வெள்ளி, 30 நவம்பர், 2018

Changes in Income Tax Rules...


1. No Change in Income Tax Slabs

2. 1% additional health cess taking total cess on income tax to 4% (2% education cess & 1% higher education cess continues). This will marginally increase income tax for every tax payer.

3. Standard Deduction of Rs 40,000 to Salaried and Pensioners. However transport allowance (Rs 19,200 per annum) and medical reimbursement of Rs 15,000 has been abolished. So the net benefit for salaried would be Rs 5,800 only bringing marginal relief. However Pensioners would gain as they did not have transport & medical allowance.

4. 10% Long Term Capital Gains Tax on Equity and Equity based Mutual Funds introduced.

5. Medical Insurance premium exemption for senior citizen increased from Rs 30,000 to Rs 50,000 u/s 80D

6. Medical expenses will see increased tax benefits for senior citizens. 100,000 on critical illness u/s 80DDB

7. Rs 50,000 exemption for interest income from Bank or Post Office Fixed/Recurring Deposits for Senior Citizens

டிசம்பர் 3 _உலக ஊனமுற்றோர் தினம் அன்று தகுதியுடையோர் ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி..



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்ப பயிற்சி

 விருதுநகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் ரோபோடிக் ப்ரோகிரமிங் தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அமைப்பு சார்பாக கிராமப்புற மாணவர்கள் ரோபோட்டிக் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வருங்காலத்தில் ரோபோட்டிக் எனப்படும் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்த செயல் விளக்கம் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதல்முறை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் வெளிநாடு மற்றும் நகரங்களில் இருக்கும் மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த திறன் கிராமப்புற மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் ரோபோட்டிக் மற்றும் அதன் டெக்னாலஜி பற்றி விளக்கி கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோக்களை இயக்கி காட்டியும், அதன் செயல்பாடு குறித்தும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சி தங்களுக்கு பயன் உள்ளதாக இருந்ததாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.

நீர்வளநிலவள திட்ட பணிகளுக்காக 2,200 ஏரிகளை தேடும் அதிகாரிகள்: உலக வங்கி கடன் வட்டியாக குட்டிபோடும் சூழல்

பல்வேறு நிதியுதவின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகள் புனரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், நீர்வளநிலவள திட்ட மூன்றாம் கட்ட பணிகளுக்காக 2,200 ஏரிகளை அதிகாரிகள் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள,நிலவள திட்டம் இரண்டாம் பாகம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தன் மூலம் இந்த திட்டத்தின் மூலம், ரூ.2131 கோடி செலவில் 4778 ஏரிகள் மற்றும் 477 அணைகட்டுகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக, ரூ.780 கோடி செலவில் 1,200 ஏரிகள் புனரமைப்பு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 2,200 ஏரிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் இருந்தால், அந்த ஏரிகளை கண்டறிந்து உடனடியாக திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வளநிலவள திட்டத்தின் முதல்பாகத்தில் 5 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.1,513 ஏரிகளும் புனரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டமாக 1511 ஏரிகளுக்கு புனரமைப்பு பணி நடந்து வருகிறது. மூன்றாவது கட்ட பணிகளுக்கான வேலைகளை தொடங்கவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் விருப்ப திட்டம் என்பதால் இப்பணிகளுக்கு பொறியாளர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நீர்வளநிலவள திட்டத்தில் 2,200 ஏரிகளை தேட வேண்டிய நிலையில் பொறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் புனரமைப்பு பணிகள் முடிந்து 2 முதல் 3 ஆண்டுகள் ஆன ஏரிகளில் மீண்டும் புனரமைப்பு பணி மேற்கொள்ளலாமா என்று நீர்வளநிலவள திட்ட இயக்குனரகத்திடம் கேட்டுள்ளது. இந்த நிலையில், நீர்வளநிலவள திட்டத்தின் முதற்பாகத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாத ஏரிகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அனுப்பி வைக்குமாறு நீர்வள நிலவள திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த ஏரிகளில் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ேதவைப்படும் நிலையில், உல வங்கி கடனை வீணாக செலவு செய்து வருகிறது. இதற்கு வட்டிமேல் வட்டி செலுத்தியாக வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


நான்கு ஆண்டில் பட்டப்படிப்புடன் பிஎட் : மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசனை

பிளஸ் 2 முடித்த பிறகு பட்டப்படிப்புடன் கூடிய ஓராண்டு பிஎட் படிப்பை அறிமுகம் செய்ய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசித்து வருகிறது. பிளஸ் 2 படித்து முடித்த பிறகு உயர்நிலைக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் அதிக அளவில் தெரிவு செய்யும் படிப்பு கலை மற்றும் அறிவியல் படிப்புகளைத்தான். பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற விரும்புவோர் 3 ஆண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முடித்து அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் பிஎட் பட்டப்படிப்பு முடிக்க  வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பிஎட் படிப்புகளை நேரடியாக நடத்துகிறது. இதுதவிர மற்ற பல்கலைக்கழகங்களும் பிஎட் பட்டப் படிப்புகளை நடத்துகிறது.


முன்பெல்லாம், இந்த படிப்பு ஓராண்டு கால அளவில் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஎட் படிப்புகள் இரண்டு ஆண்டு காலமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், உயர்கல்விக்கு வருவோர் ஆசிரியராக 5 ஆண்டுகள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கால அளவை குறைக்கும் வகையில் 4 ஆண்டில் பட்டப்படிப்புடன் பிஎட் படிப்பும் படித்து முடிக்கும் வகையில் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பிஎட் பட்டப் படிப்பை அறிமுகம் செய்ய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது. அடுத்த ஆண்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு படிப்பு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஓராண்டு குறையும். 

வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் துணைக்கருவியுடன் செல்லவேண்டும் -CEO உத்தரவு


மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வுத்துறை அலுவலகம்

மாணவர்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை  அலுவலகங்கள் திறக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

 தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கிறது. இதுதவிர 8ம் வகுப்பு தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு என 40 தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் தவிர தனித்தேர்வர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க வசதி இருந்தாலும் சில நேரங்களில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

தேர்வுத்துறை சார்ந்த பணிகளுக்கான பிற மாவட்ட மாணவர்கள் சென்னைக்கும், நீண்ட தொலைவில் உள்ள மணடல  அலுவலகங்களுக்கும் சென்று வருவதை தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறையின் அலுவலகங்களை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அலுவலகங்கள் செயல்படத் தொடங்கும். இந்த அலுவலகங்களுக்கு அதிகாரிகளாக உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள்.


சிபிஎஸ்இ. (CBSE) பள்ளி மாணவர்களுக்கு 22 மொழிகள் கற்றுத் தர உத்தரவு

சிபிஎஸ்இ கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்தும் வகையில், 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ‘பாஷாசங்கம்’(மொழிக்கான சங்கம்) ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அட்டவணை 8ல் சேர்க்கப்பட்டுள்ள 22 மொழிகளை, சிபிஎஸ்இ மாணவ, மாணவியர் அடிப்படை மொழியாக தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். அந்த மொழிகளை  பிரபலப்படுத்துவது, அந்த மொழிகளில் தகவல் தொடர்பு செய்ய குறைந்தபட்சம் 5 வாக்கியங்களை தினமும் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தந்த மாநிலத்தின் கல்வித்துறை செயலாளர்களுக்கு பாஷா சங்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதேபோல, சிபிஎஸ்இ தலைவருக்கும், கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கும் அனுப்பியுள்ளது. இதன்படி மேற்கண்ட இந்திய மொழிகளாகிய 22 மொழிகளையும் தினமும் பள்ளி மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 5 வாக்கியங்கள் கற்றுத் தர வேண்டும். இதுதொடர்பாக ஒரு திட்டத்தை பாஷாசங்கம் வகுத்து கொடுத்துள்ளது. அதன்படி, நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கண்ட மொழிகளை போதிக்க வேண்டும். இந்த மொழிகள் தவிர வேறு இந்திய மொழிகள் குறித்து கற்றுத் தர ஆசிரியர்களிடம் மாணவர்களோ, பொதுமக்களோ, பெற்றோரோ கேட்கும்பட்சத்தில், குறிப்பிட்ட அந்த மொழியில் தேர்ந்த ஆட்களை அழைத்து வந்து பள்ளி இறைவணக்க நேரத்தில் தினமும் 5 வாக்கியங்கள் சொல்லித் தரலாம். அந்த வகையில் மேற்கண்ட திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தேர்வு செய்து, அந்த பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்க உள்ளது.

01.12.2018 அன்று நடைபெற இருந்த தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைக்கானத் தேர்வு (NMMS) 15.12.2018 (சனிக்கிழமை)அன்று நடைபெறும்~அரசுத் தேர்வுகள் இயக்ககம்...

SSA~Attendance App~ To monitor the marking of attendance by the Teachers in Schools - reg...