செவ்வாய், 24 நவம்பர், 2020

கொரோனா சோதனைக்கான கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே சீராக 400 ரூபாய்க்கு ஏன் மேற்கொள்ளக் கூடாது?உச்சநீதி மன்றம் வினா!

கொரோனா சோதனைக்கு நாடு முழுவதும் ரூ.400 வசூலித்தால் என்ன? - மத்திய அரசுக்கு  கேள்வி!
-------------------------------------------
கொரோனா - பரிசோதனைக்கான கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே சீராக 400 ரூபாய்க்கு ஏன் மேற்கொள்ளக் கூடாது?
உச்சநீதி மன்றம் வினா!

கொரோனா தொற்று இருப்பதை துல்லியமாக கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளிலும், ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் இந்த கட்டண நிர்ணயம் மாநிலங்களுக்கு மாநிலமும், மாநிலங்களுக்குள்ளும் மாறுபடுகிறது. இதனால் மக்கள் மேன்மேலும் அவதியுற்று வருகின்றனர்.

இப்படி இருக்கையில், இந்திய முழுவதும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை 400 ரூபாயில் செய்ய உத்தரவிடக் கோரிய மனு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கொரோனா பரிசோதனைகள் வெறும் 200 ரூபாயில் செய்து முடிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு ஏற்றது போல கட்டணம் நிர்ணயம் செய்யதுள்ளனர்.

எனவே இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் அஜய் அகர்வால் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

*🌊⚡தமிழகம் முழுவதும் 25.11.2020 அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை எண்.596 நாள்:24.11.2020 வெளியீடு.*

*🌊⚡தமிழகம் முழுவதும் 25.11.2020 அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை எண்.596 நாள்:24.11.2020 வெளியீடு.*

*🌸26.11.2020 அன்று அனைத்து இந்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்புடன் வேலைநிறுத்தம் நடைபெறுவது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌸26.11.2020 அன்று அனைத்து இந்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்புடன் வேலைநிறுத்தம் நடைபெறுவது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🏥மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் -பணியாளர்களின் குறைதீர்வு நடைமுறை தகவல் அனுப்பக் கோருதல் தொடர்பான மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக செயல்முறைகள்*

*🏥மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் -பணியாளர்களின் குறைதீர்வு நடைமுறை தகவல் அனுப்பக் கோருதல் தொடர்பான மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக செயல்முறைகள்*

நிவர் புயலின் நேரலை...

click here...

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை ~ விண்ணப்பிக்க அழைப்பு…