ஞாயிறு, 25 நவம்பர், 2018

பள்ளி மாணவர்களிடம் அதிகம் பேசுங்கள் -- அவர்கள் அறிவுதிறன் கூடும்

குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி
குழந்தைகளின் மூளைத் திறனை வளர்க்க, கல்வி தொடர்பான ‘டிவிடி’ க்களை போட்டு அதன் முன், அவர்களை அமர்த்தும் ஆசிரியரா? பெற்றோரா? இதை கவனமாக படிங்க… இவ்வாறான மூளைத் திறன் மேம்பாட்டு திட்டங்களால், குழந்தைகளின் மொழி அறிவு வளர்ச்சியடையாது என, ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கல்வி தொடர்பான ‘டிவிடி’க்களை பார்க்கும் குழந்தைகளை விட, மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை ‘டிவி’ போன்றவற்றை பார்க்க வைப்பதை விட, அவர்களுடன் பேசி மகிழலாம்.

குட்டித் தூக்கத்தால் மூளை ஸ்மார்ட்
பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுவதால், மூளை மற்றும் அதன் தகவல் கிரகிக்கும் திறன் ஆகியவை புத்துயிர் பெறுகிறது. இதுகுறித்த ஆய்வில், பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுபவர்களை விட, தூங்காதவர்களிடம் கற்றல் திறன் 10 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாபக திறன் தொடர்பான நடைமுறைகளில், தூக்கம் முக்கிய பங்கு வகிப்பது தான் இதற்கான காரணம். படித்த பின் தூங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஆனால், தூங்கி எழுந்த பின் ஒன்றை கற்றுக் கொண்டால், அது தொடர்பான தகவல்கள், மூளையில் எளிதாக பதியும்.

தாய்மொழியில் குழந்தைகளை படிக்க வைப்பதால்  கற்பனைதிறன், கலைநயம்,சிந்தனைவளம் போன்றவை கிடைக்கின்றன.

தாத்தா பாட்டிகள் கதைகளை கூறக்கேட்ட குழந்தைகள் தனிதிறனுடன் இருப்பதை காணலாம். இதில் தாய்மொழியும்,குழந்தைகளுடன் கலந்துபேசுதல்களும் ஏற்படுவதால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

📱தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்டம்~Mobile App...

முதுநிலை படிப்பு படிக்கும் பெண்ணுக்கு மத்திய அரசு கல்விஉதவிதொகை விண்ணப்ப தேதி 30-11-2018


பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப உத்தரவு




 பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பிளஸ்2 மாணவர்கள் விவரங்களை ஏற்கனவே அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தங்கள் தேர்வு மையத்தில் மார்ச் 2019ம் தேர்வு எழுத்தவுள்ள பிளஸ்2 மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வுஅறைகள் தொடர்பான விவரங்கள் அதற்கான உரிய படிவத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இதுநாள் வரை ஒப்படைக்கப்படாதது வருந்தத்தக்க செயலாகும். 
இனி காலம் தாழ்த்தாமல் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மெத்தனபோக்கை தவிர்க்க வேண்டும். உடனடியாக துரிதமாக செயல்பட்டு விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் தேர்வு எழுதும் நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகளை ஒதுக்கீடு செய்வதற்காக பெறப்படுகிறது. இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் அரசு பள்ளிகள்


ஈரோடு:  கணினி அறிவியல் பாடத்தில் தமிழக அரசு பள்ளிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் தற்போது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய  பாடங்கள் உள்ளன. இதே பாடப்பிரிவுகள்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் உள்ளது. மேல்நிலை பள்ளிகளில் அதாவது பிளஸ் 1 வகுப்பு சேரும்போது மட்டுமே கம்ப்யூட்டர் தொடர்பாக படிக்க கம்ப்யூட்டர் சயின்ஸ்  என்ற தனி குரூப் உள்ளது. 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்த அறிமுகம் இணைப்பு பாடமாக மட்டுமே உள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் கணினி பயன்பாடு இல்லாத இடங்களே  இல்லை. ஆனாலும், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் எட்டாக்கனியாகவே உள்ளது. எல்லா மாணவர்களும் கணினி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கில், கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம்  கொண்டுவரப்பட்டது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, கணினி அறிவியல் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு அரசியல்  காரணங்களுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தில் இருந்து கணினி அறிவியல் பாடத்தை எவ்வித காரணமும் இன்றி நீக்கிவிட்டது. இதனால் பல லட்சம் செலவிட்டு அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் குப்பையில்  வீசப்பட்டன. அதேசமயம், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஒரு தனிப்பாடமாக உள்ளது. அண்டை மாநிலம் மற்றும் தனியார்  பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கணினி அறிவு இல்லாமலேயே தங்களது பள்ளிக்கல்வியை தொடர்கின்றனர். கணினி குறித்த அடிப்படை அறிவுகூட இவர்களுக்கு  புகட்டப்படவில்லை. கணினி பற்றிய தகவல் தெரியவேண்டுமானால், மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே தெரிந்துகொள்ளவேண்டிய நிலை உள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்க செய்யும் செயலாகவே உள்ளது  என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


அலுவலக உபகரணங்களை பெறுவதற்கு - தனியார் பள்ளிகளை நாடும் மாவட்ட கல்வி அலுவலர்கள் - அரசு நிதி ஒதுக்காததால் அவலம்


பள்ளிக்கல்விதுறை- ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் இரு/நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு முன்பணம் கோருதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பெண் குழந்தைகளுக்கான தற்காப்புப் பயிற்சி (Self defence Training for Girls) பள்ளி அளவில் வழங்குவதல் மாவட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பாக...

ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு?

இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. 

முன்பெல்லாம் உறவினருக்கோ, நண்பர்களுக்கோ அல்லது தமக்கே தேவை என்றாலும் ஒரு அக்கவுண்ட்லிருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப நிறைய மெனக்கெட வேண்டும்.

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை
வங்கிகளுக்கு நேரில் சென்று பணத்தை பிரித்து அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அந்த தொல்லை இப்போது இல்லை. இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.

இதில், ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளும் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சரி நீங்கள் இந்த ஆப்ஷன்களில் பணத்தை அனுப்பும் போது, வங்கிகள் உங்களிடம் எவ்வளவு கட்டணம் வசூல் செய்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

எஸ்பிஐ வங்கி:

எஸ்பிஐ வங்கியில்  10 ஆயிரம் ரூபாய் வரையிலான நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்கு எஸ்.பி.ஐ 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது. 

10,000 முதல் 1 லட்சம் வரை 2 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டண தொகையை வசூல் செய்கிறது.

2 -5 லட்சம் ரூபாய் வரையிலான ஆர்.டி.ஜி.எஸ் பர்வர்த்தனைகளில்,5 ரூபாயும், அதற்கு மேல் 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  

1000 ரூபாய் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:

10 ஆயிரம் ரூபாய் வரை நெஃப்ட் பரிவர்த்தனை செய்ய 2.5 ரூபாய் + ஜி.எஸ். டி கட்டணம். 

10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணப்பரிவர்த்தனைக்கு  15 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம், அதற்கு மேல், 10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆர்.டி.ஜி.எஸ் பொருத்தவரை 25+ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

5-10 லட்சம் வரை 50 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.

ஒரு லட்சம் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுகிறது. 

ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை 15 ரூபாயும், ஜி.எஸ்.டியும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.