தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி செய்திகள், கற்றல் கற்பித்தலின் தற்போதய முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திற்கு இணையான செய்திகள், பாடல்கள், கதைகள் மற்றும் சொற்பொழிவுகளை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பாடும் திறன், கதை கூறும் திறன், புதிர்கள், நாடகங்கள், பாடக்கருத்துகளை வழங்கும் விதம் ஆகியவை மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தைவளர்த்துக்கொள்ள முடியும். மேலும், கற்றலில் ஏற்படும் சந்தேகங்கள், தெளிவுரைகளையும் போக்கும் வகைகள் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும்.

முதற்கட்டமாக, இந்த ஒலிபரப்பு சேவையை தினமும் அரை மணி நேரம் பள்ளி இடை வேளை நேரத்தில் கல்வி தொடர்பான தகவல்கள் இந்த பண்பலை மூலம் ஒலிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சிகளை மேம்படுத்தி முழுநேரமாகவும், உடனுக்குடன் தகவல்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.  

Income Tax Slab in 2017-18 For Individual Tax Payers