ஞாயிறு, 25 நவம்பர், 2018

பள்ளி மாணவர்களிடம் அதிகம் பேசுங்கள் -- அவர்கள் அறிவுதிறன் கூடும்

குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி
குழந்தைகளின் மூளைத் திறனை வளர்க்க, கல்வி தொடர்பான ‘டிவிடி’ க்களை போட்டு அதன் முன், அவர்களை அமர்த்தும் ஆசிரியரா? பெற்றோரா? இதை கவனமாக படிங்க… இவ்வாறான மூளைத் திறன் மேம்பாட்டு திட்டங்களால், குழந்தைகளின் மொழி அறிவு வளர்ச்சியடையாது என, ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கல்வி தொடர்பான ‘டிவிடி’க்களை பார்க்கும் குழந்தைகளை விட, மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை ‘டிவி’ போன்றவற்றை பார்க்க வைப்பதை விட, அவர்களுடன் பேசி மகிழலாம்.

குட்டித் தூக்கத்தால் மூளை ஸ்மார்ட்
பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுவதால், மூளை மற்றும் அதன் தகவல் கிரகிக்கும் திறன் ஆகியவை புத்துயிர் பெறுகிறது. இதுகுறித்த ஆய்வில், பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுபவர்களை விட, தூங்காதவர்களிடம் கற்றல் திறன் 10 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாபக திறன் தொடர்பான நடைமுறைகளில், தூக்கம் முக்கிய பங்கு வகிப்பது தான் இதற்கான காரணம். படித்த பின் தூங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஆனால், தூங்கி எழுந்த பின் ஒன்றை கற்றுக் கொண்டால், அது தொடர்பான தகவல்கள், மூளையில் எளிதாக பதியும்.

தாய்மொழியில் குழந்தைகளை படிக்க வைப்பதால்  கற்பனைதிறன், கலைநயம்,சிந்தனைவளம் போன்றவை கிடைக்கின்றன.

தாத்தா பாட்டிகள் கதைகளை கூறக்கேட்ட குழந்தைகள் தனிதிறனுடன் இருப்பதை காணலாம். இதில் தாய்மொழியும்,குழந்தைகளுடன் கலந்துபேசுதல்களும் ஏற்படுவதால் சிறப்பாக செயல்பட முடிகிறது.